திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 751 திருமொழி (விருத்தாசலம்) Thiruppugazh 751 thirumozhi (viruththAsalam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... திருமொழி யுரைபெற அரனுன துழிபணி செயமுன மருளிய ...... குளவோனே திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட ...... விடுவோனே ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென ...... முனமானாய் கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு ...... முதல்வோனே முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை ...... முனிவோனே முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ் முதுகிரி வலம்வரு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... திருமொழி யுரைபெற ... வேத மொழியாம் ப்ரணவத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக அரன் உனதுழி பணிசெய ... சிவபிரான் உன்னிடத்தில் வணங்க முனம் அருளிய குளவோனே ... முன்பு அவருக்கு உபதேசித்து அருளிய, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, திறலுயர் மதுரையில் அமணரை ... ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் உயிர்கழு தெறிபட மறுகிட விடுவோனே ... உயிர்கள் கழுமரத்தில் கலங்கிச் சிதறுபட வைத்தவனே*, ஒருவு அரும் உனதருள் ... நீக்குவதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் பரிவிலர் அவர்களின்உறு ... அன்பில்லாதவர்களைப் போல படர் உறுமெனை யருள்வாயோ ... துன்பத்தை அனுபவிக்கின்ற என்னைக் கண்பார்த்தருள்வாயோ? உலகினில் அனைவர்கள் புகழ்வுற ... உலகத்தில் உள்ள யாவரும் புகழும்படியாக அருணையில் ஒருநொடி தனில்வரு மயில்வீரா ... திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலிலே வந்து உதவிய வீரனே**, கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் ... கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூரிய, கண்களை உடைய குற மகள் வள்ளியின் கணினெதிர் தருவென முனமானாய் ... கண்களுக்கு எதிரிலேயே வேங்கை மரமாக முன்பு ஆனவனே, கருமுகில் பொருநிற அரிதிரு மருமக ... கார்மேகத்தை ஒத்த நிறமுடைய திருமாலின் அழகிய மருமகனே, கருணையில் மொழிதரு முதல்வோனே ... கருணையோடு உபதேச மொழியை எனக்களித்த முதல்வோனே, முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட ... நறுமணம் வீசும் மலர் கொண்ட கற்பக விருட்ச நிழலில் வாழும் தேவர்களின் சிறையை விடுமாறு முரணுறு மசுரனை முனிவோனே ... மாறுபட்டு நின்ற அசுரனாம் சூரனைக் கோபித்தவனே, முடிபவர் வடிவறு சுசிகர முறை ... இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே. ... தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே. |
* முருகனே திருஞானசம்பந்தராக வந்து சமணரைக் கழுவேற்றினார் என்பது சுவாமிகளின் கருத்து. |
** அருணகிரிநாதர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இங்கு குறிப்பிடப்படுகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.809 pg 2.810 pg 2.811 pg 2.812 WIKI_urai Song number: 755 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 751 - thirumozhi (viruththAchalam) thirumozhi uraipeRa aranuna dhuzhi paNi seyamuna maruLiya ...... kuLavOnE thiRaluyar madhuraiyil amaNarai uyirkazhu theRipada maRugida ...... viduvOnE oruvarum unadharuL parivilar avargaLin uRupadar uRumenai ...... aruLvAyO ulaginil anaivargaL pugazhvuRa aruNaiyil orunodi thanilvaru ...... mayilveerA karuvari yuRuporu kaNaivizhi kuRamagaL kaNinedhir tharuvena ...... munamAnAy karumugil poruniRa arithiru marumaga karuNaiyil mozhitharu ...... mudhalvOnE murugalar tharuvuRai amarargaL siRaivida muraNuRum asuranai ...... munivOnE mudibavar vadivaRu suchikara muRaithamizh mudhugiri valamvaru ...... perumALE. ......... Meaning ......... thirumozhi uraipeRa aranuna dhuzhi paNiseya: For the sake of discerning the significance of the great PraNava ManthrA, Lord SivA prostrated before You! muna maruLiya kuLavOnE: You preached it to Him, Oh SaravanabhavA! thiRaluyar madhuraiyil amaNarai uyirkazhu: In the bright city of Madhurai, the ChamaNas were sent by You* to the gallows theRipada maRugida viduvOnE: and their bodies were shattered to pieces! oruvarum unadharuL parivilar avargaLin: Just like the people who do not love You and fall outside Your irresistible grace, uRupadar uRumenai aruLvAyO: I do not want to suffer as one of them. Will You not kindly cast Your gracious glance at me? ulaginil anaivargaL pugazhvuRa: To the amazement and praise of the entire world, aruNaiyil orunodi thanilvaru mayilveerA: in ThiruvaNNAmalai, once You came to help me** driving Your peacock in a fraction of a second! karuvari yuRuporu kaNaivizhi kuRamagaL: She has dark eyes resembling the penetrating arrows; she is VaLLi, the damsel of the KuRavAs; kaNinedhir tharuvena munamAnAy: and right before her eyes, You once became a neem tree! karumugil poruniRa arithiru marumaga: You are the handsome nephew of Vishnu who has the complexion of dark clouds! karuNaiyil mozhitharu mudhalvOnE: Out of compassion, You preached to me the sacred ManthrA! murugalar tharuvuRai amarargaL siRaivida: The DEvAs who lived in the shade of KaRpaga trees with fragrant flowers were released from prison by You! muraNuRum asuranai munivOnE: For their sake, You showed Your rage on the hostile demon, SUran! mudibavar vadivaRu suchikara muRai: Those who breathe their last in this place are never born again; and such sanctity is preserved in this holy place called thamizh mudhugiri valamvaru perumALE.: ViruththAchalam (known as Mudhugiri in Tamil), where You reside victoriously, Oh Great One! |
* This was done by ThirugnAna SambandhAr, one of the four Saivite Stalwarts, who, according to ArunagirinAthar, is an incarnation of Murugan. |
** This incident happened in the life of ArunagirinAthar. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |