திருப்புகழ் 741 ஆரத்தன பார  (திருத்துறையூர்)
Thiruppugazh 741 AraththanabAra  (thiruththuRaiyUr)
Thiruppugazh - 741 AraththanabAra - thiruththuRaiyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
     தானத்தன தானத்தன ...... தனதான

......... பாடல் .........

ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
     யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர

ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
     யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்

கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
     கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்

கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
     கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ

பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
     பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி

பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
     போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா

சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
     சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா

தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
     சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆர் அத் தன பாரத் துகில் மூடிப் பலர் காணக் கையில் யாழ்
வைத்து இசை கூர
... முத்து மாலை அணிந்துள்ள அந்த மார்பின்
பாரங்களை புடைவையால் மூடி, பலரும் வியந்து பார்க்க கையிலே
யாழை வைத்து இசை நிரம்பப் பாடி,

குழல் உடை சோர ஆகம் பனி நீர் அப் புழுகு ஓடக் குழை
ஆடப் பிரையாசைப் படுவார்
... கூந்தலும் உடையும் சரிய, உடலில்
பன்னீருடன் புனுகு கலந்து பாய, (காதில் அணிந்துள்ள) குண்டலங்கள்
ஆடவும், முயற்சி செய்பவர்கள்.

பொட்டு அணி சசி நேர் வாள் கூரக் கணை வேல் கண் கயல்
போலச் சுழல்வார்
... பொட்டு அணிந்துள்ள சந்திரன் போன்ற
முகத்தில் வாளாயுதம், கூர்மையான அம்பு, வேல் (இவை போன்ற)
விழிகள் கயல் மீனைப் போல் சுழற்றுபவர்கள்.

சர்க்கரை கோவைக் கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் கோலக்
குயிலார்
... சர்க்கரையை ஒத்த இனிய மொழிகள் வரும் கொவ்வைக்
கனியை ஒத்த வாயில் பற்கள் சூரிய சந்திரன் போல் ஒளி வீசும். அழகிய
குயில் போலப் பேசுபவர்கள்.

பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோபச் செயலார்
பித்தர்கள் உறவு ஆமோ
... பட்டுப் புடைவயை நூல் போல் நுண்ணிய
இடையில் அணிந்தவர்கள். சித்திரம் போல கோபச் செயல்கள் நிரம்பியுள்ள
பித்துப் பிடித்தவர்களாகிய பொது மகளிர்களின் தொடர்பு எனக்கு
வேண்டுமோ?

பூரித் தன பாரச் சடை வேதக் குழலாள் பத்தர்கள் பூசைக்கு
இயல்வாள் பத்தினி சிவகாமி
... நிறைந்துள்ள மார்பகப் பாரத்தையும்,
சடையையும், வேத சொரூபக் கூந்தலையும் உடையவள், பக்தர்கள்
பூஜையை ஏற்றுக் கொள்ளுபவள், பத்தினி, சிவகாமி,

பூமிக் கடல் மூவர்க்கும் மு(ன்)னாள் பத்திர காளிப் புணர்
போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா
... பூமி, கடல், அரி,
அயன், உருத்திரன் ஆகிய மூவர்க்கும் முன்னவள், பத்திர காளி ஆகிய
பார்வதி அணைந்து சேரும் இன்ப அனுபவம் உடைய சிவபெருமானுக்கும்
உபதேசித்து அருளிய குருநாதனே,

சூரக் குவடு ஆழித் தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு
இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா
... சூரனும், கிரெளஞ்ச
மலையும், கடலும் தவிடு பொடிபட, பொருத அசுரர்கள் மெலிந்து அழிய,
அயற்சி இல்லாத வீரம் உள்ள ஒளி வீசும் வேலை விட்டுச் செலுத்திய
வெற்றி வீரனே,

தோகைச் செயலாள் பொன் பிரகாசக் குறமான் முத்தொடு
சோதித் துறையூர் நத்திய பெருமாளே.
... மயில் போன்ற நடை
உடையவள், அழகிய ஒளியுடைய குறப் பெண்ணாகிய வள்ளி என்கின்ற
முத்துப்போன்ற தேவியுடன் ஒளி வீசும் துறையூர்* என்ற தலத்தை
விரும்பிய பெருமாளே.


* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு
வடமேற்கே 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.783  pg 2.784 
 WIKI_urai Song number: 746 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 741 - Araththana bAra (thiruththuRaiyUr)

Araththana pAraththukil mUdippalar kANakkaiyil
     yAzhvaiththisai kUrakkuzha ...... ludaisOra

Akappani neerappuzhu kOdakkuzhai yAdappirai
     yAsappadu vArpottaNi ...... sasinErvAL

kUrakkaNai vElkatkayal pOlacchuzhal vArsarkkarai
     kOvaikkani vAypaRkathi ...... roLisErung

kOlakkuyi lArpattudai nUloththidai yArsiththira
     kOpaccheya lArpiththarka ...... LuRavAmO

pUriththana pAracchadai vEthakkuzha lALpaththarkaL
     pUsaikkiyal vALpaththini ...... sivakAmi

pUmikkadal mUvarkkumu nALpaththira kALippuNar
     pOkarkkupa thEsiththaruL ...... gurunAthA

cUrakkuva dAzhiththavi dAymuttasu rArukkida
     sOrviRkathir vElvittaruL ...... viRalveerA

thOkaiccheya lALpoRpira kAsakkuRa mAnmuththodu
     sOthiththuRai yUrnaththiya ...... perumALE.

......... Meaning .........

Ar ath thana pArath thukil mUdip palar kANak kaiyil yAzh vaiththu isai kUra: They cover with their sari their heavy bosom adorned by pearl necklaces; they sing a great deal while playing yAzh (a string instrument) with their hand under the admiring eyes of many;

kuzhal udai sOra Akam pani neer ap puzhuku Odak kuzhai Adap piraiyAsaip paduvAr: they let go of their hair and upper garment, with a mixture of rose water and musk running through their body while the golden ear-drops (on their ear-lobes) swing back and forth - all these they do with deliberate and gay abandon;

pottu aNi sasi nEr vAL kUrak kaNai vEl kaN kayal pOlac chuzhalvAr: with vermillion dot adorning their moon-like faces, they roll their eyes like kayal fish - the eyes that look like sword, sharp arrow and spear;

sarkkarai kOvaik kani vAy pal kathir oLi sErum kOlak kuyilAr: their kovvai-fruit-like mouth, from which sugar-like words emanate, shows dazzling teeth, bright like the sun and the moon; their speech is like that of the beautiful cuckoo;

pattu udai nUl oththa idaiyAr siththira kOpac cheyalAr piththarkaL uRavu AmO: they wear silk saris around their thread-like slender waists; their acts of rage are very artistic; do I need to keep my relationship with such mad whores?

pUrith thana pAras sadai vEthak kuzhalAL paththarkaL pUsaikku iyalvAL paththini sivakAmi: She has fulsome bosom and matted hair which is symbolic of the VEdAs; She accepts the worshipful offerings of Her devotees; She is the virtuous Goddess, SivagAmi;

pUmik kadal mUvarkkum mu(n)nAL paththira kALip puNar pOkarkku upathEsiththu aruL gurunAthA: She is primordial even to this earth, oceans, and the Trinity of BrahmA, VishNu and Rudran; She is Bhadra KALi; She is concorporate on the body of Lord SivA who is exhilarated by their union; You are the Master of that SivA!

cUrak kuvadu Azhith thavidAy mutta surAr ukkida sOrvu il kathir vEl vittu aruL viRal veerA: The demon SUran, Mount Krouncha and the seas were all shattered to pieces and the warring demons were all destroyed when You wielded the tireless, and bright spear, Oh Victorious and valorous Lord!

thOkaic cheyalAL pon pirakAsak kuRamAn muththodu sOthith thuRaiyUr naththiya perumALE.: She has the gait of a peacock; she is the beautiful, bright and deer-like damsel of the KuRavAs; she is the pearl-like belle, VaLLi, with whom You take Your seat with relish in ThuRaiyUr*, Oh Great One!


* ThiruththuRaiyUr is now called ThiruththaLUr, situated 5 miles northwest of PaNrutti.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 741 Araththana bAra - thiruththuRaiyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]