திருப்புகழ் 753 குரைகடல் உலகினில்  (வேப்பூர்)
Thiruppugazh 753 kuraikadalulaginil  (vEppUr)
Thiruppugazh - 753 kuraikadalulaginil - vEppUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with notation
with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தாந்த
     தாத்தான தந்த ...... தனதான

......... பாடல் .........

குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
     கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக்

குகையிட மருவிய கருவிழி மாந்தர்
     கோட்டாலை யின்றி ...... யவிரோதம்

வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
     வார்க்கே விளங்கு ...... மநுபூதி

வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
     வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும்

திரள்வரை பகமிகு குருகுல வேந்து
     தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு

தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
     தீப்பாய இந்த்ர ...... புரிவாழ

விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
     வேற்கார கந்த ...... புவியேழும்

மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
     வேப்பூர மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குரைகடலுலகினில் உயிர்கொடு போந்து ... ஆரவாரம் செய்கின்ற
கடல் சூழ்ந்த உலகில் உயிர் எடுத்து வந்து,

கூத்தாடுகின்ற குடில்பேணி ... பலவித விளையாட்டுகளை ஆடும்
இந்த உடலை விரும்பிப் போற்றி,

குகையிட மருவிய கருவிழி மாந்தர் ... மலைக்குகை போன்ற
கருக்குழிக்குள் விழுகின்ற மக்களுக்கு நேரும்

கோட்டாலை யின்றி ... துன்பங்கள் எவையும் இல்லாமல்,

அவிரோதம் வர ... விரோதமின்மை என்னும் மனப்பான்மை
வருவதற்கும்,

இரு வினையற ... நல்வினை, தீவினை என்ற இருவினைகளும்
நீங்குவதற்கும்,

உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் ... ஞான உணர்வோடு
இருப்பவர்களுக்கே விளங்கும்படியான

அநுபூதி வடிவினை ... அனுபவ ஞானமான உன் அருட்பிரசாத
வடிவத்தினை

உனது அழகிய திருவார்ந்த வாக்கால் ... உன் அழகிய லக்ஷ்மிகரம்
நிறைந்த திருவாக்கால்

மொழிந்தருளவேணும் ... உபதேசித்து அருளவேண்டும்.

திரள்வரை பகமிகு ... திரண்டு பருத்த கிரெளஞ்சமலையானது
பிளவுபடவும்,

குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் ... குருகுலவேந்தன்
அர்ச்சுனனின் தேர்ப்பாகனாக வந்த கண்ணன் (திருமாலின்)
மைந்தனாகிய பிரமன்

மறையோடு தெருமர ... தான் கற்ற வேதமும் தானுமாகக் கலக்கம்
அடையவும்,

நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய ... அசுரர்களின் மனைவியர்
ஒன்றுகூடி தீயில் பாய்ந்து இறக்கவும்,

இந்த்ரபுரிவாழ ... தேவேந்திரனின் தலைநகரம் அமராவதி
வாழ்வுபெறவும்,

விரிதிரை யெரியெழ ... பரந்து விரிந்த அலைகடலில் நெருப்புப் பற்றி
எழவும்,

முதலுற வாங்கு வேற்கார கந்த ... முதன்மையாம் தன்மை படைத்த
வேலாயுதத்தைச் செலுத்திய கந்தனே,

புவியேழும் மிடிகெட விளைவன ... ஏழுலகின் வறுமையும்
நீங்குமாறு செழிப்பான விளைச்சலைத் தரும்

வளவயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே. ... வளமான
வயல்கள் சூழ்ந்த வேப்பூரில்* அமர்ந்த பெருமாளே.


* வேப்பூர் வட ஆற்காடு மாவட்டத்தில் ஆற்காட்டுக்கு அருகில் பாலாற்றின்
கரையில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.813  pg 2.814  pg 2.815  pg 2.816 
 WIKI_urai Song number: 757 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 753 - kuraikadal ulaginil (vEppUr)

kuraikada lulakini luyirkodu pOnthu
     kUththAdu kinRa ...... kudilpENik

kukaiyida maruviya karuvizhi mAnthar
     kOttAlai yinRi ...... yavirOtham

varairu vinaiyaRa uNarvodu thUngu
     vArkkE viLangu ...... manupUthi

vadivinai yunathazha kiyathiru vArntha
     vAkkAlmo zhintha ...... ruLavENum

thiraLvarai pakamiku kurukula vEnthu
     thErppAkan mainthan ...... maRaiyOdu

therumara nisisarar manaiviyar sErnthu
     theeppAya indhra ...... purivAzha

virithirai yeriyezha muthaluRa vAngu
     vERkAra kantha ...... puviyEzhum

midikeda viLaivana vaLavayal chUzhntha
     vEppUra marntha ...... perumALE.

......... Meaning .........

kuraikadal ulakinil uyirkodu pOnthu: In this world surrounded by noisy oceans, a life takes birth.

kUththAdu kinRa kudilpENik: Immense interest is shown to build up the body to play a lot of games!

kukaiyida maruviya karuvizhi mAnthar: People fall into the pit of the womb resembling the interior of mountainous caves!

kOttAlai yinRi: In order that I am spared that kind of misery,

yavirOtham vara: develop a non-hostile and friendly attitude, and

iru vinaiyaRa: the effects of both good and bad deeds do not ensue every birth, (I need You).

uNarvodu thUngu vArkkE viLangum anupUthi vadivinai: The blissful experience that can be discerned only by those who are immersed in deep meditation on the true knowledge

unathazhakiya thiru vArntha vAkkAlmo zhintharuLa vENum: will have to be preached to me by You in the most auspicious and beautiful words of wisdom!

thiraLvarai pakamiku: The huge mountain, Krouncha, was split into two;

kurukula vEnthu thErppAkan mainthan: BrahmA, (Son Of Vishnu, who came as Krishna to be the charioteer of Arjun, King of the Kuru Dynasty,)

maRaiyOdu therumara: was shaken and so were the VEdAs (scriptures) learnt by Him;

nisisarar manaiviyar sErnthu theeppAya: all the wives of the asuras plunged en masse into fire and died;

indhra purivAzha: AmarAvathi, the Capital of DEvEndrA, rejoiced on being redeemed;

virithirai yeriyezha: and the wide ocean full of waves caught fire, when

muthaluRa vAngu vERkAra kantha: KanthA, You took Your prime weapon, Spear, and let it go!

puviyEzhum midikeda viLaivana vaLavayal: The lush fields produce enough foodcrop to feed the seven worlds and remove their poverty;

chUzhntha vEppUra marntha perumALE.: and such fertile fields surround VEppUr*, which is Your abode, Oh Great One!


* VEppUr is in South Arcot District near Arcot on the banks of PAlARu river.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with notation
with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 753 kuraikadal ulaginil - vEppUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]