திருப்புகழ் 760 கழைமுத்து மாலை  (ஸ்ரீ முஷ்டம்)
Thiruppugazh 760 kazhaimuththumAlai  (Sri mushtam)
Thiruppugazh - 760 kazhaimuththumAlai - SrimushtamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத்த தான தனனத்த தான
     தனனத்த தான ...... தனதான

......... பாடல் .........

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
     கரிமுத்து மாலை ...... மலைமேவுங்

கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
     கடல்முத்து மாலை ...... யரவீனும்

அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
     னடைவொத்து லாவ ...... அடியேன்முன்

அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
     மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே

மழையொத்த சோதி குயில்தத்தை போலு
     மழலைச்சொ லாயி ...... யெமையீனு

மதமத்த நீல களநித்த நாதர்
     மகிழ்சத்தி யீனு ...... முருகோனே

செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
     திருமுத்தி மாதின் ...... மணவாளா

சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
     திருமுட்ட மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை ... கரும்பு தரும்
முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை,

கரிமுத்து மாலை ... யானை தரும் முத்தாலான மாலை,

மலைமேவுங் கடிமுத்து மாலை ... மலையிற் கிடைக்கும் சிறப்பான
முத்தினால் ஆன மாலை,

வளைமுத்து மாலை ... சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை,

கடல்முத்து மாலை ... கடலில் பெறப்படும் முத்தாலான மாலை,

அரவீனும் அழல்முத்து மாலை ... பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான
மாலை,

இவைமுற்று மார்பின் அடைவொத்து உலாவ ... இப்படி எல்லா
மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய,

அடியேன்முன் அடர்பச்சை மாவில் ... அடியேனின் எதிரே அடர்ந்த
பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில்

அருளிற்பெணோடும் அடிமைக்கு ழாமொடு அருள்வாயே ...
இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்து
அருள் புரிவாயாக.

மழையொத்த சோதி குயில்தத்தை போலு ... மேகம் போன்ற
நிறத்தை உடைய ஜோதி உமை, குயிலும் கிளியும் போன்று

மழலைச்சொல் ஆயி யெமையீனு ... மழலை மொழி பேசும், எம்மை
ஈன்ற, தாய்,

மதமத்த நீல களநித்த நாதர் ... பொன் ஊமத்தைமலரை (ஜடையில்)
அணிந்தவரும், நீல நிறம் கொண்ட கழுத்தை உடையவரும், என்றும்
அழியாது இருப்பவருமான தலைவர் சிவபிரான்

மகிழ்சத்தி யீனு முருகோனே ... மகிழ்கின்ற சக்தியாம் பார்வதி தேவி
பெற்ற முருகனே,

செழுமுத்து மார்பின் அமுதத்தெய்வானை ... செழிப்புள்ள
முத்துமாலை பூணும் மார்பை உடைய, அமுதமயமான தேவயானை,

திருமுத்தி மாதின் மணவாளா ... மேலான முக்தியைத் தரவல்ல
மாதரசியின் மணவாளனே,

சிறையிட்ட சூரர் தளைவெட்டி ... சிறையில் தேவர்களை வைத்த
சூரர்கள் அவர்களுக்குப் பூட்டிய விலங்கைத் தறித்து எறிந்தவனே,

ஞான திருமுட்ட மேவு பெருமாளே. ... ஞானனே, திருமுட்டம்*
என்ற தலத்தில் அமர்ந்த பெருமாளே.


* திருமுட்டம் இப்போது 'ஸ்ரீமுஷ்ணம்' என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு
தென்மேற்கே 24 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.831  pg 2.832  pg 2.833  pg 2.834  pg 2.835  pg 2.836 
 WIKI_urai Song number: 764 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 760 - kazhaimuththu mAlai (Sri mushtam)

kazhai muththu mAlai puyal muththu mAlai
     kari muththu mAlai ...... malaimEvum

kadi muththu mAlai vaLai muththu mAlai
     kadal muththu mAlai ...... araveenum

azhal muththu mAlai ivai mutru mArbin
     adai voth ulAva ...... adiyEnmun

adar pachchai mAvil aruLiR peNOdum
     adimaik kuzhAmod ...... aruLvAyE

mazhaiyoththa jOthi kuyil thaththai pOlum
     mazhalaich cholAyi ...... emaiyeenu

madha maththa neela kaLa niththa nAthar
     magizh saththi eeNu ...... murugOnE

sezhu muththu mArbin amudhath dheyvAnai
     thiru muththi mAdhin ...... maNavALA

siRai itta sUrar thaLai vetti gnAna
     thiru mutta mEvu ...... perumALE.

......... Meaning .........

kazhai muththu mAlai: The garland of pearls given by sugar canes,

puyal muththu mAlai: the garland of pearls made up of rain drops from the clouds,

kari muththu mAlai: the garland of pearls yielded by the elephants,

malaimEvum kadi muththu mAlai: the garland of famous pearls found in the mountains,

vaLai muththu mAlai: the garland of pearls from conch shells,

kadal muththu mAlai: the garland of pearls gotten from the seas,

araveenum azhal muththu mAlai: the garland of hot pearls spat out by the snakes,

ivai mutru mArbin adai voth ulAva: and so on; wearing all these garlands swaying on Your chest befittingly,

adiyEnmun adar pachchai mAvil: You must come before me, mounting the dark green horse-like peacock,

aruLiR peNOdum: along with Your gracious consort VaLLi (representing the Power of Desire) and

adimaik kuzhAmod aruLvAyE: the assembly of Your devotees, and to bless me.

mazhaiyoththa jOthi: She has the complexion of dark clouds; She is the bright effulgence, DEvi UmA;

kuyil thaththai pOlum mazhalaich cholAyi emaiyeenu: She speaks sweet prattling words like the cuckoo and the parrot; She is the Mother who gave birth to all of us;

madha maththa neela kaLa niththa nAthar magizh saththi: She is Shakthi, the happy consort of our father, Lord SivA, who wears the golden Umaththai flower (on His tresses), who has blue-tinged neck and who is eternal;

eeNu murugOnE: and You are the child of that PArvathi, Oh MurugA!

sezhu muththu mArbin amudhath dheyvAnai: She wears on her chest a garland of rich pearls; She is DEvayAnai, full of sweet nectar;

thiru muththi mAdhin maNavALA: She is capable of granting blissful liberation; and You are her consort!

siRai itta sUrar thaLai vetti: You severed the shackles of the celestials who were imprisoned by the demons.

gnAna thiru mutta mEvu perumALE.: Oh Wise One! You have Your abode in Thirumuttam*, Oh Great One!


* Thirumuttam is now known as Srimushnam. It is 24 miles southwest of Chidhambaram.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 760 kazhaimuththu mAlai - Sri mushtam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]