திருப்புகழ் 862 தனுநுதல் வெயர்  (திரிபுவனம்)
Thiruppugazh 862 thanunudhalveyar  (thiribuvanam)
Thiruppugazh - 862 thanunudhalveyar - thiribuvanamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
     சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித்

தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
     தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல்

கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
     கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான்

கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
     கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ

முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
     முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி

முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
     முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா

அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
     அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா

அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
     னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்கச் சில
தித்திக்கப்படும் அன்பு பேசி
... வில்லைப் போன்ற நெற்றியில்
வியர்வை உண்டாக, கண்கள் மயங்கிக் குழியிட்டுச் சுருங்க,
வளையல்கள் சப்திக்க, சில இனிமையான காமப் பேச்சுக்களைப் பேசி,

தழுவிய மகளிர் தம் முகிழ் முலை உரம் மிசை தைக்கச்
சர்க்கரை கைக்கப்பட்டன தொண்டை ஊறல்
... தழுவுகின்ற
விலைமாதர்களின் அரும்பு போன்ற மார்பினை மார்போடு பொருந்த,
சர்க்கரையும் கசக்கின்றது என்று சொல்லுமாறு இனிக்கும் வாயிதழ்
ஊறலை

கனவிலு(ம்) நுகர் தரு கலவியின் வலை இடை கட்டுப்பட்டு
உயிர் தட்டுப் பட்டு அழிகின்றதோ தான்
... கனவிலும் பருகும்
புணர்ச்சி என்னும் வலையில் நான் வசப்பட்டு, உயிர் சிக்கிக் கொண்டு
அழிந்து போவது தான் நன்றோ?

கதி பெற விதி இலி மதி இலி உனது இரு கச்சு உற்றச் சிறு
செச்சைப் பத்ம பதம் பெறேனோ
... நற் கதி பெறுவதற்கான நல்ல விதிப்
பயன் இல்லாதவன் நான். அதற்கான புத்தியும் இல்லாதவன்.
உன்னுடைய இரண்டு கால் பட்டிகை பொருந்திய சிறிய வெட்சி பூக்கள்
பூண்ட தாமரை போன்ற திருவடியைப் பெற மாட்டேனோ?

முனை மலி குலிசை தன் ம்ருகமத புளகித முத்தச் சித்ர
தனத்துக்கு இச்சித
... கூர்மை மிகுந்துள்ள வஜ்ராயுதனாகிய இந்திரன்
மகளான தேவயானையின் கஸ்தூரி அணிந்ததும், புளகம் கொண்டதும்,
முத்து மாலை புனைந்ததும், அழகானதுமான மார்பின் மீது ஆசை
கொண்டவனே,

அம்புராசி முறை இட முது நிசிசரர் திரள் முதுகு இட முட்டப்
பொட்டு எழ வெட்டிக் குத்தும் அடங்கல் வீரா
... கடல்
ஓலமிடவும், வலிமையில் முதிர்ந்த அசுரர்களின் கூட்டம்
போர்க்களத்திலிருந்து பின்னிட்டு ஓடவும், யாவுமே பொடியாகவும்
வெட்டிக் குத்திய சிங்க
வீரனே,

அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு
அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா
... ஞான
அனுபவங்களைக் கொடுக்க வல்லதாய் உள்ள ஒப்பற்ற ஓங்காரப்
பொருளை, தந்தையாகிய சிவபெருமானுக்கு அருமையான வகையில்
உபதேசித்து, அவரால் பூஜிக்கப்பட்ட தலைவனே,

அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்துப் பொற்பு
உறு சித்திச் சித்தர்கள் தம்பிரானே.
... உலகிலுள்ள எல்லாப்
பொருள்களும் அழிந்தாலும் நிலைத்து நிற்கும் திரி புவனம்* என்னும்
தலத்தில் அழகுடன் விளங்குபவனே, சித்திகளில் வல்ல சித்தர்களுக்கு
எல்லாம் தம்பிரானே.


* திரிபுவனம் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1097  pg 2.1098 
 WIKI_urai Song number: 866 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 862 - thanunuthal (thiribuvanam)

thanunuthal veyarvezha vizhikuzhi tharavaLai
     saththik kacchila thiththik kappadum ...... anpupEsith

thazhuviya makaLirtha mukizhmulai yuramisai
     thaikkac charkkarai kaikkap pattana ...... thoNdaiyURal

kanavilu nukartharu kalaviyin valaiyidai
     kattup pattuyir thattup pattazhi ...... kinRathOthAn

kathipeRa vithiyili mathiyili yunathiru
     kacchut RacchiRu secchaip pathmapa ...... thampeREnO

munaimali kulisaithan mrukamatha puLakitha
     muththac chithratha naththuk kicchitha ...... ampurAsi

muRaiyida muthunisi sararthiraL muthukida
     muttap pottezha vettik kuththuma ...... dangalveerA

anupava maLitharu nikazhtharu moruporuL
     appark kappadi yoppith tharcchanai ...... koNdanAthA

akilamu mazhiyinu nilaipeRu thiripuva
     naththup poRpuRu siththic chiththarkaL ...... thambirAnE.

......... Meaning .........

thanu nuthal veyarvu ezha vizhi kuzhi thara vaLai saththikkac chila thiththikkappadum anpu pEsi: Their bow-like forehead perspiring, their eyes shrivelling inwards in a trance and the bangles making a jingling sound, the whores resort to sweet and provocative speech;

thazhuviya makaLir tham mukizh mulai uram misai thaikkac charkkarai kaikkappattana thoNdai URalkanavilu(m) nukar tharu kalaviyin valai idai kattuppattu uyir thattup pattu azhikinRathO thAn: hugging their bud-like bosom tightly to my chest, I have been imbibing, even in my dreams, their sweet saliva which makes even the sugar taste bitter; does it do any good to me to be ensnared in their net of carnal pleasure, ruining my life in this manner?

kathi peRa vithi ili mathi ili unathu iru kacchu utRac chiRu secchaip pathma patham peREnO: I am not destined to tread the righteous path; I do not have the necessary wisdom for that; will I never be able to attain Your hallowed and lotus feet, nicely fitted with silken brocade and adorned with little vetchi flowers?

munai mali kulisai than mrukamatha puLakitha muththac chithra thanaththukku icchitha: The weapon VajrA of IndrA has a sharp tip; and his daughter DEvayAnai is bestowed with beautiful and rapturous bosom, smeared with musk and wearing a string of pearls, on which You dote, Oh Lord!

ampurAsi muRai ida muthu nisisarar thiraL muthuku ida muttap pottu ezha vettik kuththum adangal veerA: As the seas roared in a scream and as the horde of demons, known for their super strength, ran away with their back to the battlefield, You smashed them all to pieces by cutting and piercing, Oh valorous Lion!

anupavam aLi tharu nikazh tharum oru poruL apparkku appadi oppiththu arcchanai koNda nAthA: You brilliantly preached to Your Father, Lord SivA, the matchless PraNava ManthrA that could grant experiences of True Knowledge, and then You were worshipped by Him, Oh Master!

akilamum azhiyinum nilaipeRu thiripuvanaththup poRpu uRu siththic chiththarkaL thambirAnE.: Even if all things in the world perish, this place Thiribuvanam* would stand for ever, and You are seated here with grace! You are the Lord of all SidhdhAs (achievers) who are proficient in many feats, Oh Great One!


* Thiribuvanam is located near the town, ThiruvidaimaruthUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 862 thanunudhal veyar - thiribuvanam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]