திருப்புகழ் 700 தலங்களில் வரும்  (பெருங்குடி)
Thiruppugazh 700 thalangkaLilvarum  (perungkudi)
Thiruppugazh - 700 thalangkaLilvarum - perungkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
     தனந்தன தனந்தன ...... தனதான

......... பாடல் .........

தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
     தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ்

சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
     தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந்

துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர்
     தொடுந்தொழி லுடன்தம ...... க்ரகபாரஞ்

சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
     சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ

இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
     ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி

இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
     எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே

பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
     ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலூரா

பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
     பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தலங்களில் வரும் கன இ(ல்)லம் கொ(ண்)டு மடந்தையர் ...
பூமியில் உள்ள இடங்களில் இருக்கிற பெரிய வீட்டில் வாழ்ந்து
கொண்டிருந்த மாதர்களின்

தழைந்த உதரம் திகழ் தச மாதம் சமைந்தனர் ... பூரித்துள்ள
வயிற்றில் செம்மையாக பத்து மாதங்கள் வளர்ந்து இருந்தனர்.

பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர் தவழ்ந்தனர் நடந்தனர் ...
பின்னர் (குழந்தையாகப்) பிறந்தனர், படுக்கையில் கிடந்தனர்,
உட்கார்ந்தனர், அதன் பின் தவழ்ந்து சென்றனர், பிறகு நடக்கலுற்றனர்.

சில காலம் துலங்கு ந(ல்)ல பெண்களை முயங்கினர்
மயங்கினர்
... பின்பு சில காலம் கழிந்ததும், விளக்கமுற்ற நற்குணமுள்ள
பெண்களோடு பொருந்தி இருந்தனர், அவர்கள் மீது மோக மயக்கம்
கொண்டனர்.

தொடும் தொழிலுடன் தம(து) க்ரக பாரம் சுமந்தனர் ... தாம்
மேற் கொண்ட தொழிலைச் செய்து, தமது இல்லற வாழ்க்கையைச்
சுமந்தனர்.

அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் ... அவ்வாழ்க்கையிலேயே
உடன்பட்டு இருந்தனர். (தமது தொழில், பொலிவு, வலிமை இவை
எல்லாம்) குன்றியவுடன் முடிவில் இறந்தனர்.

சுடும் பினை எ(ன்)னும் பவம் ஒழியேனோ ... (இப்பிணத்தைச்)
சுட்டு எரிக்கவும் இனி என்று மற்றவர்களின் வாயால் சொல்லக்கூடிய
இப்பிறப்பை ஒழிக்க மாட்டேனோ?

இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அருள் இல்
எங்கணும் இலங்கு என முறை ஓதி
... இலங்கையில் திகழ்ந்திருந்த
வீடுகளுள் முழுமையான அன்பு இல்லாத எல்லா இடத்திலும்,
அக்கினியே, பற்றி எரிவாயாக என்று நீதியை எடுத்துரைத்து,

இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள்
முகுந்தன் நன் மருகோனே
... நெருப்பை வைத்த குரங்காகிய
அனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளுமாறு கோபத்துடன்
எழுந்தருளிய ராமனாகிய திருமாலின் மருகனே,

பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி
ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா
... பலத்துடன், கிரெளஞ்ச
மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம்
கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே.

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி
மருங்கு உறை பெருமாளே.
... பெரிய சோலைகளும் கரும்பும்
வாழையும் நிறைந்த பெருங்குடிக்கு* அருகில் வீற்றிருக்கும் பெருமாளே.


* பெருங்குடி சென்னைக்கு அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.681  pg 2.682 
 WIKI_urai Song number: 704 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 700 - thalangkaLil varum (perungkudi)

thalangaLil varungana ilangodu madanthaiyar
     thazhainthavu tharanthikazh ...... thasamAthanj

samainthanar piRanthanar kidanthana rirunthanar
     thavazhnthanar nadanthanar ...... silakAlam

thulanguna lapeNkaLai muyanginar mayanginar
     thodunthozhi ludanthama ...... krakapAranj

sumanthana ramainthanar kuRainthana riRanthanar
     sudumpinai yenumpava ...... mozhiyEnO

ilangaiyi lilangiya ilangaLu Lilangaru
     LilengaNu milangena ...... muRaiyOthi

idumkanal kurangodu nedunkadal nadungida
     ezhuntharuL mukunthanan ...... marukOnE

pelankodu vilangalu nalangA yilkoNdeRi
     prasaNdaka rathaNdamizh ...... vayalUrA

perumpozhil karumpuka LarampaikaL nirampiya
     perungkudi marunguRai ...... perumALE.

......... Meaning .........

thalangaLil varum kana i(l)lam ko(N)du madanthaiyar: Those women were living in a large house on this earth;

thazhaintha utharam thikazh thasa mAtham samainthanar: confined in their well developed wombs for ten months, growing up nicely,

piRanthanar kidanthanar irunthanar thavazhnthanar nadanthanar: they were born (as little babies); they were lying on the bed; then they sat and later began to crawl; eventually they walked;

sila kAlam thulangu na(l)la peNkaLai muyanginar mayanginar: after some more time elapsed, they were united with decent, virtuous girls whom they doted on;

thodum thozhiludan thama(thu) kraka pAram sumanthanar: they pursued the career chosen by them and carried the burden of family life;

amainthanar kuRainthanar iRanthanar: they were very much involved in that kind of life; with the gradual waning (of their profession, strength and lustre), ultimately they died.

sudum pinai e(n)num pavam ozhiyEnO: This birth ends in the statement by others saying "Do away with this corpse by burning it"; can I not get rid of such a birth?

ilangaiyil ilangiya i(l)langaLuL ilangu aruL il engaNum ilangu ena muRai Othi: He declared the just order to the God of Fire asking Him to burn down all houses in LankA where wholesome love was absent;

idum kanal kurangodu nedum kadal nadungida ezhuntharuL mukunthan nan marukOnE: then, the monkey began to set fire to LankA; along with that HanumAn, the large sea also began to tremble at the rage of Rama; You are the nephew of that VishNu!

pelam ko(N)du vilangalum nalanga ayil koNdu eRi prasaNdakara thaN thamizh vayalUrA: With great force, You wielded the spear that shattered the unshakable mount Krouncha, Oh valorous One! You belong to VayalUr where the cool language Tamil excels!

perum pozhil karumpukaL arampaikaL nirampiya perungkudi marungu uRai perumALE.: Your abode is close to Perungkudi* where large groves, sugarcanes and plantain trees abound, Oh Great One!


* Perungkudi is very close to Chennai on the Old Mahabalipuram Road.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 700 thalangkaLil varum - perungkudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]