திருப்புகழ் 810 தலை நாளில் பதம்  (வழுவூர்)
Thiruppugazh 810 thalainALilpadham  (vazhuvUr)
Thiruppugazh - 810 thalainALilpadham - vazhuvUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தத்தன தாத்த தந்தன
     தனனா தத்தன தாத்த தந்தன
          தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

தலைநா ளிற்பத மேத்தி யன்புற
     வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
          தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன்

சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
     ளறியா முத்தமி ழூட்டி முண்டக
          தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும்

கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
     ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
          கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக்

கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
     வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
          கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே

சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
     அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
          சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா

சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
     வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
          சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே

மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
     யமுதா கத்தன வாட்டி யிந்துள
          மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா

வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
     நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
          வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தலை நாளில் பதம் ஏத்தி அன்புற உபதேசப் பொருள்
ஊட்டி
... வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல்
வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து,

மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை அருளால் ... சிவ
மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை
உனது திருவருளால்

உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ்
ஊட்டி
... உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி
வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி,

முண்டக தளிர் வேதத் துறை காட்டி மண்டலம் வலம் மேவும் ...
முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத
வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும்
உள்ள மேலிடத்தில்,

கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி ...
இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி
ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள
பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து,

முன் சுழி கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி ...
முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம்
கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து,

கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி வெளியாகப் புக ஏற்றி ...
மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள
தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து,

அன்பொடு கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல்
மறவேனே
... அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில்
வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன்.

சிலை வீழக் கடல் கூட்டமும் கெட ... கிரெளஞ்ச மலை வீழவும்,
கடல் போன்ற காலாட் படைக்கூட்டம் கெட்டு அழியவும்,

அவுணோரைத் தலை வாட்டி அம்பர சிர மாலைப் புக
ஏற்றவும் தொடு கதிர்வேலா
... அசுரர்களின் தலைகளை அழித்து,
ஆகாயத்தின் உச்சியில் தலைகளின் மாலையை ஏற்றி வைக்கவும்
செலுத்திய ஒளிமயமான வேலனே,

சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாகத்
தொடையார்க்கு
... சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற காதலரும், என்
தந்தையும், வரிகளை உடைய பாம்பு மாலை அணிந்தவரும் ஆகிய
சிவபெருமானுக்கு,

உகந்து ஒரு சிவ ஞானப் பொருள் ஊட்டும் முண்டக
அழகோனே
... மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவ ஞானப் பொருளை
உபதேசித்த, தாமரை மலர் போன்ற முகமுடைய அழகனே,

மலை மேவித் தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆகத் தன
வாட்டி
... வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்தைக் காத்து வந்த
அழகுக் கிளி, அமுதைப் போல உடலும் மார்பகங்களும் கொண்டவள்,

இந்துளம் மலர் மாலைக் குழல் ஆட்டு அணங்கி தன்
மணவாளா
... கடப்ப மலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிக்
கொண்டவள் ஆகிய வள்ளி என்னும் தெய்வ மகளின் கணவனே,

வரி கோழிக் கொடி மீக் கொளும்படி நடமாடி ... நீண்ட கோழிக்
கொடி மேலே விளங்கும்படி நடனமாடியவனே, தேவர்கள் போற்றும்
குளிர்ந்த சோலைகளை உடைய

சுரர் போற்று(ம்) தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து
அருள் பெருமாளே.
... வழுவூர்*** என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும்
பெருமாளே.


இப்பாடல் அருணகிரிநாதர் திருவடி தீக்ஷை, உபதேசம் முதலிய பேறுகளைப்
பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.


* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு
'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,
சுழுமுனை முதலியன) உள்ளன.

'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.

'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.

'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.

'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும்
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்
மன அமைதி ஏற்படும்.


** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்






வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)






தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை




கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்




*** வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு
மேற்கே கால் மைலில் உள்ள தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.957  pg 2.958  pg 2.959  pg 2.960 
 WIKI_urai Song number: 814 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 810 - thalai nALil padham (vazhuvUr)

thalainA LiRpatha mEththi yanpuRa
     vupathE sapporu LUtti manthira
          thavanjA nakkada lAtti yenRanai ...... yaruLAlun

sathurA kaththodu kUtti yaNdarka
     LaRiyA muththami zhUtti muNdaka
          thaLirvE thaththuRai kAtti maNdalam ...... valamEvum

kalaisO thikkathir kAtti nansuda
     roLinA thappara mEtRi munsuzhi
          kamazhvA saRpadi nAtta mungkoLa ...... vithithAvik

kamalA laippathi sErththu munpathi
     veLiyA kappuka EtRi yanpodu
          kathirthO kaippari mERko Lumseyal ...... maRavEnE

silaivee zhakkadal kUtta mungkeda
     avuNO raiththalai vAtti yampara
          siramA laippuka vEtRa vunthodu ...... kathirvElA

sivakA mikkoru thUrththa renthaiyar
     varinA kaththodai yArkku kanthoru
          sivanjA napporu LUttu muNdaka ...... azhakOnE

malaimE viththinai kAkku moNkiLi
     yamuthA kaththana vAtti yinthuLa
          malarmA laikkuzha lAtta Nangithan ...... maNavALA

varikO zhikkodi meekko Lumpadi
     nadamA dicchurar pOtRu thaNpozhil
          vazhuvUr naRpathi veetRi runtharuL ...... perumALE.

......... Meaning .........

thalai nALil patham Eththi anpuRa upathEsap poruL Utti: Right in the beginning of my life, You placed Your hallowed feet upon my head and kindly instilled in me the meaning of the fundamental principle;

manthira thava njAnak kadal Atti: with the manthrAs of SivA, You immersed me in the sea of penance and knowledge;

enthanai aruLAl un sathur AkaththOdu kUtti aNdarkaL aRiyA muththamizh Utti: by Your grace, You placed me in the company of Your gifted devotees and taught me the knowledge of three branches of Tamil which even the celestials did not know;

muNdaka thaLir vEthath thuRai kAtti: You preached to me the principles of Upanishads, including Mundaka upanishad, and other VEdic methods;

maNdalam valam mEvum kalai sOthik kathir kAtti: You gave me the vision of the effulgence that lights up along the nerves of idakalai and pingalai* on the paramount region where the three zones of Fire (Agni), the Sun and the Moon converge;

nan sudar eLi nAthap param EtRi: You united my soul with the great light and sound of the Supreme SivA;

mun suzhi kamazh vAsal padi nAttamum koLa vithi thAvi: as a first step, You led me through the gateway of Susumna (cuzhimunai) for meditation and took me past the centre of SwAdhishtAnam**;

kamala Alaip pathi sErththu mun pathi veLiyAkap puka EtRi: You showed me first the lotus centre of ThiruvArUr (MUlAdhAram) and from there You lit up the light of yOgA along my path through several other centres;

anpodu kathir thOkaip pari mER ko(L)Lum seyal maRavEnE: and then You gave Your vision lovingly for me, mounted on the peacock with bright plumes, to shower Your blessings; that magnanimity of Yours will never be forgotten by me!

silai veezhak kadal kUttamum keda: The Mount Krouncha fell; the army of soldiers spread like the sea was destroyed;

avuNOraith thalai vAtti ampara sira mAlaip puka EtRavum thodu kathirvElA: the demons were beheaded and garlands of their slain heads were hoisted in the sky when You wielded Your dazzling spear, Oh Lord!

sivakAmikku oru thUrththar enthaiyar vari nAkath thodaiyArkku: He is the matchless consort of SivagAma Sundhari; He is my Father; he wears a garland of serpents with stripes; to that Lord SivA,

ukanthu oru siva njAnap poruL Uttum muNdaka azhakOnE: You taught with relish the unique meaning of Knowledge of SivA, Oh handsome Lord with lotus face!

malai mEvith thinai kAkkum oN kiLi amuthu Akath thana vAtti: She guarded the millet-field in the valley of VaLLimalai; she is beautiful like the parrot; her body and bosom are sweet like nectar;

inthuLam malar mAlaik kuzhal Attu aNangi than maNavALA: she wears the garland of kadappa flowers elegantly on her hair; she is the Divine damsel VaLLi, and You are her consort, Oh Lord!

vari kOzhik kodi meek koLumpadi nadamAdi: You danced holding up Your tall staff of Rooster, Oh Lord!

churar pOtRu(m) thaN pozhil vazhuvUr nal pathi veetRirunthu aruL perumALE.: There are many cool groves cherished by the celestials in this good town, VazhuvUr***, which is Your abode, Oh Great One!


This song details the history of the initiation and preaching of Sri AruNagirinAthar by Lord Murugan.


* In this song, several Siva-yOgA principles are explained:

The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'.

idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril;
pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril;
susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna').

If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil.


** The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnam



maNipUragam



anAgatham



visudhdhi



AgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-button



Upper belly



Heart



Throat



Between the
eyebrows

Over
the skull



Element

Earth


Fire



Water



Air



Sky



Mind






Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


na



ma



si



va



ya






Temple

ThiruvArUr


ThiruvAnaikkA



Thiru
aNNAmalai


Chidhambaram



ThirukkALaththi



VaranAsi
(kAsi)

Mt. KailAsh



Deity

VinAyagar


BrahmA



Vishnu



RUdhran



MahEswaran



SathAsivan


Siva-Sakthi
Union



*** VazhuvUr is south of MayilAduthuRai - MAyUram, a quarter mile west of Ilanthankudi railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 810 thalai nALil padham - vazhuvUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]