திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 822 பாலோ தேனோ பலவுறு (திருவாரூர்) Thiruppugazh 822 pAlOthEnOpalavuRu (thiruvArUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... பாலோ தேனோ பலவுறு சுளையது தானோ வானோர் அமுதுகொல் கழைரச பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப் பாலோ வேறோ மொழியென அடுகொடு வேலோ கோலோ விழியென முகமது பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை நாலாம் ரூபா கமலஷண் முகவொளி யேதோ மாதோம் எனதகம் வளரொளி நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி நாடோ வீடோ நடுமொழி யெனநடு தூணேர் தோளா சுரமுக கனசபை நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே மாலாய் வானோர் மலர்மழை பொழியவ தாரா சூரா எனமுநி வர்கள்புகழ் மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா வாதா டூரோ டவுணரொ டலைகடல் கோகோ கோகோ எனமலை வெடிபட வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓதார் சீராள் கதிர்மதி குலவிய தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா தூயா ராயார் இதுசுக சிவபத வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ ... பாலோ, தேனோ, பலாப் பழத்தில் உள்ள சுளைதானோ? வானோர் அமுது கொல் கழை ரச பாகோ ... தேவர்கள் உண்ணும் அமுதம்தானோ, கரும்பு ரச வெல்லப் பாகோ? ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞானப் பாலோ ... ஊன் உருகத் தேவாரம் பாடிய மகன் திருஞான சம்பந்தர் உண்ணும்படி (உமா தேவியார்) அருளிய ஞானப் பால்தானோ? வேறோ மொழி என ... வேறு ஏதாவதோ ஒப்புரைக்கத் தக்கதோ (இந்தப் பெண்களின்) மொழி என்றும், அடு கொடு வேலோ கோலோ விழி என ... கொல்லுதலைக் கொண்ட வேலோ, அம்பு தானோ (அம்மாதர்களின்) கண்கள் என்றும், முகம் அது பானோ வான் ஊர் நிலவு கொல் என ... முகம் சூரிய ஒளிதானோ, அல்லது ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும், மகள் மகிழ்வேனை ... பெண்களிடம் மகிழ்ச்சி கொள்ளும் நான் நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ ... பல உருவமும் கொண்ட உருவத்தனே, தாமரை போன்ற ஆறு முக ஒளியே, அல்லது வேறு எதுவோ, மா தோம் எனது அகம் வளர் ஒளி ... பெரிய குற்றம் கொண்ட என்னுடைய மனத்தில் வளர்கின்ற ஜோதியே, நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி ... நானோ நீயோ பளிங்குபோல் விளங்கும் இடம் அது ஒரு ஜோதி மயமானது, நாடோ வீடோ ... அது நாடுதானோ அல்லது மோட்ச வீடோ? நடு மொழி என நடு தூண் நேர் தோளா ... நடு நிலைமையான உண்மை மொழியை நிலை நிறுத்தியவனே, நடுவில் உள்ள தூணுக்குச் சமமான தோள்களை உடையவனே, சுர முக கன சபை நாதா ... தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதனே, தாதா என உருகிட அருள் புரிவாயே ... கொடை வள்ளலே என்று மனம் உருகுமாறு மீண்டும் மீண்டும் வேண்டினவர்களுக்குத் திருவருள் புரிவோனே, மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா ... காதல் பூண்டவராக தேவர்கள் பூமாரி பொழிய பூமியில் அவதாரம் செய்தவனே, சூரா என முநிவர்கள் புகழ் மாயாரூபா ... சூரனே என முனிவர்கள் புகழும் மாயா ரூபனே, அரகர சிவசிவ என ஓதா ... அரகர சிவசிவ என்று உன்னை ஓதாமல், வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் ... வாதாடி நின்ற அவுணர்களும், அவர்கள் ஊரில் இருந்தவர்களும், அலை கடலும் கோ கோ கோ கோ என மலை வெடி பட ... கோகோ என்று அலறவும், (கிரவுஞ்சமும், ஏழு குலமலைகளும்) வெடிபட்டுப் பொடியாகவும், வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே ... வாளாலும், வேலாலும் அவர்களை அழியச்செய்து அருளிய முருகனே, சூலாள் மாலாள் மலர் மகள் கலைமகள் ... சூலம் ஏந்தியவளான துர்க்கை, திருமாலுக்கு உரியவளான பூ மகளாகிய லக்ஷ்மி, சரஸ்வதி, ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய தோடாள் ... இவர்கள் ஓதித் துதிக்கும் சீர்படைத்தவள், கதிர் வீசும் நிலவின் ஒளிகொண்ட தோடு என்னும் அணிகலனை அணிபவள், கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா ... மலை போன்ற இரண்டு மார்பகங்களை உடைய உமா தேவியார் முன்பு அருளிய குழந்தையே, தூயார் ஆயார் இதுசுக சிவபத ... பரிசுத்தமானவர்களும், உன்னைத் தியானிப்பவர்களும் இந்தத் திருவாரூர் வாழ்வே சுகமான சிவ பத வாழ்வு, வாழ்வாம் ஈனே வதிவம் எனு(ம்) உணர்வொடு ... இங்கேயே தங்கி வாழ்வோம், என்னும் ஞான உணர்ச்சியோடு சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே. ... வந்து சூழ்கின்ற, சிறப்புள்ள திருவாரூரில்* சேர்ந்துள்ள தேவர்களின் பெருமாளே. |
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.987 pg 2.988 pg 2.989 pg 2.990 WIKI_urai Song number: 826 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 822 - pAlO thEnO palavuRu (thiruvArUr) pAlO thEnO palavuRu suLaiyathu thAnO vAnOr amuthukol kazhairasa pAkO vUnO durukiya makanuNa ...... varuNnjAna pAlO vERO mozhiyena adukodu vElO kOlO vizhiyena mukamathu pAnO vAnUr nilavuko lenamakaN ...... makizhvEnai nAlAm rUpA kamalashaN mukavoLi yEthO mAthOm enathakam vaLaroLi nAnO neeyO padikamo doLirida ...... mathusOthi nAdO veedO nadumozhi yenanadu thUNEr thOLA suramuka kanasabai nAthA thAthA enavuru kida aruL ...... purivAyE mAlAy vAnOr malarmazhai pozhiyava thArA cUrA enamuni varkaLpukazh mAyA rUpA arakara sivasiva ...... enavOthA vAthA dUrO davuNaro dalaikadal kOkO kOkO enamalai vedipada vALAl vElAl madivusey tharuLiya ...... murukOnE cUlAL mAlAL malarmakaL kalaimakaL OthAr seerAL kathirmathi kulaviya thOdAL kOdA riNaimulai kumarimun ...... aruLbAlA thUyA rAyAr ithusuka sivapatha vAzhvA meenE vathivame nuNarvodu sUzhsee rArUr maruviya imaiyavar ...... perumALE. ......... Meaning ......... pAlO thEnO pala uRu suLai athu thAnO: "Is it milk, honey or a slice of the sweet jack fruit? vAnOr amuthu kol kazhai rasa pAkO: Is it the nectar of the celestials or jaggery made from sugarcane juice? UnOdu urukiya makan uNa aruL njAnap pAlO: Or is it the Divine milk breastfed by UmAdEvi to Her child ThirugnAna Sambandhar who sang the heartrending Divine Hymns (ThEvAram)? vERO mozhi ena: What else could be compared with the sweet speech (of these women)? adu kodu vElO kOlO vizhi ena: Are their eyes the spears or the arrows that kill? mukam athu pAnO vAn Ur nilavu kol ena: Is the brightness of their face that of the sun or the moon that traverses the sky?" makaL makizhvEnai: so on and so forth, I went crazy over women. nAlAm rUpA kamala shaNmuga oLi EthO: Oh Lord with countless shapes and forms! Oh Luminous One with six lotus-like faces, or whatever else You are, mA thOm enathu akam vaLar oLi: Your radiance grows in my heart which is besmirched with the biggest stain! nAnO neeyO padikamodu oLir idam athu sOthi: Is it not a spot of bright effulgence where you and I glow as marble? nAdO veedO: Is it a particular country or is it heaven, the final place of liberation? nadu mozhi ena nadu thUN nEr thOLA: You have established the impartial Truth; Your shoulders are strong and sturdy like the Central Pillar! sura muka kana sabai nAthA: You preside over the august assembly of the celestials, Oh Lord! thAthA ena urukida aruL purivAyE: You bless those beseeching You repeatedly with melting heart! mAlAy vAnOr malar mazhai pozhi avathArA: Your manifestation in this world was accompanied by floral shower by the devoted celestials! sUrA ena munivarkaL pukazh mAyArUpA: "Oh Valiant One!" is how the sages praise You, the Lord who could take myriads of mystic forms! arakara sivasiva ena OthA: Not praising You as Hara Hara and Siva Siva, vAthAdu UrOdu avuNarodu: the confrontational demons stood arguing; those demons, along with the people living in SUran's land alai kadal kO kO kO kO ena: and the wavy seas were left screaming vociferously; malai vedi pada: (Mount Krouncha and the seven ancestral) mountains were shattered to pieces; vALAl vElAl madivu seythu aruLiya murukOnE: when You wielded Your sword and spear to kill them all, Oh Gracious MurugA! sUlAL mAlAL malar makaL kalaimakaL: Durga who holds the trident, Lakshmi, who belongs to VishNu and is ensconced on the lotus, and Saraswathi, the Goddess of Learning, Othu Ar seerAL kathir mathi kulaviya thOdAL: all stand worshipping this magnificent Goddess; She wears the sparkling studs which radiate the moon's rays; kOdu Ar iNai mulai kumari mun aruL pAlA: She has two mountain-like bosoms; She is UmAdEvi who once delivered You as Her child! thUyAr AyAr ithusuka sivapatha: This is the most blissful SivA's place for all the pure devotees of Yours; vAzhvAm eenE vathivam enu(m) uNarvodu: they wisely decide to stay and live here permanently sUz seer ArUr maruviya imaiyavar perumALE.: and so they gather at this famous town of ThiruvArUr, Your abode; You are the Lord of the celestials, Oh Great One! |
* ThiruvArUr is 14 miles west of NAgappattinam. It is the unique ancient place praised by the Trinity of Saivite poets. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |