திருப்புகழ் 694 கடிய வேக  (திருமயிலை)
Thiruppugazh 694 kadiyavEga  (thirumayilai)
Thiruppugazh - 694 kadiyavEga - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
     கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்

கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
     கனவி கார மேபேசி ...... நெறி பேணாக்

கொடிய னேது மோராது விரக சால மேமூடு
     குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே

குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
     குவளை வாகும் நேர்காண ...... வருவாயே

படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
     பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்

பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
     பதிய தாக வேலேவு ...... மயில்வீரா

வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
     வனச வாவி பூவோடை ...... வயலோடே

மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
     மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடிய வேக மாறாத விரத சூதர் ஆபாதர் ... கடுமையான கோபம்
குறையாத சங்கற்பங்களை உடைய வஞ்சகர்கள், கீழ்க்குணத்தவர்கள்,

கலக மேசெய் பாழ்மூடர் ... கலகத்தையே செய்கின்ற பாழான
மூடர்கள்,

வினைவேடர் ... தீவினையையே விரும்புவோர்கள்,

கபட வீனர் ... வஞ்சனை கொண்ட இழிந்தவர்கள்,
(இத்தன்மையருடைய)

ஆகாத இயல்பு நாடியே ... நல்லது ஆகாத முறைகளை விரும்பியே,

நீடு கன விகாரமே பேசி ... மிக மோசமான அவலட்சணங்களையே
பேசி

நெறி பேணாக் கொடியன் ... நன்னெறியைப் போற்றாத
கொடியவனாகிய நான்

ஏதும் ஓராது ... எதையும் ஆராய்ந்து பார்க்காமல்,

விரக சாலமேமூடு குடிலின் ... வெறும் ஆசை ஜாலமே மூடியுள்ள
இந்தக் குடிசையாகிய

மேவியே நாளு மடியாதே ... உடலில் இருந்து கொண்டே
தினந்தோறும் அழிவுறாமல்,

குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ... விளங்கும் மயிலின்
மீது ஆறுமுகங்களும், வேலும்,

ஈராறு குவளை வாகும் ... பன்னிரண்டு குவளை மலர்மாலை
அணிந்த தோள்களும்,

நேர்காண வருவாயே ... அடியேன் நேரில் கண்டு தரிசிக்குமாறு நேர்
எதிரே வருவாயாக.

படியி னோடு மாமேரு அதிர வீசியே ... பூமியோடு, பெரிய
மேருமலை அதிரும்படியாகச் செலுத்தி,

சேடபணமும் ஆடவே நீடுவரைசாடி ... ஆதிசேஷனின்
பணாமகுடங்கள் அசைவுறவும், பெருமலைகளை மோதி,

பரவை யாழி நீர்மோத ... பரந்த கடலில் நீர் கொந்தளித்து மோதவும்,

நிருதர் மாள வானாடு பதியதாக ... அசுரர்கள் இறக்கவும்,
தேவர்களின் நாடு செழிப்பான நகராகவும்,

வேலேவு மயில்வீரா ... வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே,

வடிவுலாவி யாகாச மிளிர் ... அழகோடு வளர்ந்து ஆகாயம் வரை
ஓங்கி மிளிரும்

பலாவின் நீள்சோலை ... பலா மரங்களின் பெரிய சோலைகளும்,

வனச வாவி பூவோடை வயலோடே ... தாமரைக் குளமும், நீர்ப்
பூக்கள் நிறைந்த ஓடைகளும், வயல்களும்,

மணிசெய் மாட மாமேடை சிகரமோடு ... அழகிய மாடங்களும்,
சிறந்த மேடைகளும், கோபுரங்களும்

வாகான மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே. ... ஒன்று கூடி
விளங்கும் மயிலாப்பூரில்* வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே.


* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.667  pg 2.668  pg 2.669  pg 2.670 
 WIKI_urai Song number: 698 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 694 - kadiya vEga (thirumayilai)

kadiya vEka mARAtha viratha sUtha rApAthar
     kalaka mEsey pAzhmUdar ...... vinaivEdar

kapada veena rAkAtha iyalpu nAdi yEneedu
     kanavi kAra mEpEsi ...... neRi pENAk

kodiya nEthu mOrAthu viraka sAla mEmUdu
     kudilin mEvi yEnALu ...... madiyAthE

kulavu thOkai meethARu mukamum vElu meerARu
     kuvaLai vAkum nErkANa ...... varuvAyE

padiyi nOdu mAmEru athira veesi yEsEda
     paNamu mAda vEneedu ...... varaisAdip

paravai yAzhi neermOtha niruthar mALa vAnAdu
     pathiya thAka vElEvu ...... mayilveerA

vadivu lAvi yAkAsa miLirpa lAvi neeLsOlai
     vanasa vAvi pUvOdai ...... vayalOdE

maNisey mAda mAmEdai sikara mOdu vAkAna
     mayilai mEvi vAzhthEvar ...... perumALE.

......... Meaning .........

kadiya vEka mARAtha viratha sUthar: Deceitful ones who have vowed to lose temper at all times;

ApAthar: people with lowly instincts;

kalaka mEsey pAzhmUdar: utterly foolish people who always create trouble;

vinaivEdar: people who love to do only bad deeds;

kapada veenar: cunning scoundrels; and

AkAtha iyalpu nAdi yE: these are the people whose company I sought!

needu kanavi kAra mEpEsi: I used to speak of very ugly things in their presence.

neRi pENAk kodiyan: I was such a wicked fellow who shunned the righteous path.

Ethu mOrAthu: I never paused to think.

viraka sAlamE mUdu kudilin mEviyE: I was preserving this cottage of my body covered by a flimsy roof of lust and desires!

nALu madiyAthE: To prevent me from decaying like this everyday,

kulavu thOkai meethARu mukamum vElum: (You must come before me) on Your lovely Peacock with Your six great faces, the Spear,

eerARu kuvaLai vAkum: and twelve shoulders adorned with garlands of KuvaLai flowers!

nErkANa varuvAyE: You must come so that I can have Your vision right in front of me!

padiyi nOdu mAmEru athira veesiyE: The earth and the great mount MEru trembled;

sEda paNamu mAdavE: the thousand hoods of AdhisEshan were shaken;

needu varaisAdi: large mountains were shattered;

paravai yAzhi neermOtha: the water in the wide seas boiled over;

niruthar mALa: all the demons (asuras) died;

vAnAdu pathiya thAka: and prosperity was restored in the Celestial Land;

vElEvu mayilveerA: when You threw Your Spear valorously, mounted on Your Peacock!

vadivu lAvi yAkAsa miLir palAvi neeLsOlai: There is a large grove of jackfruit trees which have grown beautifully, tall right up to the sky;

vanasa vAvi pUvOdai vayalOdE: there are several lotus ponds; lakes with plenty of water-flowers; a number of fields producing crops;

maNisey mAda mAmEdai sikara mOdu: there are majestic terraces and beautiful balconies on tall towers in

vAkAna mayilai mEvi vAzhthEvar perumALE.: the lovely place called Mylapore*, which is Your abode; and You are worshipped by all DEvAs, Oh Great One!


* Mylapore (Thirumayilai), is in the heart of the city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 694 kadiya vEga - thirumayilai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]