திருப்புகழ் 703 ஆதிமுதன் நாளில்  (கோடைநகர்)
Thiruppugazh 703 AdhimudhannALil  (kOdainagar)
Thiruppugazh - 703 AdhimudhannALil - kOdainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
     ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்

ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
     ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்

பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
     பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்

போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
     பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே

சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
     தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.

தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
     தேடஅரி தான வன்றன் ...... முருகோனே

கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
     கோமளிய நாதி தந்த ...... குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆதிமுதன் நாளில் என்றன் தாயுடலி லேயி ருந்து ... முதல் முதலாக
எனது தாயின் உடலில் இருந்து

ஆகமல மாகி நின்று புவிமீதில் ... பல அழுக்குகள் நிறைந்த
உருவுடன், இந்தப் பூமியிலே

ஆசையுடனே பிறந்து ... பிறக்கும்போதே ஆசையுடன் பிறந்து,

நேசமுடனே வளர்ந்து ... பெற்றோர் சுற்றத்தார் ஆகியோரின்
அன்புடன் வளர்ந்து,

ஆள் அழகனாகி நின்று விளையாடி ... ஆள் அழகன்
என்னும்படியாக விளங்கி, விளையாடி,

பூதலமெலாம் அலைந்து ... பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து

மாதருடனேகலந்து ... பெண்களுடன் மருவிக் கலந்து,

பூமிதனில் வேணுமென்று பொருள்தேடி ... பூமியில் அவசியத்தின்
காரணமாகப் பொருள்களைத் தேடி

போகமதிலே உழன்று ... சுகபோகங்களில் ஈடுபட்டுத் திரிந்து

பாழ்நரகெய்தாமல் ... பாழான நரகத்தை நான் அடையாமல்,

உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே ... உனது
மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக.

சீதைகொடு போகும் அந்த ராவணனை ... சீதையைக் கவர்ந்து
சென்ற அந்த ராவணனை

மாள வென்ற தீரனரி நாரணன்றன் மருகோனே ... கொன்று
வென்ற தீரனாம் ஹரி, நாராயணனின் மருகனே,

தேவர்முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று
தேட
... தேவர்கள், முநிவர்கள், மேகவண்ணன் திருமால், பிரம்மா
இவர்களெல்லாம் நின்று தேடியும்

அரிதானவன்தன் முருகோனே ... காணுதற்கு அரிதாக விளங்கிய
சிவனின் குழந்தையாம் முருகனே,

கோதை மலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற ... தேவியும்,
கயிலைநாதனாம் சிவபிரானின் இடப்பக்கம் மேவிய

கோமளி அநாதி தந்த குமரேசா ... அழகியும், தொடக்கமே
இல்லாதவளுமான பார்வதி தந்த குமரேசனே,

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட ... ஒன்றுகூடி
வந்த சூரரின் மார்பை இருகூறாகக் கண்டவனே,

கோடைநகர் வாழ வந்த பெருமாளே. ... கோடை நகரில்*
வாழ்ந்திருக்கும் பெருமாளே.


* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.691  pg 2.692  pg 2.693  pg 2.694 
 WIKI_urai Song number: 707 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 703 - Adhimudhan nALil (kOdainagar)

Athimutha nALi lenRan thAyudali lEyi runthu
     Akamala mAki ninRu ...... puvimeethil

Asaiyuda nEpi Ranthu nEsamuda nEvaLarnthu
     ALazhaka nAki ninRu ...... viLaiyAdip

pUthalame lAma lainthu mAtharuda nEka lanthu
     pUmithanil vENu menRu ...... poruLthEdip

pOkamathi lEyu zhanRu pAzhnarakey thAma lunRan
     pUvadikaL sEra anpu ...... tharuvAyE

seethaikodu pOku mantha rAvaNanai mALa venRa
     theeranari nAra NanRan ...... marukOnE.

thEvarmuni vOrkaL koNdal mAlaripir mAvu ninRu
     thEda ari thAna vanRan ...... murukOnE

kOthaimalai vAzhu kinRa nAtharida pAka ninRa
     kOmaLiya nAthi thantha ...... kumarEsA

kUdivaru sUrar thangaL mArpaiyiru kURu kaNda
     kOdainakar vAzha vantha ...... perumALE.

......... Meaning .........

Athimutha nALi lenRan thAyudali lEyi runthu: In the beginning, I came from my mother's body

Akamala mAki ninRu puvimeethil: as a bundle of dirty flesh into this earth.

Asaiyuda nEpi Ranthu: Desires were born along with me.

nEsamuda nEvaLarnthu: I was reared by loving parents and relations.

ALazhaka nAki ninRu viLaiyAdip: I grew up into a handsome man and played about!

pUthalame lAma lainthu mAtharuda nEka lanthu: I roamed the entire world and cohabited with several women.

pUmithanil vENu menRu poruLthEdip: I earned a lot of wealth that was necessary for life in this world.

pOkamathi lEyu zhanRu: I indulged myself in too much pleasure.

pAzhnarakey thAma lunRan: Lest I suffer in the deepest hell,

pUvadikaL sEra anpu tharuvAyE: You have to show kindness towards me so that I could reach Your lotus feet.

seethaikodu pOku mantha rAvaNanai mALa venRa: When SitA was abducted by RAvaNA, he was overpowered and killed

theeranari nAra NanRan marukOnE: by valorous Rama, who was Vishnu-incarnate; and You are His nephew!

thEvarmuni vOrkaL koNdal mAlaripir mAvu ninRu: All DEvAs, sages, Vishnu and BrahmA together sought

thEda ari thAna vanRan murukOnE: but failed to find (the head and feet of) the all-pervasive SivA; and You are that SivA's Son, Oh MurugA!

kOthaimalai vAzhu kinRa nAtharida pAka ninRa: She is the lady, consort of SivA of KailAsh, occupying His left side,

kOmaLiya nAthi thantha kumarEsA: She is beautiful; She has no beginning; and that PArvathi delivered You, Oh KumarA!

kUdivaru sUrar thangaL mArpaiyiru kURu kaNda: When all demons advanced together to fight You, their chests were split into two pieces by Your Spear!

kOdainakar vAzha vantha perumALE.: Your favourite abode is KOdainagar*, Oh Great One!


* KOdainagar is now known as VallakkOttai which is 6 miles south of SriperumputhUr near Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 703 Adhimudhan nALil - kOdainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]