திருப்புகழ் 825 உரை ஒழிந்து  (த்ரியம்பகபுரம்)
Thiruppugazh 825 uraiozhindhu  (thriyambagapuram)
Thiruppugazh - 825 uraiozhindhu - thriyambagapuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன
          தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென
     வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு
          ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி

உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு
     சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக
          ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே

விரக வன்புடன் பரிமள மிகவுள
     முழுகி நன்றியொன் றிடமல ரமளியில்
          வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே

விளைத னங்கவர்ந் திடுபல மனதிய
     ரயல்த னங்களுந் தனதென நினைபவர்
          வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ...... அருள்வாயே

செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
     ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை
          செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித்

திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
     தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
          திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங்

கரையி றந்திடுங் கடலென மருவிய
     வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ
          கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே

கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
     கவுரி தந்தகந் தறுமுக எனஇரு
          கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு
பின்
... பேசுவதற்கு முடியாமல் விழித்து நிற்கின்ற இவரிடம் பொருளை
அபகரிப்பது எளிது என்று தமது உணர்ச்சியினால் அறிந்து, அதன் பிறகு

திரவிய(ம்) இகலருள் ஒருவர் நண்பு அடைந்து உள திரள்
கவர்கொடு பொருள் தேடி
... செல்வ வலிமை உடையவர்களுள்
ஒருவருடைய நட்பைப் பெற்று, அவரிடம் உள்ள திரண்ட பொருளைக்
கவரும் எண்ணம் கொண்டு, அவருடைய பொருளைத் தேடி,

உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவு உறு சகல
இந்த்ர தந்த்ரமும் வ(ல்)ல விலை மகள்
... உள்ளம் மகிழ்ச்சி
அடைந்து களிப்புற்று, (அவரது சொத்துக்களின் மீது) தமக்குள்ள
உரிமையை நிலைநாட்ட நினைத்து, எல்லாவிதமான தந்திரங்களையும்
காட்டவல்ல விலைமாதரின்

உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே விரக
அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட
... இரண்டு
மார்பகங்களும் புளகிதம் கொள்ள நிரம்ப உறவைக் காட்டி,
காமமோகத்துடன் மிகுந்த நறுமணத்தின் உள்ளேயே முழுகி, நன்றி
பொருந்தியவர்கள் போல

மலர் அமளியில் வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது
உறு நாளே
... மலர்ப் படுக்கையில் பல வித காம லீலைகளைப் புரிந்து,
கலவிப் போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளில்,

விளை தனம் கவர்ந்திடும் பல மனதியர் அயல் தனங்களும்
தமது என நினைபவர் வெகுளியின் கண் நின்று இழி தொழில்
அது அற அருள்வாயே
... (தம்மை நாடினோரின்) பெருகி உள்ள
செல்வத்தை அபகரிக்கும் பலவித கெட்ட எண்ணங்களை உடைய
வேசியர்கள், பிறருடைய சொத்துக்களும் தம்முடையதே என்று
நினைப்பவர்கள் பேசும் கோப மொழிகளில் அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள
என் செயல் இனி முற்றும் அற்றுப் போக அருள் செய்வாயாக.

செரு நினைந்திடும் சின வலி அசுரர்கள் உகம் முடிந்திடும்
படி எழு பொழுதிடை செகம் அடங்கலும் பயம் அற மயில்
மிசை தனில் ஏறி
... போரையே நினைந்திருக்கும் கோபமும்
வலிமையும் கொண்ட அசுரர்கள் யுகம் முடியும் காலம் போல போருக்கு
எழுந்த சமயத்தில், உலகம் முழுவதும் பயம் நீங்க மயிலின் மேலே ஏறி,

திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
     தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
          திமிதி மிந்திமிந் திமிதிமி திமி என வரும் பூதம்
...
(அதே தாளத்திற்கேற்ப) வந்த பூதங்கள்

கரை இறந்திடும் கடல் என மருவிய உதிர(ம்) மொண்டும்
உண்டிட அமர் புரிபவ
... கரை கடந்து எழுந்த கடலைப் போல உள்ள
ரத்தத்தை மொண்டு உண்ணும்படி போர் செய்தவனே,

கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே ... சேர்க்கை
அன்புடன் குறப் பெண்ணான வள்ளியைத் தழுவிய முருகனே,

கனம் உறு த்ரியம்பக புர(ம்) மருவிய கவுரி தந்த கந்த
அறுமுக என
... பெருமை தங்கிய திரியம்பகபுரம்* என்னும் தலத்தில்
வீற்றிருக்கும், உமா தேவி பெற்றெடுத்த கந்தனே, ஆறுமுகனே என்று

இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல
பெருமாளே.
... உனது இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று
தேவர்கள் தொழுதற்குரிய பெருமாளே.


* திரியம்பகபுரம் திருவாரூருக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.997  pg 2.998  pg 2.999  pg 2.1000 
 WIKI_urai Song number: 829 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 825 - uraiyozhinthu ninRa (Thriyampakapuram)

uraiyo zhinthunin Ravarporu LeLithena
     vuNarvu kaNdupin thiraviya ikalaru
          Loruvar naNpadain thuLathiraL kavarkodu ...... poruLthEdi

uLama kizhnthuvan thurimaiyil ninaivuRu
     sakala inthrathanth ramumvala vilaimaka
          Lupaya kongaiyum puLakitha mezhamika ...... vuRavAyE

viraka vanpudan parimaLa mikavuLa
     muzhuki nanRiyon Ridamala ramaLiyil
          vekuvi thampurin thamarporu samayama ...... thuRunALE

viLaitha namkavarn thidupala manathiya
     rayaltha nangaLun thanathena ninaipavar
          vekuLi yinkaNin Rizhithozhi lathuvaRa ...... aruLvAyE

seruni nainthidum sinavali yasurarka
     Lukamu dinthidum padiyezhu pozhuthidai
          sekama dangalum payamaRa mayilmisai ...... thanilERith

thikuthi kunthikun thikuthiku thikuthiku
     thenathe nanthenan thenathena thenathena
          thimithi minthimin thimithimi thimiyena ...... varupUtham

karaiyi Ranthidum kadalena maruviya
     vuthira moNdumuN didaamar puripava
          kalavi yanpudan kuRamakaL thazhuviya ...... murukOnE

kanamu Runthriyam pakapura maruviya
     kavuri thanthakan thaRumuka enairu
          kazhalpa Ninthunin RamararkaL thozhavala ...... perumALE.

......... Meaning .........

urai ozhinthu ninRavar poruL eLithu ena uNarvu kaNdu: Intuitively judging that it is easy to steal money from a dumbfounded man,

pin thiraviya(m) ikalaruL oruvar naNpu adainthu uLa thiraL kavarkodu poruL thEdi: these women go after such a wealthy person, befriend him with the sole intention of grabbing his sizable wealth, and in their pursuit of the riches,

uLam makizhnthu uvanthu urimaiyil ninaivu uRu sakala inthra thanthramum va(l)la vilai makaL: these whores exhibit their elation ecstatically; to establish their right (to those worldly goods), they resort to all kinds of tricks and treats;

upaya kongaiyum puLakitham ezha mika uRavAyE viraka anpudan parimaLa mika uLa muzhuki nanRi onRida: they demonstrate extraordinary relationship by showing off their enthralled bosom; they drown into a wild aroma of passion as if to show their gratitude;

malar amaLiyil veku vitham purinthu amar poru samayam athu uRu nALE: on the flowery bed they perform many an erotic act as though they are embarking on a carnal war; on such a day,

viLai thanam kavarnthidum pala manathiyar ayal thanangaLum thamathu ena ninaipavar vekuLiyin kaN ninRu izhi thozhil athu aRa aruLvAyE: these whores are full of many ulterior designs to grab the abundant wealth (of their suitors), and they consider others' properties their own; in order that I do not fall a miserable victim to their words of wrath and to put an end to this dishonour of mine, kindly bless me!

seru ninainthidum sina vali asurarkaL ukam mudinthidum padi ezhu pozhuthidai sekam adangalum payam aRa mayil misai thanil ERi: When those angry and strong demons, bent upon fighting, decided to invade as if it were the end of the aeon, You mounted the peacock to remove the fear of the entire world;

thikuthi kunthikun thikuthiku thikuthiku
     thenathe nanthenan thenathena thenathena
          thimithi minthimin thimithimi thimi ena varum pUtham:
the devils rushed marching to the (above) beats,

karai iRanthidum kadal ena maruviya uthira(m) moNdum uNdida amar puripava: and drank all the blood that gushed in the battlefield as if the sea had overflown its shore; so powerful was the war that You fought, Oh Lord!

kalavi anpudan kuRamakaL thazhuviya murukOnE: In loving union, You hugged VaLLi, the damsel of the KuRavAs, Oh MurugA!

kanam uRu thriyampaka pura(m) maruviya kavuri thantha kantha aRumuka ena iru kazhal paNinthu ninRu amararkaL thozha vala perumALE.: You are such a Great One that the celestials prostrate at Your two hallowed feet and pray "Oh Lord KanthA, born to UmAdEvi, seated in the famous place called Thriyampakapuram*! Oh Lord with six faces!".


* Thriyampakapuram is located near ThiruvArUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 825 urai ozhindhu - thriyambagapuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]