திருப்புகழ் 780 எத்தனை கோடி  (வைத்தீசுரன் கோயில்)
Thiruppugazh 780 eththanaikOdi  (vaiththeeswaran kOyil)
Thiruppugazh - 780 eththanaikOdi - vaiththeeswarankOyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தன தான தான தத்தன தான தான
     தத்தன தான தான ...... தனதான

......... பாடல் .........

எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
     யெத்தனை கோடி போன ...... தளவேதோ

இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
     யிப்படி யாவ தேது ...... இனிமேலோ

சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்

சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
     சித்திர ஞான பாத ...... மருள்வாயே

நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
     நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே

நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா

பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா

பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி ... எத்தனையோ
கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புது உடல்களில் ஓடிப்புகுந்தும்,
ஆடியும்,

எத்தனை கோடி போனது அளவேதோ ... இவ்வாறு எத்தனை
கோடிப் பிறப்புக்கள் போனதோ? இதற்கு ஓர் அளவும் உண்டோ?

இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி ... இவ்வாறு மோகமும்
போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து

இப்படி யாவ தேது ... மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன
பயன்?

இனிமேல் யோசித்திடில் ... இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து
பார்த்தால்,

சீசி சீசி குத்திர மாய மாயை ... சீசசீ, சீச்சீ, மிக இழிவானது இந்த
மாயமான வாழ்க்கை.

சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை ... இதன் சிக்கலில் அகப்பட்டு
மாய்கின்ற அடியேனை,

சித்தினில் ஆடலோடு ... அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து,

முத்தமிழ் வாணர் ஓது ... மூன்று தமிழ்த்* துறையிலும் வல்ல புலவர்கள்
ஓதுகின்ற

சித்திர ஞான பாதம் அருள்வாயே ... உன் அழகிய ஞானத்
திருவடிகளை எனக்கு அருள்வாயாக.

நித்தமும் ஓதுவார்கள் ... நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின்

சித்தமெ வீடதாக ... உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக்
கொண்டு

நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே ... அதில் நடனமாடிடும்
ஆறுமுகத்துக் கடவுளே,

நிட்கள ரூபர் பாதி பச்சுருவான ... உருவ அருவமாக உள்ளவரும்,
பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும்,

மூணு நெட்டிலை சூல பாணி ... மூன்று நீண்ட இலைகளை உடைய
சூலத்தைக் கையில் ஏந்தியவருமான

அருள்பாலா ... சிவபெருமான் அருளிய புதல்வனே,

பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது ... ஆயிரம் பெரிய
படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை

பீறு பத்திர பாத ... கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை
உடைய

நீல மயில் வீரா ... நீல மயில் மீது வரும் வீரனே,

பச்சிள பூக பாளை ... பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது

செய்க்கயல் தாவு வேளூர் ... வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற
புள்ளிருக்கும் வேளூரில்**

பற்றிய மூவர் தேவர் பெருமாளே. ... விருப்புடன் அமரும் முத்தேவர்
(பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே.


* இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்.


** புள்ளிருக்கும் வேளூர் இப்போது வைத்தீசுரன் கோயில் என்று அறியப்படுகிறது.
சீர்காழிக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.883  pg 2.884  pg 2.885  pg 2.886 
 WIKI_urai Song number: 784 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)



 பாடல் ரா - 1    song R1 


 பாடல் ரா - 2    song R2 

Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Karivalam Thiru Muruga Sundhar
'கரிவலம்' திரு முருக சுந்தர்

Thiru M. Sundhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 780 - eththanai kOdi (vaitheeswaran kOyil)

eththanai kOdi kOdi vittuda lOdi yAdi
     eththanai kOdi pOnadh ...... aLavEdhO

ippadi mOha bOgam ippadi yAgi yAgi
     ippadi yAvadhEdhu ...... inimElO

chiththidil cheechi cheechi kuththira mAya mAyai
     sikkini lAyu mAyum ...... adiyEnai

chiththini lAda lOdu muththamizh vANar Odhu
     chiththira nyAna pAdham ...... aruLvAyE

niththamum OdhuvArgaL chiththame veeda dhAga
     nirththama dhAdu mARu ...... mugavOnE

nitkaLa rUpar pAdhi pachchuru vAna mUNu
     nettilai sUla pANi ...... aruLbAlA

paiththalai needum Ayiraththalai meedhu peeRu
     paththira pAdha neela ...... mayilveerA

pachchiLa pUga pALai seykkayal thAvu vELUr
     patriya mUvar dhEvar ...... perumALE.

......... Meaning .........

eththanai kOdi kOdi vittuda lOdi yAdi: How many millions of bodies have been assumed and activated by this soul?

eththanai kOdi pOnadh aLavEdhO: How many millions of bodies have been given up? Is there any account of this?

ippadi mOha bOgam ippadi yAgi yAgi: Being subjected to passion and pleasure, this life goes through so many cycles of births and deaths.

ippadi yAvadhEdhu: What is the use of being born again and again?

inimEl Ochiththidil cheechi cheechi kuththira mAya maya: If one pauses to think about this, it is so awful; and this life is nothing but a delusion and is very mean.

sikkini lAyu mAyum adiyEnai: I have been snared into this life, and eventually I have to die.

chiththini lAda lOdu: You must make me dance on the Stage of Knowledge;

muththamizh vANar Odhu chiththira nyAna pAdham aruLvAyE: and You must grant me Your lotus feet of Wisdom, that are praised by scholars and experts in the three aspects of Tamil*.

niththamum OdhuvArgaL chiththame veeda dhAga: You reside in the hearts of those who sing Your glory everyday;

nirththama dhAdu mARu mugavOnE: and You dance in their hearts, Oh ShaNmugA.

nitkaLa rUpar pAdhi pachchuru vAna: One who is formless and is also full of form, one half whose body is of emerald green colour,

mUNu nettilai sUla pANi aruLbAlA: and One who holds a Trident with three long leaf-like prongs, that SivA - He has delivered You as His son!

paiththalai needum Ayiraththalai meedhu: On Adhiseshan's thousand large cobra-hoods,

peeRu paththira pAdha neela mayilveerA: scratch the sharp sword-like nails of Your blue peacock!

pachchiLa pUga pALai: On the fresh branches of the tall betelnut trees

seykkayal thAvu vELUr: jump the fish from the watery fields of PuLLirukkum VELUr**

patriya mUvar dhEvar perumALE.: in which place reside with relish, the Trinity (BrahmA, Vishnu and SivA) who worship You, Oh Great One!


* The three aspects (branches) of Tamil are:

iyal - Literature; isai - Music; and nAdagam - Drama.


** This town is also known as Vaitheeswaran KOyil which is 3 miles west of SeegAzhi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 780 eththanai kOdi - vaiththeeswaran kOyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]