திருப்புகழ் 795 படி புனல் நெருப்பு  (திருவிடைக்கழி)
Thiruppugazh 795 padipunalneruppu  (thiruvidaikkazhi)
Thiruppugazh - 795 padipunalneruppu - thiruvidaikkazhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனதன தத்தனத் தனனதன தத்தனத்
     தனனதன தத்தனத் ...... தனதான

......... பாடல் .........

படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
     பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு

பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
     பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும்

உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
     குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன்

உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
     துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே

கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
     கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா

குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
     குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே

தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
     தடலனுச வித்தகத் ...... துறையோனே

தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
     தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

படி புனல் நெருப்பு அடற் பவனம் வெளி ... மண், நீர், தீ, வலிமை
கொண்ட வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள்,

பொய்க்கருப் பவமுறை யவத்தை ... பொய், கருவிலே பிறப்பு கூடும்
அவஸ்தை,

முக் குண ... ாத்வீகம், ராஜ ம், தாமதம் என்ற முக்குணங்கள்,

நீடு பயில்பிணிகள் ... வெகு காலமாய்க் கூடிவரும் நோய்கள்,

மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி ... மூளை, ஜீவதாது, ரத்தம், எலும்பு,

மெய்ப் பசி படுநிணம் ... உடலில் தோன்றும் பசி, உள்ளிருக்கும்
மாமிசம் இவை யாவும் கூடிய

சடக் குடில்பேணும் ... அறிவற்ற சிறு குடிசையைப் பெரிதெனப்
போற்றி

உடலது பொறுத்து ... இந்த தேகத்தைத் தாங்கி

அறக் கடைபெறு பிறப்பினுக்கு ... மிகக் கீழானதாகப் பெறப்பட்ட
இந்தப் பிறவியிலே

உணர்வுடைய சித்தமற்று ... ஞானம் கலந்த சிந்தை இல்லாமல்

அடிநாயேன் உழலும் அது கற்பு அல ... நாயினும் கீழான நான்
அலைந்து திரியும் தன்மை நீதி ஆகாது.

கழலிணையெ னக்களித்து ... வீரக் கழல் அணிந்த உன் திருவடிகளை
எனக்கு அளித்து,

உனது தமர் ஒக்க வைத்தருள்வாயே ... உன்னை அண்டியுள்ள
பழைய அடியார் கூட்டத்தில் என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிய
வேண்டுகிறேன்.

கொடியவொரு குக்குடக் கொடிய ... கொடுமை வாய்ந்ததும்
ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவனே,

வடிவிற்புனக்கொடிபடர் புயக்கிரிக் கதிர்வேலா ... அழகான
தினைப்புனத்து வள்ளிக் கொடி படரும் புயமலைகளை உடைய, ஒளி
பொருந்திய வேலாயுதனே,

குமர சமரச்சினக்கும் அரவணி யத்தன்மெய்க்குமர ... குமரனே,
போரில் சீறிப் பாயும் பாம்பை அணியும் தந்தை சிவபிரானின் மெய்ப்
புதல்வனே,

மகிழ் முத்தமிழ்ப் புலவோனே ... மூன்று தமிழிலும் மகிழும்
வித்தகனே,

தடவிகட மத்தகத் தடவரையர் அத்தர் அத்த ... விசேஷமான
அழகிய மத்தகத்தோடு கூடிய பெரிய மலை போன்ற கணபதியின் தந்தை
சிவபிரானுக்கு குருவே,

அடல் அனுச ... அதே கணபதியின் பராக்ரமம் மிகுந்த தம்பியே,

வித்தகத் துறையோனே ... ஞான நிலையில் விளங்குபவனே,

தருமருவும் ... விருக்ஷங்கள் பொருந்தி விளங்கும் தலமும்,

எத்தலத்தரும் மருவ முத்தியைத் தரு ... பூமியின் எந்தப் பகுதியில்
உள்ளவர்களும் தன்னிடம் வந்து வேண்டினால் அவர்களுக்கு முத்தியைத்
தரும் தலமுமாகிய

திருவி டைக்கழிப் பெருமாளே. ... திருவிடைக்கழித் தலத்தில்
அமர்ந்த பெருமாளே.


* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே
திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு
வீற்றிருக்கிறான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.923  pg 2.924 
 WIKI_urai Song number: 799 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 795 - padi punal neruppu (thiruvidaikkazhi)

padi punal nerup padaR pavanam veLi poy karup
     bavamuRai avaththai muk ...... guNa needu

payil piNigaL machchai sukkilam udhira maththimeyp
     pasipadu niNach chadak ...... kudil pENum

udaladhu poRuth thaRak kadai peRu piRappinuk
     uNar vudaiya chiththamatr ...... adinAyEn

uzhalum adhu kaRpalak kazhaliNai enak kaLith
     unadhu thamarOkka vaith ...... aruLvAyE

kodiya oru kukkudak kodiyavadi viRpunak
     kodi padar buyakgirik ...... kadhir vElA

kumara samara sinak kumaravaNi aththan meyk
     kumara magizh muththamizh ...... pulavOnE

thata vikata maththagath thadavarai araththarath
     adal anuja viththagath ...... uRaivOnE

tharu maruvu meththalath tharum aruva muththiyaith
     tharu thiruvidak kazhip ...... perumALE.

......... Meaning .........

padi punal nerup padaR pavanam veLi: The five elements, namely, Earth, Water, Fire, the strong Air and the Cosmos;

poy karup bavamuRai avaththai: falsehood, the agony of entering the pit called the womb, with births increasing,

muk guNa: the three characteristics, namely Tranquility (SAthvikam), Aggressiveness (RAjasam) and Lethargy (ThAmasam);

needu payil piNigaL: the ever-lingering diseases;

machchai sukkilam udhiram aththi: the brain; the sperm; the blood; the bones;

meyp pasipadu niNach chadak kudil pENum: the various hungers of the body; and the underlying flesh have all formed this body, a stupid conglomerate like a thatched hut!

udaladhu poRuth thaRak kadai peRu piRappinukku: Bearing this body, and having taken this meanest birth,

uNar vudaiya chiththamatr adinAyEn: I possess a mind bereft of True Knowledge; and I am worse than a lowly dog!

uzhalum adhu kaRpala: My roaming about is absolutely unfair and meaningless.

kazhaliNai enak kaLithu: You should grant me Your two lotus feet wearing the victorious anklets;

unadhu thamarOkka vaith aruLvAyE: and You should kindly include me among Your elite group of devotees!

kodiya oru kukkudak kodiya: You hold in Your staff the incomparable and fierce Rooster!

vadiviRpunak kodi padar buyakgirik kadhir vElA: Your mountainous shoulders embrace beautiful VaLLi, the damsel of the millet field, and You hold the sparkling Spear in Your hand!

kumara samara sinakkum aravaNi aththan meykkumara: Oh Kumara! You are the great Son of SivA who wears the serpent that leaps out fiercely in the battlefield!

magizh muththamizh pulavOnE: You revel in the three branches of Tamil, Oh Great Scholar!

thata vikata maththagath thadavaraiyar aththar aththa: He has a unique elephant face and mountainous body; and He is Ganapathi. You are the Master of His Father (Lord SivA)!

adal anuja: You are also His powerful younger brother!

viththagath uRaivOnE: You reside at the pinnacle of True knowledge!

tharu maruvu meththalath tharum aruva muththiyaith tharu: This place has plenty of trees; and whosoever from anywhere in the earth comes and prays here is assured of heavenly bliss at

thiruvidaik kazhip perumALE.: Thiruvidaikkazhi, which is Your abode, Oh Great One!


* Thiruvidaikkazhi is 17 miles southeast of MayilAduthurrai (MAyUram) - near Thirukkadaiyur.
Murugan is cosily seated under a KurA tree in this place.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 795 padi punal neruppu - thiruvidaikkazhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]