திருப்புகழ் 693 களபம் மணி ஆரம்  (திருமயிலை)
Thiruppugazh 693 kaLabammaNiAram  (thirumayilai)
Thiruppugazh - 693 kaLabammaNiAram - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

......... பாடல் .........

களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
     கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங்

கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
     கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும்

வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
     வனிதைமடல் நாடி நித்த ...... நலியாதே

வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
     மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும்

துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
     துயிலதர னாத ரித்த ...... மருகோனே

சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
     துரகதக லாப பச்சை ...... மயில்வீரா

அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
     அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா

அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
     அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

களபம் மணி ஆரம் உற்ற வனச முலை மீது கொற்ற கலக மத
வேள் தொடுத்த கணையாலும்
... கலவைச் சாந்தும் மணி மாலையும்
கொண்ட, தாமரை மொட்டுப் போன்ற மார்பின் மீது, வீரம் வாய்ந்தவனும்,
குழப்பத்தை உண்டு பண்ணும் காம விகாரம் தருபவனுமாகிய மன்மதன்
செலுத்திய அம்புகளாலும்,

கனி மொழி மி(ன்)னார்கள் முற்றும் இசை வசைகள் பேச ...
இனிமையான மொழிகளை உடைய மின்னல் போன்ற ஒளி கொண்ட
மாதர்கள் அனைவரும் வேண்டுமென்றே பழிச் சொற்களைப் பேசுவதாலும்,

உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் ... சேர்ந்துள்ள
நெருப்புப் போல உலவி வரும் பூரண நிலவாலும்,

வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி
வனிதை மடல் நாடி நித்த(ம்) நலியாதே
... செழுமை கொண்ட,
விரிந்த மலர்களால் அமைந்த படுக்கையின் மெத்தை மீது உருகும்
இப்பெண் மடலேற* விரும்பி நாள் தோறும் துன்பம் அடையாமல்,

வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர்
அணையில் நீ அணைக்க வரவேணும்
... ரேகைகள் கொண்ட
வண்டுகள் உலவி நெருங்கியுள்ள (மாலையை அணிந்த) இரண்டு
புயங்களாலும் கலந்து, அவளது எண்ணம் வெற்றி பெற இந்த
மலர்ப்படுக்கையில் நீ அணைக்க வர வேண்டுகின்றேன்.

துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப
துயிலதரன் ஆதரித்த மருகோனே
... துளசி மாலை அணிந்த
மார்பன், சக்கரம் தரித்தவன், விஷ்ணு, முராசுரனைக் கொன்ற முராரி,
ஆதிசேஷன் என்னும் பாம்பின்மேல் துயில் கொள்ளுபவன் விரும்புகின்ற
மருகனே,

சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத
கலாப பச்சை மயில் வீரா
... வேதம், உபநிஷதம், வேள்வி இவை
நிரம்பிய திருமயிலையில்** வீற்றிருப்பவனும், உக்ரமான குதிரையாகிய,
தோகையுடைய பச்சை மயில் ஏறும் வீரனே,

அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப
அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா
... அளகாபுரி நகரத்துச்
செல்வம் கொண்ட செட்டிக் குலத்தில் பிறந்த (பூம்பாவை என்னும்)
பெண்ணின் உயிரை மீளும்படி அழைக்க வேண்டி இறைவன் திருவருள்
பரவிய பதிகத்தை (ஞான சம்பந்தராக அவதரித்துச்) சொன்ன குமரேசனே,

அரு வரையை நீறு எழுப்பி நிருதர் தமை வேர் அறுத்து
அமரர் பதி வாழ வைத்த பெருமாளே.
... அருமையான கிரெளஞ்ச
மலையைத் தூளாக்கி, அசுரர்களை வேரோடு அழித்து, தேவர்களைப்
பொன்னுலகில் வாழ வைத்த பெருமாளே.


* கடவுள் சம்பந்தமாக மட்டும் பெண்பாலோர் மடலேறுதல் கூறப்படும்.


* மடல் ஏறுதல்:

காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை
முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம்
உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.


** திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்
கூறுவதுபோல அமைந்தது. மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, ஊராரின் வசைப்
பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.663  pg 2.664  pg 2.665  pg 2.666  pg 2.667  pg 2.668 
 WIKI_urai Song number: 697 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 693 - kaLabam maNi Aram (thirumayilai)

kaLapamaNi yAra mutRa vanasamulai meethu kotRa
     kalakamatha vELtho duththa ...... kaNaiyAlung

kanimozhimi nArkaL mutRu misaivasaikaL pEsa vutRa
     kanalenavu lAvu vatta ...... mathiyAlum

vaLamaiyaNi needu pushpa sayanANai meethu rukki
     vanithaimadal nAdi niththa ...... naliyAthE

variyaLiyu lAvu thutRa irupuyama LAvi vetRi
     malaraNaiyil neeya Naikka ...... varavENum

thuLapamaNi mArpa sakra tharanarimu rAri sarppa
     thuyilathara nAtha riththa ...... marukOnE

suruthimaRai vELvi mikka mayilainakar mEvu mukra
     thurakathaka lApa pacchai ...... mayilveerA

aLakaivaNi kOrku laththil vanithaiyuyir meeLa zhaippa
     aruLparavu pAdal sotRa ...... kumarEsA

aruvaraiyai neeRe zhuppi nirutharthamai vEra Ruththu
     amararpathi vAzha vaiththa ...... perumALE.

......... Meaning .........

kaLapam maNi Aram utRa vanasa mulai meethu kotRa kalaka matha vEL thoduththa kaNaiyAlum: Because of the arrows shot by mighty and provocatively troublesome Manmathan, God of Love, upon the bud-like bosom, wearing sandal paste and a chain of gems,

kani mozhi mi(n)nArkaL mutRum isai vasaikaL pEsa: because of the scandal deliberately spread by all women who are sweet-tongued, and looking like dazzling lightning,

utRa kanal ena ulAvu vatta mathiyAlum: and because of the full moon roaming like a mass of fire,

vaLamai aNi needu pushpa sayana aNai meethu urukki vanithai madal nAdi niththa(m) naliyAthE: this girl is melting on the sturdy bed sprinkled with well-blossomed flowers; lest she become weaker day by day and begin to publicise her passion through the palm-leaf doodles*,

vari aLi ulAvu thutRa iru puyam aLAvi vetRi malar aNaiyil nee aNaikka varavENum: You must come to her flowery bed and give her a winning hug with Your shoulders adorned by the garland around which beetles, with beautiful stripes, swarm!

thuLapa maNi mAlai mArpa sakratharan ari murAri sarppa thuyilatharan Athariththa marukOnE: He wears the garland of ThuLasi on His chest; He holds a disc in His hand; He is known as VishNu and MurAri (destroyer of the demon Muran); He slumbers on the serpent-bed called Adhiseshan; and You are His favourite nephew!

suruthi maRai vELvi mikka mayilai nakar mEvu ukra thurakatha kalApa pacchai mayil veerA: In this place Thirumayilai**, which is Your abode, vEdAs, upanishads and sacrifices are prolific; You mount the green peacock with beautiful plumes, looking like a fierce horse!

aLakai vaNikOr kulaththil vanithai uyir meeLa azhaippa aruL paravu pAdal sotRa kumarEsA: When the girl (PUmbAvai), belonging to the Chettiar lineage of AlakApuri, died, You (coming as ThirugnAna Sambandhar) brought her back to life by singing the hymn full of divine grace, Oh Lord KumarA!

aru varaiyai neeRu ezhuppi niruthar thamai vEr aRuththu amarar pathi vAzha vaiththa perumALE.: The rare mount Krouncha was shattered to pieces and the demons were uprooted so that You could redeem the celestial land for the DEvAs, Oh Great One!


* Sending out passion-filled doodles in palm leaves is known as "madal ERuthal". Here the passion-stricken hero makes several doodles and mounts a horse made of palm leaves to go around the town announcing to the world his love for the heroine. In this case, the girl likes to resort to "madal ERuthal" which is permitted only when the girl is in love with the Lord.


** Thirumayilai is Mylapore, in the heart of the city of Chennai.


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
The God of Love Manmathan with His flowery arrows, the moonlight, the scandal-mongering women of the town are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 693 kaLabam maNi Aram - thirumayilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]