திருப்புகழ் 715 தோல் எலும்பு  (உத்தரமேரூர்)
Thiruppugazh 715 thOlelumbu  (uththaramErUr)
Thiruppugazh - 715 thOlelumbu - uththaramErUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
     தான தந்த தான தந்த ...... தனதான

......... பாடல் .........

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
     சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான

தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
     சோரு மிந்த நோய கன்று ...... துயராற

ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
     னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும்

ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
     யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
     வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
     வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
     வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
     மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோலெலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை ... தோல், எலும்பு,
சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை,

பொங்கு சோரி பிண்டமாயுருண்டு வடிவான ... மேலே பொங்கும்
ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு,

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான்மெலிந்து ... பருத்த,
பாவத்துக்கு இடமான, சரீரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று,

சோரு மிந்த நோய் அகன்று துயராற ... தளர்கின்ற இந்த பிறவி
நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற,

ஆல முண்ட கோன் அகண்ட லோகமுண்ட மால் விரிஞ்சன் ...
விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட
திருமால், பிரமன்,

ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும் ... மற்றும் வேதங்கள்,
ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும்,

ஆனனங்கள் மூவிரண்டும் ஆறிரண்டு தோளும் ... திருமுகங்கள்
ஆறையும், பன்னிரண்டு தோள்களையும்,

அங்கை யாடல் வென்றி வேலும் என்று நினைவேனோ ...
அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு
நான் தியானிப்பேனோ?

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி ... இளம்பிறையைச் சூடிய
சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான

அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே ... அம்பிகை,
கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை
உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே,

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து ... ஐந்து
மாயை*1, ஐந்து வேகம்*2, ஐந்து பூதம்*3, ஐந்து நாதம்*4

வாழ்பெருஞ் சராசரங்கள் உறைவோனே ... இவை வாழ்கின்ற
அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே,

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு ... வேண்டிய
சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம்
யானையைக் கண்டு

வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே ... வேடர்குலப்
பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே,

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற ... வீர
லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும்
மங்களமாக வீற்றிருக்கிற

மேரு மங்கை யாள வந்த பெருமாளே. ... உத்தர மேரூரில்*5
ஆட்சிபுரியும் பெருமாளே.


(*1) மாயை ஐந்து:

தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்.


(*2) வேகம் ஐந்து பலவகைப்படும்
வாயுவேகம், மனோவேகம், ஒளிவேகம், ஒலிவேகம், அசுவவேகம்.

வேகம் சக்தியென கொண்டால் - இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, சிற்சக்தி, பராசக்தி.

வேகம் புலனாகக் கொண்டால் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.


(*3) ஐந்து பூதம்:

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.


(*4) ஐந்து நாதம்:

தோல் கருவி - மத்தளம், உடுக்கை,
துளைக் கருவி - குழல், நாதஸ்வரம்,
நரம்புக் கருவி - யாழ், வீணை,
கஞ்சக் கருவி - ஜாலரா, ஜலதரங்கம்,
மிடற்றுக் கருவி - வாய்ப்பாட்டு, கொன்னக்கோல்.


(*5) உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே
18 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.715  pg 2.716  pg 2.717  pg 2.718 
 WIKI_urai Song number: 719 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 715 - thOl elumbu (uththaramErUr)

thOl elumbu see narambu peeLai thundru kOzhai pongu
     sOri pinda mAy urundu ...... vadivAna

thUla panga kAyam vambilE sumandhu nAnmelindhu
     sOrum indha nOy agandru ...... thuyarARa

Ala munda kOn akanda lOka munda mAlvirinja
     nAra NangaL Aga mangaL ...... pugazhthALum

Ana nangaL mUvi randum ARirandu thOLu mangai
     Adal vendri vElu mendru ...... ninaivEnO

vAla chandRa chUdi chandha vEdha manthra rUpi ambai
     vANi pancha pANi thandha ...... murugOnE

mAyai aindhu vEgamaindhu bUtham aindhu nAdham aindhu
     vAzh perum sarAsa rangaL ...... uRaivOnE

vElai anbu kUra vandha Eka dhantha yAnai kaNdu
     vEdar mangai Odi anja ...... aNaivOnE

veera mangai vAri mangai pArin mangai mEvugindra
     mEru mangai ALa vandha ...... perumALE.

......... Meaning .........

thOl elumbu see narambu peeLai thundru kOzhai: The skin, the bones, the pus, the nerves, the mucus in the eyes, the congested phlegm,

pongu sOri pinda mAy urundu vadivAna: and the gushing blood have all rolled into some kind of mould to form this shape of the body;

thUla panga kAyam vambilE sumandhu nAnmelindhu sOrum: I am bearing in vain this obese body, the source of all sins, and deteriorating in health.

indha nOy agandru thuyarARa: In order that this disease of birth is terminated and for an end to my misery, (I need the following):

Ala munda kOn akanda lOka munda mAlvirinjan: Lord SivA who consumed poison, Vishnu who devoured the entire universe, BrahmA,

Ara NangaL Aga mangaL pugazhthALum: all the scriptures and the books of VEdic rules praise Your two feet; (I need those feet);

Ana nangaL mUvi randum ARirandu thOLum: Your hallowed faces numbering six; Your twelve shoulders;

angai Adal vendri vElumendru ninaivEnO: and the swinging spear held triumphantly in Your exquisite hand; when will I think of these?

vAla chandRa chUdi chandha vEdha manthra rUpi ambai: He (SivA) wears the young crescent moon on His tress; She is the embodiment of all elegant VEdic ManthrAs; She is the Universal Mother;

vANi pancha pANi: She holds Goddess Saraswathi as a part of Herself; She holds the five flowery arrows as Her weapons; (She is PArvathi).

thandha murugOnE: You were delivered to this world by those SivA and PArvathi, Oh MurugA,

mAyai aindhu vEgamaindhu bUthamaindhu nAdhamaindhu: The five delusions*1, the five forces*2, the five elements*3 and the five sounds*4

vAzh perum sarAsa rangaL uRaivOnE: are all present in the moving and stationary objects of this world; You dwell in them all!

vElai anbu kUra vandha Eka dhantha yAnai: At the opportune time, He (VinAyagA) came to Your aid with love; He came running in the form of an elephant with a single tusk;

kaNdu vEdar mangai Odi anja aNaivOnE: and looking at the elephant, VaLLi, the damsel of the hunters, was so scared that she ran towards You to be hugged!

veera mangai vAri mangai pArin mangai mEvugindra: Veera Lakshmi, the Goddess of valour, Lakshmi, the daughter of the milky ocean, and the Goddess of Earth do all reside auspiciously in

mEru mangai ALa vandha perumALE.: this place, Uttara MerUr*5; and You came to rule this place, Oh Great One!


(*1) The five delusion are:

Dhamam (unawareness); MAyai (deception); Moham (lust); avidhdhai (senselessness); anirtham (illusion).


(*2) The five forces could be interpreted in several ways, for example:

     As Energy (Shakthi) - ichchA shakthi, kriya shakthi, gnAna shakthi, siR shakthi, and parA Shakthi.
     As Five Senses - Sight, Taste, Hearing, Smell and Touch.
     As Speed - Speed of the mind, Speed of the Wind, Speed of the light, Speed of the sound and Speed of the horse.


(*3) The five elements:

Earth, Fire, Water, Air and the Cosmos.


(*4) Five types of sounds:

     Percussion instruments: drum, hand-drum, etc.,
     Wind instruments: flute, nAdhaswaram, etc.,
     Wired instruments: yAzh, veenai, etc.,
     Jingling instruments: hand cymbals, jalatharangam, etc.,
     Vocal instruments: vocal singing, konnakkOl (rhythm expressed orally), etc.


(*5) UththaramErUr is 18 miles southwest of Chengalpatttu railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 715 thOl elumbu - uththaramErUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]