திருப்புகழ் 742 வெகு மாய வித  (திருத்துறையூர்)
Thiruppugazh 742 vegumAyavidha  (thiruththuRaiyUr)
Thiruppugazh - 742 vegumAyavidha - thiruththuRaiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதான தனத்தன தானன
     தனதான தனத்தன தானன
          தனதான தனத்தன தானன ...... தனதான

......... பாடல் .........

வெகுமாய விதத்துரு வாகிய
     திறமேப ழகப்படு சாதக
          விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி

வினையான கருக்குழி யாமெனு
     மடையாள முளத்தினின் மேவினும்
          விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல்

தகவாம தெனைப்பிடி யாமிடை
     கயிறாலு மிறுக்கிம காகட
          சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச்

சதிகாரர் விடக்கதி லேதிரள்
     புழுவாக நெளித்தெரி யேபெறு
          மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ

உககால நெருப்பதி லேபுகை
     யெழவேகு முறைப்படு பாவனை
          யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி

உலவாந ரகுக்கிரை யாமவர்
     பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
          உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித்

தொகலாவ தெனக்கினி தானற
     வளமாக அருட்பத மாமலர்
          துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா

துதிமாத வர்சித்தர்ம கேசுரர்
     அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு
          துறையூர்ந கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப் படு சாதக
விதம் ஏழ் கடலில் பெரிதாம்
... எண்ணிலாத மாய வகைகளால்
உடலாக உருவெடுக்கும் இயல்பிலே பழகப்படுகின்ற பிறப்பு வகைகள்
ஏழு கடல்களைக் காட்டிலும் பெரிதாகும்.

அதில் சுழலாகி வினையான கருக் குழியாம் எனும்
அடையாளம் உ(ள்)ளத்தினின் மேவினும்
... அத்தகைய பிறப்பில்
சுழன்று வினைக்கு ஈடான கருக்குழி சேரும் என்கின்ற அறிகுறியானது
என் உள்ளத்தில் பதிந்து இருந்த போதிலும்,

விதி யாரும் விலக்க ஒணாது எனும் முதியோர் சொல்
தகவாம்
... விதியை யாராலும் விலக்க முடியாது என்கின்ற மூத்தோர்
வாசகம் பொருத்தமானது.

அது எனைப் பிடியா மிடை கயிறாலும் இறுக்கி ... அந்த விதி
என்னைப் பிடித்து நெருங்கிய கயிற்றால் அழுத்தமாகக் கட்டி

மகா கட(ம்) சல தாரை வெளிக்கு இடையே செல உருவாகி ...
பெரிய உடம்பிலுள்ள சாக்கடை வழியே உருவம் அடைந்து (குழந்தையாய்)
வெளிவர,

சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து ...
மோசக்காரர்களாகிய ஐம்புலன்களின் சேட்டைகளுடன், மாமிசத்தில்
திரண்டு புழுப் போல நெளிவுண்டு,

எரியே பெறு மெழுகாக உருக்கும் உபாதிகள் தவிர்வேனோ ...
நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல உடலை உருக்குகின்ற
வேதனைகளையும் ஒழிக்க மாட்டேனோ?

உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு
பாவனை உறவே
... யுகாந்த காலத்தில் வடவாமுகா அக்னி நெருப்பில்
புகை உண்டாகி வேகின்ற மாதிரி கோபக் குறிகளை (இரக்க வந்தவரிடம்)
காட்டி,

குகையில் புடமாய் விட வெளியாகி உலவா நரகுக்கு
இரையாம் அவர் பலவோர்கள்
... உலையில் புடம் வைப்பது போல்
உள்ளம் கொதிப்பைப் பெற்று வெளிவருவதால், அழியாத நரகத்துக்கு
இரையாகுபவர்களாகிய பலருடைய

தலைக் கடை போய் எதிர் உ(ள்)ளம் மாழ்கி மிகக்
குழைவாகவும் உறவாடித் தொகலாவது எனக்கு இனிதான்
அற
... வீட்டு வாசலுக்குப் போய் அவர்கள் எதிரே நின்று, மனம்
வெட்கப்பட்டு, மிகவும் குழைந்த மனத்தினனாய் அவர்களுடன் உறவு
பூண்டு சேர்தல் எனக்கு இனியேனும் ஒழிவதற்காகவும்,

வளமாக அருள் பாதம் மா மலர் துணையே பணிய தருவாய்
பரி மயில் வேலா
... நான் செப்பம் அடையவும், உனது திருவருள்
பெருகும் சிறந்த பாத மலர்களை எனக்குத் துணையாக, நான்
தொழுவதற்குத் தருவாயாக, மயிலையும் வேலையும் உடையவனே,

துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள் கூர்
தரு
... துதிக்கின்ற பெரிய தவசிகளும், சித்தர்களும், சிவன், திருமால்,
பிரமன் இவர்களுக்கு எல்லாம் திருவருள் பாலிக்கும்,

துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே. ... திருத்துறையூர்*
என்னும் ஊரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.


* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு
வடமேற்கே 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.785  pg 2.786  pg 2.787  pg 2.788 
 WIKI_urai Song number: 746-1 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 742 - vegu mAya vidha (thiruththuRaiyUr)

vekumAya vithaththuru vAkiya
     thiRamEpa zhakappadu sAthaka
          vithamEzhka daliRperi thAmathil ...... suzhalAki

vinaiyAna karukkuzhi yAmenu
     madaiyALa muLaththinin mEvinum
          vithiyArum vilakkavo NAthenu ...... muthiyOrsol

thakavAma thenaippidi yAmidai
     kayiRAlu miRukkima kAkada
          calathArai veLikkidai yEsela ...... vuruvAki

sathikArar vidakkathi lEthiraL
     puzhuvAka neLiththeri yEpeRu
          mezhukAka vurukkumu pAthikaL ...... thavirvEnO

ukakAla neruppathi lEpukai
     yezhavEku muRaippadu pAvanai
          yuRavEku kaiyiRpuda mAyvida ...... veLiyAki

ulavAna rakukkirai yAmavar
     palavOrkaL thalaikkadai pOyethir
          uLamAzhki mikakkuzhai vAkavu ...... muRavAdith

thokalAva thenakkini thAnaRa
     vaLamAka arutpatha mAmalar
          thuNaiyEpa Niyaththaru vAypari ...... mayilvElA

thuthimAtha varsiththarma kEsurar
     arimAlpi ramarkkaruL kUrtharu
          thuRaiyUrna kariRkudi yAyvaru ...... perumALE.

......... Meaning .........

veku mAya vithaththu uruvAkiya thiRamE pazhakap padu sAthaka vitham Ezh kadalil perithAm: The varieties of birth that take the shape of a body in innumerable mystic patterns are larger than the seven seas.

athil suzhalAki vinaiyAna karuk kuzhiyAm enum adaiyALam u(L)Laththinin mEvinum: Although the signal that I am bound to fall into the pit of a womb in the whirlpool of birth, as per my deeds, has been etched in my heart,

vithi yArum vilakka oNAthu enum muthiyOr sol thakavAm: it has to be reckoned that fate can never be eluded, as declared by the elders.

athu enaip pidiyA midai kayiRAlum iRukki: That (fate) holds me tight, binding me firmly with a thick rope

makA kada(m) sala thArai veLikku idaiyE sela uruvAki: and sends me down the gutter in a large body giving the shape (of a child);

sathikArar vidakku athilE thiraL puzhuvAka neLiththu: with the havoc played on me by the treacherous sensory organs, I twist like a worm in the flesh wriggling about

eriyE peRu mezhukAka urukkum upAthikaL thavirvEnO: and suffer miserably with my body melting like wax on fire; will I ever be able to get rid of this distress?

uka kAlam neruppu athilE pukai ezha vEku muRaippadu pAvanai uRavE: These people display their anger (on those seeking alms) like the smoke emitted during the vadavAmukA fire (the ultimate inferno from the North pole) that flows at the end of the aeon;

kukaiyil pudamAy vida veLiyAki ulavA narakukku iraiyAm avar palavOrkaL: the hearts of these several persons, falling prey to eternal hell, fume in wrath like the bellows in a furnace;

thalaik kadai pOy ethir u(L)Lam mAzhki mikak kuzhaivAkavum uRavAdith thokalAvathu enakku inithAn aRa: to put an end, from now on, to my seeking alms at their doors standing before them shamefully with a melting heart and to desist from soliciting their company

vaLamAka aruL pAtham mA malar thuNaiyE paNiya tharuvAy pari mayil vElA: and to uplift me, kindly grant me, as my refuge, Your hallowed lotus feet for me to worship, Oh Lord with the peacock and the spear!

thuthi mAdhavar siththar makEsurar ari mAl piramarkku aruL kUr tharu: Upon all those great sages who praise Your glory, the achievers (sidhdhAs) and Lords SivA, VishNu and BrahmA, You bestow Your grace,

thuRaiyUr nakaril kudiyAy varu perumALE.: taking Your seat in this place, ThiruththuRaiyUr*, Oh Great One!


* ThiruththuRaiyUr is now called ThiruththaLUr, situated 5 miles northwest of PaNrutti.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 742 vegu mAya vidha - thiruththuRaiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]