திருப்புகழ் 705 ஏறு ஆனாலே  (கோடைநகர்)
Thiruppugazh 705 ERuAnAlE  (kOdainagar)
Thiruppugazh - 705 ERuAnAlE - kOdainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தானா தானா
     தானா தானா ...... தனதானா

......... பாடல் .........

ஏறா னாலே நீறாய் மாயா
     வேளே வாசக் ...... கணையாலே

ஏயா வேயா மாயா வேயா
     லாமே ழோசைத் ...... தொளையாலே

மாறா யூறா யீறாய் மாலாய்
     வாடா மானைக் ...... கழியாதே

வாராய் பாராய் சேரா யானால்
     வாடா நீபத் ...... தொடைதாராய்

சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
     சீரார் தோகைக் ...... குமரேசா

தேவா சாவா மூவா நாதா
     தீரா கோடைப் ...... பதியோனே

வேறாய் மாறா யாறா மாசூர்
     வேர்போய் வீழப் ...... பொருதோனே

வேதா போதா வேலா பாலா
     வீரா வீரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏறு ஆனாலே ... காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினாலும்,

நீறு ஆய் மாயா வேளே(வு) வாசக் கணையாலே ...
சாம்பலாகியும் அழிவுபடாத மன்மத வேள் ஏவுகின்ற மணமுள்ள புஷ்ப
பாணத்தாலும்,

ஏயாய் ஏயாய் மாயா ... பொருந்திப் பொருந்தி கவலையால் வருந்தி

வேயால் ஆம் ஏழு ஓசைத் தொளையாலே ... புல்லாங்குழலில்
உண்டாகும் ஏழு சுரங்கள்கொண்ட இசையைத் தரும் தொளைகளாலும்,

மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானைக் கழியாதே ...
எழிலும் நிறமும் மாறுதல் உற்று, துன்பமுற்று, உயிரே
முடிவடைந்ததுபோல் ஆகி, ஒரே மோக மயக்கமாய் வாடுகின்ற
மான்போன்ற இந்தப் பெண்ணை நீ ஒதுக்காமல்,

வாராய் பாராய் சேராயானால் வாடா நீபத் தொடை தாராய் ...
வந்து பார்த்துவிட்டு இவளுடன் சேர்வதற்கு மனம் இல்லை என்றாலும்,
உனது வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளுக.

சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகைக் குமரேசா ... சீறி
எழுந்து வீறுடன் மேலே பறந்து பதினான்கு உலகங்களையும் வலம்
வந்த, சிறப்பு மிகுந்த, மயில் வாகனக் குமரேசா,

தேவா சாவா மூவா நாதா தீரா கோடைப் பதியோனே ...
தேவனே, இறப்பு இல்லாத மூப்பு அடையாத நாதனே, தைரியம்
உடையவனே, கோடைப் பதியில்* வீற்றிருப்பவனே,

வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழப்
பொருதோனே
... வேறுபட்ட மாறுபட்ட வழியில் சென்றவனான பெரிய
சூரன் வேரற்று அடியோடு விழும்படி சண்டை செய்தவனே,

வேதா போதா வேலா பாலா வீரா வீரப் பெருமாளே. ...
பிரமனுக்கு அறிவு ஊட்டியவனே, வேலனே, பாலனே, வீரனே, வீரம்
வாய்ந்த பெருமாளே.


* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது. காளையும்
பசுவும் சேர்ந்து வருதல், மன்மதன், மலர்க்கணை, புல்லாங்குழல் இசை
முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.695  pg 2.696  pg 2.697  pg 2.698 
 WIKI_urai Song number: 709 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 705 - ERu AnAlE (kOdainagar)

ERA nAlE neeRAy mAyA
     vELE vAsak ...... kaNaiyAlE

EyA vEyA mAyA vEyA
     lAmE zhOsaith ...... thoLaiyAlE

mARA yURA yeeRAy mAlAy
     vAdA mAnaik ...... kazhiyAthE

vArAy pArAy sErA yAnAl
     vAdA neepath ...... thodaithArAy

seeRA veeRA eerEzh pArsUzh
     seerAr thOkaik ...... kumarEsA

thEvA sAvA mUvA nAthA
     theerA kOdaip ...... pathiyOnE

vERAy mARA yARA mAcUr
     vErpOy veezhap ...... poruthOnE

vEthA pOthA vElA bAlA
     veerA veerap ...... perumALE.

......... Meaning .........

ERu AnAlE: At the sight of the bull and cow coming together,

neeRAy mAyA vELE(vu) vAsak kaNaiyAlE: and by the flowery arrows shot by Manmathan (God of Love) who defied death even though He was burnt down to ashes,

EyAy EyAy mAyA: (this girl is) repeatedly saddened;

vEyAl Am Ezhu Osaith thoLaiyAlE: the music coming in seven notes out of the holes in the flute haunt her;

mARAy URAy eeRAy mAlAy vAdA mAnaik kazhiyAthE: kindly do not abandon this deer-like belle whose complexion and beauty have been shattered, who is suffering as though she is about to die and who is madly in love with You.

vArAy pArAy sErAyAnAl vAdA neepath thodai thArAy: Please come and take a look at her; even though You may be unprepared to unite with her, at least grant her Your fresh garland of kadappa flowers.

seeRA veeRA eerEzh pAr sUzh seerAr thOkaik kumarEsA: Oh Lord Kumara, the vehicle mounted by You, namely the famous Peacock, soared up fiercely and flew around all the fourteen worlds!

thEvA sAvA mUvA nAthA theerA kOdaip pathiyOnE: Oh Lord, You are eternal, and You never age at all! Oh valorous One, You have Your abode in KOdainagar*!

vERAy mARAy ARAm mA cUr vEr pOy veezhap poruthOnE: The confronting and controversial demon, SUran, was annihilated in the battlefield by You!

vEthA pOthA vElA bAlA veerA veerap perumALE.: You preached to BrahmA, the Lord of the vEdAs! Oh young Lord with the Spear! You are extremely bold and valorous, Oh Great One!


* KOdainagar is now known as VallakkOttai, situated 6 miles southeast of Sriperumputhur.


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan.
The coming together of the bull and the cow, the God of Love Manmathan, His flowery arrows and the music from the flute are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 705 ERu AnAlE - kOdainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]