திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 867 மாலைதனில் வந்து (கும்பகோணம்) Thiruppugazh 867 mAlaidhanilvandhu (kumbakONam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான ......... பாடல் ......... மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாசமலர் சிந்து ...... குழல்கோதி வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க மால்பெருகி நின்ற ...... மடவாரைச் சாலைவழி வந்து போமவர்க ணின்று தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித் தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி சாலமிக நொந்து ...... தவியாமற் காலையிலெ ழுந்து னாமமெமொ ழிந்து காதலுமை மைந்த ...... எனவோதிக் காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள் காண அரு ளென்று ...... பெறுவேனோ கோலமுட னன்று சூர்படையின் முன்பு கோபமுட னின்ற ...... குமரேசா கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப கோணநகர் வந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மாலை தனில் வந்து வீதி தனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி ... மாலைப் பொழுதில் வந்து வீதியில் நின்று நறு மணம் வீசும் கூந்தலை விரித்துச் சிக்கெடுத்து, வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை ... கச்சு அணிந்த இரண்டு மார்பகங்களும் (அணிந்துள்ள) ஆபரணங்களுடன் குலுங்க, காமம் பெருகி நின்ற விலைமாதர்களை, சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறித் தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல் ... தெருவின் வழியே வந்து போகின்ற ஆடவர்கள் கண்டு, (அம்மாதர்களின்) தாழ்ந்து தொங்கும் கூந்தலைப் பார்த்து தடுமாறி காம மயக்கம் கொண்டு, ஆசை இருளில் அழுந்தி மிகமிக மனம் தவிப்பு உறாமல், காலையில் எழுந்து உன் நாமமெ மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி ... காலையில் எழுந்து உனது திரு நாமங்களைக் கூறி, அன்பார்ந்த உமையின் குமரனே என்று ஓதித் துதித்து, காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ ... (முக்காலங்களையும்) உணரும்படியான ஞானாகாச வெளியை நான் ஞானக் கண் கொண்டு காண, உன்னுடைய அருளை என்று பெறுவேனோ? கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா ... போர்க் கோலத்துடன் அன்று சூரர்களுடைய சேனைகளின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசனே, கோதை இரு பங்கின் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே. ... (வள்ளி, தேவயானை ஆகிய) மாதர்கள் இருவரும் இரண்டு பக்கங்களிலும் விளங்க, (கல்வி, செல்வம்) வளரும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1107 pg 2.1108 WIKI_urai Song number: 871 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 867 - mAlaidhanil vandhu (kumbakONam) mAlaithanil vanthu veethithanil ninRu vAsamalar sinthu ...... kuzhalkOthi vArirutha nangaL pUNoduku lunga mAlperuki ninRa ...... madavArai sAlaivazhi vanthu pOmavarka NinRu thAzhkuzhalkaL kaNdu ...... thadumARith thAkamayal koNdu mAliruLa zhunthi sAlamika nonthu ...... thaviyAmaR kAlaiyile zhunthu nAmamemo zhinthu kAthalumai maintha ...... enavOthik kAlamumu Narnthu njAnaveLi kaNkaL kANaaru LenRu ...... peRuvEnO kOlamuda nanRu cUrpadaiyin munpu kOpamuda ninRa ...... kumarEsA kOthaiyiru pangin mEvavaLar kumpa kONanakar vantha ...... perumALE. ......... Meaning ......... mAlai thanil vanthu veethi thanil ninRu vAsa malar sinthu kuzhal kOthi: In the evening, they stand in the street and let loose their fragrant hair to untangle the knots; vAr iru thanangaL pUNodu kulunga mAl peruki ninRa madavArai: shaking their bosom, tightly fitted with blouse and bedecked with jewels, these whores stand there full of passion; sAlai vazhi vanthu pOm avarkaL ninRu thAzh kuzhalkaL kaNdu thadumARith thAka mayal koNdu mAl iruL azhunthi sAla mika nonthu thaviyAmal: the men passing by in the street are stunned looking at their long and hanging hair, being attracted to them in a daze and drown in the darkness of desire, desperately seeking the whores; not subjecting my mind to such torment, kAlaiyil ezhunthu un nAmame mozhinthu kAthal umai maintha ena Othi: I wish to rise early in the morning and chant Your hallowed names saying aloud "Oh, my dear Lord KumarA, the son of UmAdEvi!"; kAlamum uNarnthu njAna veLi kaNkaL kANa aruL enRu peRuvEnO: when will I be blessed by You to achieve the ability to see with my inner eye the cosmic milky way of Knowledge where I could discern all the three tenses (the present, the past and the future)? kOlamudan anRu cUr padaiyin munpu kOpamudan ninRa kumarEsA: Oh Lord KumarA, You wore the warrior's robe and stood with rage in front of the armies of the demons the other day! kOthai iru pangin mEva vaLar kumpakONa nakar vantha perumALE.: With Your spouses (VaLLi and DEvayAnai) on either side, You came to be seated in KumbakONam, the town where education and wealth flourish, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |