திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 721 முகிலாமெனும் வார் (சேயூர்) Thiruppugazh 721 mugilAmenumvAr (sEyUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தனனாதன தானன தானன ...... தனதான ......... பாடல் ......... முகிலாமெனும் வார்குழ லார்சிலை புருவார்கயல் வேல்விழி யார்சசி முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர் முலைமாலிணை கோபுர மாமென வடமாடிட வேகொடி நூலிடை முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார் அகிசேரல்கு லார்தொடை வாழையின் அழகார்கழ லார்தர வேய்தரு அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி அனமாமென யாரையு மால்கொள விழியால்சுழ லாவிடு பாவையர் அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ ககனார்பதி யோர்முறை கோவென இருள்காரசு ரார்படை தூள்பட கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா கமலாலய நாயகி வானவர் தொழுமீசுர னாரிட மேவிய கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா மகிழ்மாலதி நாவல்ப லாகமு குடனாடநி லாமயில் கோகில மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா மதிமாமுக வாவடி யேனிரு வினைதூள்பட வேயயி லேவிய வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முகில் ஆம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி முகவார் தரள(ளா)ம் எனவே நகை புரி மாதர் ... மேகம் என்று சொல்லத் தக்க நீண்ட கூந்தலை உடையவர்கள். வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்கள். கயல் மீன், அம்பு இவைகளைப் போன்ற கண்களை உடையவர்கள். சந்திரனைப் போன்ற முகம் உடையவர்கள். முத்துப் போன்ற பற்களைக் கொண்டு சிரிக்கின்ற விலைமாதர்கள். முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார் ... மார்பகங்கள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்களைப் போல் விளங்க மணி வட மாலைகள் அசைந்து விளங்க, கொடியைப் போலவும், நூல் போலவும் நுண்ணிய இடையில் வேலைப்பாடு சிறந்த பட்டுப் புடைவை விளங்கிய, மயில் போன்ற சாயலை உடையவர்கள். அகிசேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி ... பாம்பை ஒத்த பெண்குறியை உடையவர்கள். வாழை போன்ற தொடை அழகினர்கள். சிலம்பு ஒலிக்க, பொருந்திய அழகியர்கள். பொன்னாலாகிய பாத கிண்கிணி ஒலி செய்ய நடந்து சென்று, அ(ன்)னமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர் அவர் பாயலிலே அடியேன் உடல் அழிவேனோ ... அன்னப் பறவை என்னும்படி யாரையும் மோகம் கொள்ளும் கண்களால் சுழல விடுகின்ற பெண்களுடைய படுக்கையில் அடியேன் உடல் அழிபடுவேனோ? ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள் பட கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா ... விண்ணுலக ஊரில் உள்ளவர்கள் கோ என்று முறையிட இருளைப் போலக் கரிய அசுரர்களுடைய சேனைகள் தூளாகவும் கடலும், (சூரனது) எழு கிரிகளும், பிற மலைகளும் பொடிபடும்படியாகவும் செலுத்திய வேலாயுதனே, கமல ஆலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய கருணாகர ஞான பராபரை அருள் பாலா ... தாமரையில் கோயில் கொண்டிருக்கும் நாயகி, தேவர்கள் தொழுகின்ற சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ளவள், கருணைக்கு இருப்பிடமானவள், ஞான பரதேவதை உமாதேவி அருளிய குழந்தையே, மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில(ம்) மகிழ் நாடு உறை மால் வ(ள்)ளி நாயகி மணவாளா ... மகிழ மரம், மல்லிகை, நாவல் மரம், பலா, பாக்கு மரம் ஆகியவைகளில் விளையாடும் நிலா ஒளி, மயில், குயில் ஆகியவை மகிழ்ந்திருக்கும் நாட்டில் உள்ள வள்ளி மலையில் இருந்த பெருமை மிக்க வள்ளி நாயகியின் கணவனே, மதி மா முகவா அடியேன் இரு வினை தூள்படவே அயில் ஏவிய வளவாபுரி வாழ் மயில் வாகன பெருமாளே. ... சந்திரனைப் போன்ற அழகிய முகத்தனே, அடியேனுடைய இருவினைகளும் தூளாகவே அம்பைச் செலுத்தியவனே, வளவா புரி என்னும் சேயூரில் வாழும் மயில் வாகனப் பெருமாளே. |
* சேயூர் இப்போது செய்யூர் என்று வழங்கப்படும். இதற்கு வளவாபுரி என்ற பெயரும் உண்டு. மதுராந்தகத்துக்கு கிழக்கே 16 மைலில் உள்ள தலம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.731 pg 2.732 pg 2.733 pg 2.734 WIKI_urai Song number: 725 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 721 - mugilAmenum vAr (sEyUr) mukilAmenum vArkuzha lArsilai puruvArkayal vElvizhi yArsasi mukavArthara LAmena vEnakai ...... purimAthar mulaimAliNai kOpura mAmena vadamAdida vEkodi nUlidai muthupALitha sElaiku lAviya ...... mayilpOlvAr akisEralku lArthodai vAzhaiyin azhakArkazha lArthara vEytharu azhakArkana nUpura mAdida ...... nadaimEvi anamAmena yAraiyu mAlkoLa vizhiyAlchuzha lAvidu pAvaiyar avarpAyali lEyadi yEnuda ...... lazhivEnO kakanArpathi yOrmuRai kOvena iruLkArasu rArpadai thULpada kadalEzhkiri nAkamu nURida ...... vidumvElA kamalAlaya nAyaki vAnavar thozhumeesura nArida mEviya karuNAkara njAnapa rAparai ...... yaruLbAlA makizhmAlathi nAvalpa lAkamu kudanAdani lAmayil kOkila makizhnAduRai mAlvaLi nAyaki ...... maNavALA mathimAmuka vAvadi yEniru vinaithULpada vEyayi lEviya vaLavApuri vAzhmayil vAkana ...... perumALE. ......... Meaning ......... mukil Am enum vAr kuzhalAr silai puruvAr kayal vEl vizhiyAr sasi mukavAr tharaLa(a)m enavE nakai puri mAthar: Their long hair looks like the cloud. Their eye-brow looks like the bow. Their eyes look like the kayal fish and the arrow. Their face is like the moon. These whores put on a smile displaying pearl-like teeth. mulai mAl iNai kOpuramAm ena vadam AdidavE kodi nUl idai muthu pALitha sElai kulAviya mayil pOlvAr: Their breasts look like two majestic temple-towers on which strings of gems heave about brightly. Their slender waist, looking like a creeper and thread, is wrapped around with high quality silk sari with fine embroidered workmanship. These women look like the peacock. akisEr alkulAr thodai vAzhaiyin azhaku Ar kazhal Arthara Eytharu azhakAr kana nUpuram Adida nadai mEvi: Their genitals look like serpent and their beautiful thighs are like the stem of plantain. With lilting anklets, they walk about elegantly, the golden beads jingling from within the anklets. a(n)namAm ena yAraiyum mAl koLa vizhiyAl chuzhalA vidu pAvaiyar avar pAyalilE adiyEn udal azhivEnO: They come out like swans and roll their eyes enticing each and every one; and why am I destined to fall on their beds destroying my body altogether? kakanAr pathiyOr muRai kO ena iruLkAr asurAr padai thUL pada kadal Ezh kiri nAkamum nURida vidum vElA: The denizens of the celestial world screamed aloud; the armies of the demons, black-hued like darkness, were shattered to pieces; and the seas, the seven hills (of the demon SUran), and other mountains were annihilated as You wielded Your spear, Oh Lord! kamala Alaya nAyaki vAnavar thozhum eesuranAr idam mEviya karuNAkara njAna parAparai aruL pAlA: She resides in the Temple of lotus; She is concorporate on the left side of Lord SivA worshipped by the celestials; She is the repository of compassion; She is the Supreme Goddess full of True Knowledge; and You are the child of that Goddess UmA! makizh mAlathi nAval palA kamuku udan Ada nilA mayil kOkila(m) makizh nAdu uRai mAl va(L)Li nAyaki maNavALA: In this country She lives in VaLLimalai where makizham, jasmine, jamoun, jack and betelnut trees abound through whose leaves moon-light dances about and where peacocks and cuckoos reside happily; She is the famous damsel, VaLLi, and You are her consort, Oh Lord! mathi mA mukavA adiyEn iru vinai thULpadavE ayil Eviya vaLavApuri vAzh mayil vAkana perumALE.: Your face is beautiful like the moon, Oh Lord! You wield the arrow to destroy both good and bad deeds of this slave! Mounting Your vehicle, the peacock, You are seated in this town SeyUr (VaLavApuri)*, Oh Great One! |
* SEyUr is now known as SeyyUr. Its another name is VaLavApuri. It is located 16 miles east of MathurAnthakam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |