திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 752 பசை அற்ற உடல் (விருத்தாசலம்) Thiruppugazh 752 pasaiatRaudal (viruththAsalam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த ...... தனதான ......... பாடல் ......... பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப் படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர் அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய் அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர் வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி ... ஈரப்பசையற்ற இவ்வுடல் வற்றிப் போகச் செய்த வினை முதிர்ச்சி அடைந்து, நடையும் தள்ளாடுதலை அடைந்து, பறியக் கை சொறியப் பல் வெளியாகி ... நிலை தடுமாறி, கை சொறிதலையே தொழிலாகக் கொண்டு, (ஈறுகள் தேய்தலால்) பற்கள் வெளியே நீண்டு வர, படலைக்கு விழி கெட்ட குருடு உற்று ... கண் பூ விழுந்து மறைப்பதால் பார்வை இழந்து குருடாகி, மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி ... மிகவும் நெகிழ்ந்து பழம் போலப் பழுத்து, மயிர் நரைத்து கொக்கைப் போல் வெண்ணிறமாகி, விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு ... வேகத்துடன் வருகின்ற பித்தத்தாலும், வாயுவினாலும், கண் இடமும் நிலையும் தடுமாறிக் கெட்டு, மெலிவு உற்று விரல் பற்று தடியோடே ... உடல் மெலிதலை அடைந்து, கைவிரல்களினால் பிடிக்கப்பட்ட தடியுடன், வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து ... வெளியே தனியனாக நிற்கின்ற தன்மை மிகும்படியாக துன்பமே கொண்ட பிறப்பைத் தவிர்த்து, உன் அருள் வைப்பது ஒரு நாளே ... உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் உண்டாகுமோ? அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர் ... கலக்கம் இல்லாத அசுரர்கள் மடிந்து இறந்தொழிய, அதனால் மகிழ்ந்த, வலிய வஜ்ராயுதக் கையனனாகிய இந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும், அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய் அதுலச் சமர வெற்றி உடையோனே ... பூக்களைப் பொழிந்து பூமி முழுதும் மறையும்படிச் செய்கின்ற நிகர் இல்லாதவனே, போரில் வெற்றி உடையவனே, வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே ... பழிப்புக்கு இடம் இல்லாமல், முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின் காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட* மேக நிறக் கண்ணனது மருகனே, மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் ... இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள விர்த்த கிரி உற்ற பெருமாளே. ... முது குன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும், அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம் தந்தது இங்கு குறிப்பிடப் பெறுகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.811 pg 2.812 pg 2.813 pg 2.814 WIKI_urai Song number: 756 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 752 - pasai atRa udal (viruththAchalam) pasaiyatRa vudalvatRa vinaimutRi nadainetti paRiyakkai soRiyappal ...... veLiyAkip padalaikku vizhiketta kurudutRu mikanekka pazhamutRu naraikokki ...... niRamAki visaipetRu varupiththam vaLiyaikka Nilaikettu melivutRu viralpatRu ...... thadiyOdE veLiniRkum vithamutRa idarpetRa jananaththai viduviththu naruLvaippa ...... thorunALE asaivatRa nirutharkku madivutRa piriyaththi nadalvajra karanmatRu ...... muLavAnOr aLavatRa malarviddu nilamutRu maRaiyacchey athulaccha maravetRi ...... yudaiyOnE vasaiyatRu mudivatRu vaLarpatRi naLavatRa vadivutRa mukilkitNan ...... marukOnE mathuracche mozhiseppi yaruLpetRa sivapaththar vaLar virththa kiriyutRa ...... perumALE. ......... Meaning ......... pasai atRa udal vatRa vinai mutRi nadai netti: The dry skin of my body shrank further due to my maturing bad deeds; my steps began to totter; paRiyak kai soRiyap pal veLiyAki: I lost my balance; my hand's only work was to scratch all over; my teeth protruded outward (as the gum receded); padalaikku vizhi ketta kurudu utRu mika nekka: because of the growing cataract, my vision became impaired; mika nekka pazham utRu narai kokkin niRamAki: my body withered like a dry fruit; my hair became white like the crane; visai petRu varu piththam vaLiyaik kaN nilai kettu: the attack of biliousness and gastritis was so severe that I became dizzy and blind; melivu utRu viral patRu thadiyOdE: I became very feeble and had to support myself with a cane which my fingers held; veLi niRkum vitham utRa idar petRa jananaththai viduviththu: I have been virtually thrown out in the open in this miserable birth; is it possible for me to be liberated un aruL vaippathu oru nALE: and to obtain Your blessings one of these days? asaivu atRa nirutharkku madi utRa piriyaththil adal vajra karan matRum uLa vAnOr: When the unshakable demons were destroyed, the ecstatic celestials, including IndrA, who holds the weapon vajra, aLavu atRa malar vittu nilam utRu maRaiyac cey athulac camara vetRi udaiyOnE: showered abundant flowers covering the earth; You are a matchless warrior and victor in the battlefield! vasai atRu mudivu atRu vaLar patRin aLavu atRa vadivu utRa mukil kitNan marukOnE: Because of an unblemished and limitless love He had for the PANdavAs, He assumed countless forms*; He is KrishNan, of the hue of dark cloud! You are His nephew! mathurac cem mozhi seppi aruL petRa siva paththar vaLar: This place is full of Saivite devotees who attained Your blessing merely by chanting Your sweet and glorious name; virththa kiri utRa perumALE.: this is known as "ancient mount" (ViruththAchalam), which is Your abode, Oh Great One! |
* KrishNan was bound by the love of SahAdEvan and the friendship of Arjunan. He therefore gave the Universal Vision to the former before the War, and to the latter, when He preached Bhagavath Gita during the MahAbhArathA war. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |