திருப்புகழ் 820 மகரம துகெட  (திருவாரூர்)
Thiruppugazh 820 magaramadhukeda  (thiruvArUr)
Thiruppugazh - 820 magaramadhukeda - thiruvArUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தானான தந்த ...... தனதான

......... பாடல் .........

மகரம துகெட இருகுமி ழடைசி
     வாரார்ச ரங்க ...... ளெனநீளும்

மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
     வாணாள டங்க ...... வருவார்தம்

பகர்தரு மொழியில் ம்ருகமத களப
     பாடீர கும்ப ...... மிசைவாவிப்

படிமன துனது பரிபுர சரண
     பாதார விந்த ...... நினையாதோ

நகமுக சமுக நிருதரு மடிய
     நானாவி லங்கல் ...... பொடியாக

நதிபதி கதற வொருகணை தெரியு
     நாராய ணன்றன் ...... மருகோனே

அகனக கனக சிவதல முழுது
     மாராம பந்தி ...... யவைதோறும்

அரியளி விததி முறைமுறை கருது
     மாரூர மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மகரம் அது கெட குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என
நீளும் மதர் இருவிழி வலை கொ(ண்)டு
... மகர மீனும் தன்
முன்னே நிலை கலங்கிட, குமிழம் பூப் போன்ற மூக்கை நெருங்கிச்
சேர்ந்து, நீளம் மிக்க அம்புகள் என்று சொல்லும்படி நீண்டுள்ளதாய்,
துறுதுறுப்பு மிக்க இரு கண்கள் (என்னும்) வலையைக் கொண்டு,

உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம் பகர் தரு
மொழியில் ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை வாவிப் படி
மனது உனது பரிபுர சரண பாதார விந்த(ம்) நினையாதோ
...
உலகில் ஆண் மக்களின் வாழ்நாள் சுருங்கும்படி எதிர் தோன்றி வரும்
விலைமாதர்களின் பேசும் பேச்சிலும், கஸ்தூரி, கலவைச் சந்தனம்
ஆகியவைகளை அணிந்த குடம் போன்ற மார்பகம் மீதிலும் தாவிப்
படியும் என் மனம் உன்னுடைய சிலம்பு அணிந்த தாமரைத்
திருவடிகளை நினைக்க மாட்டாதோ?

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக
நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்) நாராயணன் தன்
மருகோனே
... மலை இடங்களின் முன்புள்ள அசுரர்கள் இறந்து பட,
பலவிதமான மலைகளும் பொடியாக, கடல் கதற, ஒப்பற்ற அம்பைச்
செலுத்திய (ராமராம்) திருமாலின் மருகனே,

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவை
தோறும் அரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர்
அமர்ந்த பெருமாளே.
... அகன்ற மலை இடங்களுக்கு உரியவனே,
செம் பொன் வடிவினனே, சிவ தலங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்தவனே,
சோலைகளின் வரிசைகள் தோறும் அழகிய வண்டுகளின் கூட்டம்
வரிசை வரிசையாக (மலர்த் தேனை) முரலி விரும்பும் திருவாரூரில்*
அமர்ந்த பெருமாளே.


* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின்
தேவாரமும் போற்றும் முதுநகர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.981  pg 2.982  pg 2.983  pg 2.984 
 WIKI_urai Song number: 824 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 820 - magaramadhukeda (thiruvArUr)

makarama thukeda irukumi zhadaisi
     vArArsa ranga ...... LenaneeLum

matharvizhi valaiko dulakinil manithar
     vANALa danga ...... varuvArtham

pakartharu mozhiyil mrukamatha kaLapa
     pAdeera kumpa ...... misaivAvip

padimana thunathu paripura saraNa
     pAthAra vintha ...... ninaiyAthO

nakamuka samuka nirutharu madiya
     nAnAvi langal ...... podiyAka

nathipathi kathaRa vorukaNai theriyu
     nArAya NanRan ...... marukOnE

akanaka kanaka sivathala muzhuthu
     mArAma panthi ...... yavaithORum

ariyaLi vithathi muRaimuRai karuthu
     mArUra marntha ...... perumALE.

......... Meaning .........

makaram athu keda kumizh adaisi vAr Ar sarangaL ena neeLum mathar iruvizhi valai ko(N)du: These women spread out the net of their two lively eyes that make the sEl fish shudder in shame before them and that are stretched like long arrows, accosting in close range their nose looking like the kumizham flower;

ulakinil manithar vAzh nAL adanga varuvAr tham pakar tharu mozhiyil mrukmatha kaLapa pAdeera kumpam misai vAvip padi manathu unathu paripura saraNa pAthAra vintha(m) ninaiyAthO: these confronting whores are capable of shrinking the living days of their suitors; on their speech and pot-like bosom, smeared with a paste of musk and sandalwood powder, my mind keeps on dwelling and rivetting itself; when will it begin to think of Your hallowed lotus feet that are adorned with anklets, Oh Lord?

nakamuka samuka nirutharum madiya nAnA vilangal podiyAka nathi pathi kathaRa oru kaNai theriyu(m) nArAyaNan than marukOnE: Knocking down all the demons residing in mountainous places, shattering many a mountain to pieces, and leaving the seas shrieking in terror, He wielded His unique arrow; and You are the nephew of that (RAmA,) Lord VishNu!

akal naka kanaka siva thalam muzhuthum ArAma panthi avai thORum ari aLi vithathi muRai muRai karuthum ArUr amarntha perumALE.: You belong to the region full of wide mountains, Oh Lord! Your complexion is that of reddish gold! You are seated in all shrines of Lord SivA! In rows of groves around this town ThiruvArUr*, beautiful beetles swarm humming together and keep on sucking the nectar in the flowers with a deep craving; and You are seated here, Oh Great One!


* ThiruvArUr is 14 miles west of NAgappattinam. It is the unique ancient place praised by the Trinity of Saivite poets.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 820 magaramadhukeda - thiruvArUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]