திருப்புகழ் 875 கடகரிம ருப்பிற்க  (திருச்சத்திமுத்தம்)
Thiruppugazh 875 kadagarimaruppiRka  (thiruchchaththimuththam)
Thiruppugazh - 875 kadagarimaruppiRka - thiruchchaththimuththamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
     தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
          தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான

......... பாடல் .........

கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக
     வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர்
          கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி ...... யணியாலே

கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்
     கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை
          கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனை ...... விலகாது

கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய
     லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு
          கயல்விழிவெ ருட்டித்து ரத்திச்செ விக்குழையின் ...... மிசைதாவுங்

களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு
     கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள்
          கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ ...... தொழியேனோ

அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
     மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்
          அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு ...... மழகோனே

அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
     லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு
          மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு ...... மதிசூரா

விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்
     உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக
          விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு ...... மொருமாயோன்

விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
     நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய
          விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கிப்
பிடித்துப் புடைத்து வளர் கனக குடம் ஒத்துக் கனத்துப்
பெருத்த மணி அணியாலே
... மத யானையின் தந்தம் போல
ஒளியுடன் வெளிப்பட்டு, யாவரும் மிகவும் வியக்கத்தக்க வகையில்
(வேசையரின்) மார்பிடம் முழுவதும் நெருக்கமாக அடைத்துப் பருத்து
வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும், பெரிதாயுள்ள ரத்தின
ஆபரணத்தின் கனம் கொண்டதும்,

கதிர் திகழு செப்பைக் கதிக்கப் பதித்து மகிழ் கமல முகை
பட்சத்து இருத்திப் பொருத்து முலை கமழ் விரை கொள்
செச்சைக் கலப்பைப் பொதித்த அதனை விலகாது
... ஒளி
விளங்கும் சிமிழ் போல நன்றாகத் தோன்றும்படி இன்பம் கொடுக்கும்
தாமரை மொட்டுப் போன்றதும், அன்புடன் பாராட்டப்பட்டு
அமைந்துள்ள மார்பகத்தை நறு மணம் கொண்ட சிவந்த நிறமான
கலவைச் சாந்து, நிரம்பியுள்ள தனத்தை விட்டு நீங்காது.

கடுவை அடுவைப் பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம்
இயற்றிக் குயிற்றிப் புரட்டி வரு கயல் விழி வெருட்டித்
துரத்திச் செவிக் குழையின் மிசை தாவும்
... விஷத்தையும்,
மாவடுவையும் போல் அமைந்து, புருவமான வில்லின் கீழ்ச் சிக்க வைத்த
செயலுக்கு ஒப்ப நின்று, ஒளி வீசிப் புரளுவதாய் மீன் போன்ற கண்களை
விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின் மீது பாய,

களமதனனுக்குச் சயத்தைப் படைத்துலவு கடுமொழி பயிற்ற
அக்களைத்துக் கொடிச்சியர்கள் கணியினில் அகப்பட்டு
அழுத்து அத் துயர்ப் படுவது ஒழியேனோ
... கள்ளத்தனமான
மன்மதனுக்கு வெற்றியைக் கொடுத்து உலவுகின்ற, கடுமையான (விஷம்
போன்ற) சொற்களைப் பேச (அதனால்) சோர்ந்து, அந்தக் கொடி போன்ற
இடை உடைய விலைமாதர் வலையில் சிக்குண்டு அழுத்தப் படுவதால்
நான் துன்புறுவது நீங்க மாட்டேனோ?

அடலை புனை முக்கண் பரற்குப் பொருள் சொல் அரு
மறைதனை உணர்த்திச் செகத்தைப் பெருத்த மயில் அதனை
முன் நடத்திக் கணத்தில் திரித்து வரும் அழகோனே
... சாம்பல்
பூசுகின்ற, (சூரியன் சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடைய
சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சொல்லி அரிய மறைப்
பொருளை உபதேசித்து, பெருத்த மயில் வாகனத்தில் ஏறி முன்பு நடத்தி
உலகத்தை ஒரு கணப்பொழுதினில் சுற்றி வலம் வந்த அழகனே,

அபகடம் உரைத்து அத்த(ம்) மெத்தப் படைத்து உலகில்
எளியரை மருட்டிச் செகத்தில் பிழைக்க எ(ண்)ணும் அசடர்
த(ம்) மனத்தைக் கலக்கித் துணித்து அடரும் அதி சூரா
...
வஞ்சகம் மிக்க மொழிகளைப் பேசி, பொருட் செல்வம் நிரம்ப
உள்ளவர்களாய் உலகிலே எளியவர்களைப் பயமுறுத்தி ஜெகத்தில்
தாம்மட்டுமே பிழைக்க எண்ணுகின்ற முட்டாள்களின் மனதைக் கலக்கி
வெட்டிப் பிளந்து அவர்களை நெருக்கும் அதி சூரனே,

விட அரவு அணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள்
உலவு மலை செப்பைச் செவிக் கண் செறித்து மிக விரைவில்
உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன் விழை
மருக
... நச்சை உடைய (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில்
உறங்கும் கருணா மூர்த்தியான திருமால், யானை (கஜேந்திரன்)
கூச்சலிட்டதை காதில் நன்கு ஏற்றுக் கொண்டு வெகு வேகமாக கருடன்
மேல் சிறக்க அன்புடன் வந்த ஒப்பற்ற திருமால் விரும்பும் மருகனே,

கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறு நெறென வெட்டு
உக்ர சத்தித் தனிப்படைய விடையவர் திரு சத்தி
முத்தத்தினில் குலவு பெருமாளே.
... மாமரமாக கடலில் வந்த
சூரனை நெறுநெறு என்று வெட்டிய வலிமையான வேலாயுதம் என்ற
ஒப்பற்ற படையை உடையவனே, சிவபெருமான் வீற்றிருக்கும்
திருச்சத்திமுத்தம்* என்னும் தலத்தில் விளங்கும் பெருமாளே.


* திருச்சத்திமுத்தம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1127  pg 2.1128  pg 2.1129  pg 2.1130  pg 2.1131  pg 2.1132 
 WIKI_urai Song number: 879 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 875 - kadagarima ruppiRka (thiruchchaththimuththam)

thanathanana thaththaththa thaththaththa thaththathana
     thanathanana thaththaththa thaththaththa thaththathana
          thanathanana thaththaththa thaththaththa thaththathana ...... thanathAna

......... Song .........

kadakarima ruppiRka thirththupra mikkamika
     vuramidane rukkippi diththuppu daiththuvaLar
          kanakakuda moththukka naththuppe ruththamaNi ...... yaNiyAlE

kathirthikazhu seppaikka thikkappa thiththumakizh
     kamalamukai patchaththi ruththippo ruththumulai
          kamazhviraikoL secchaikka lappaippo thiththathanai ...... vilakAthu

kaduvaivadu vaippatRi viRchikka vaiththaseya
     lenaniRami yatRikku yitRippu rattivaru
          kayalvizhive ruttiththu raththicche vikkuzhaiyin ...... misaithAvung

kaLamathana nukkuccha yaththaippa daiththulavu
     kadumozhipa yitRakka Laiththukko dicchiyarkaL
          kaNiyinila kappatta zhuththaththu yarppaduva ...... thozhiyEnO

adalaipunai mukkatpa raRkuppo rutcholaru
     maRaithanaiyu Narththicche kaththaippe ruththamayil
          athanaimuna daththikka NaththitRi riththuvaru ...... mazhakOnE

apakadamu raiththaththa meththappa daiththulaki
     leLiyaraima rutticche kaththiRpi zhaikkaveNu
          masadarthama naththaikka lakkiththu Niththadaru ...... mathicUrA

vidavarava Naikkuttu yiRkotkru paikkadavuL
     ulavumalai seppaicche vikkatche Riththumika
          viraiviluva NaththiRchi Rakkapai yaththilvaru ...... morumAyOn

vizhaimaruka kokkiRcha muthraththi lutRavanai
     neRuneRena vettukra saththiththa nippadaiya
          vidaiyavarthi rucchaththi muththaththi niRkulavu ...... perumALE.

......... Meaning .........

kada kari maruppil kathirththu pramikka mika uram ida nerukkip pidiththup pudaiththu vaLar kanaka kudam oththuk kanaththup peruththa maNi aNiyAlE: They reveal themselves as the bright ivory tusks of the elephant in a frenzy; they look like a golden pot that is spread closely and voluptuously throughout the chest region (of the whores) to the amazement of onlookers; they bear the large and weighty jewel made of precious gems;

kathir thikazhu seppaik kathikkap pathiththu makizh kamala mukai patchaththu iruththip poruththu mulai kamazh virai koL secchaik kalappaip pothiththa athanai vilakAthu: they resemble the bright and small round box displayed prominently and look like the bud of an exhilarating lotus; they are the fulsome breasts much doted upon from which the reddish paste of fragrant sandalwood powder never parts.

kaduvai aduvaip patRi vil sikka vaiththa seyal ena niRam iyatRik kuyitRip puratti varu kayal vizhi veruttith thuraththic chevik kuzhaiyin misai thAvum: They are like poison and the tender baby-mango and remain imprisoned by the bow-like eye-brows; they roll brightly; those fish-like eyes are driven sideways as though they are ready to attack the swinging studs on the ears.

kaLa mathananukkuc chayaththaip padaiththulavu kadumozhi payitRa akkaLaiththuk kodicchiyarkaL kaNiyinil akappattu azhuththu ath thuyarp paduvathu ozhiyEnO: The harsh words (like the poison) emanating from their mouth strongly add to the victory of the devious God of Love, Manmathan; I am being slighted by their speech; will my misery of being snared in the web of those whores with slender creeper-like waist never cease?

adalai punai mukkaN paraRkup poruL sol aru maRaithanai uNarththic chekaththaip peruththa mayil athanai mun nadaththik kaNaththil thiriththu varum azhakOnE: You preached the PraNava ManthrA, explaining the rare VEdic Principle, to Lord SivA, who smears the holy ash on His body and who possesses three eyes (namely, the Sun, the Moon and the Fire-God); mounting the huge vehicle of peacock, You drove it once to fly around this world in a fraction of a second, Oh Handsome One!

apakadam uraiththu aththa(m) meththap padaiththu ulakil eLiyarai maruttic chekaththil pizhaikka e(N)Num asadar tha(m) manaththaik kalakkith thuNiththu adarum athi cUrA: Speaking treacherous language, some materially-rich people in this world intimidate poor ones so that they alone could lead a successful life on this earth; shaking up the mind of such selfish fools, You split their hearts apart by brazening them out, Oh Strong Warrior!

vida aravu aNaikkuL thuyil koL krupai kadavuL ulavu malai seppaic chevik kaN seRiththu mika viraivil uvaNaththil siRakka priyaththil varum oru mAyOn vizhai maruka: He slumbers on a bed of Serpent (AdhisEshan) possessing poison; He is the most compassionate Lord VishNu; when the elephant (GajEndran) fervently screamed for help, He heard it well at once and rushed to its rescue lovingly, mounted on the Garudan; You are the favourite nephew of that matchless Lord VishNu!

kokkil chamuthraththil utRavanai neRu neRena vettu ukra saththith thanippadaiya vidaiyavar thiruc chaththi muththaththinil kulavu perumALE.: You possess the unique weapon, the Powerful Spear, that savagely severed the demon SUran who came in the disguise of a mango tree in the sea, Oh Lord! You have chosen as Your abode the shrine at Thiruchchaththimuththam* where Lord SivA is also seated, Oh Great One!


* Thiruchchaththimuththam is a shrine near KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 875 kadagarima ruppiRka - thiruchchaththimuththam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]