திருப்புகழ் 692 இணையது இலதாம்  (திருமயிலை)
Thiruppugazh 692 iNaiyadhuiladhAm  (thirumayilai)
Thiruppugazh - 692 iNaiyadhuiladhAm - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
     இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி

இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
     இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப்

பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
     பருவரதி போல வந்த ...... விலைமானார்

பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
     படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ

கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
     கலபமயில் மேலு கந்த ...... குமரேசா

கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு
     கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே

மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
     மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக

மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
     மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு ...
தமக்கு ஒப்பில்லாதனவான இரண்டு கயல் மீன்கள் என்னும்படி புரண்டு

இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி ... இரண்டு காதுகளின்
மேலே நெருங்கிப் போர் தொடுத்து,

இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு
நயனர்
... விளங்கும் வில்லை உடைய மன்மதன் செலுத்திய மலர் அம்பைக்
காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும்,

வார் இணங்கும் அதி பாரம் பணை முலையின் மீது அணிந்த
தரள மணி ஆர்
... கச்சணிந்த அதிக பாரமான பெரும் மார்பகங்களின்
மீது முத்து மாலை அணிந்தவர்களும்,

துலங்கு பருவ ரதி போல வந்த விலை மானார் ... விளங்கும்
இளமை வாய்ந்த (மன்மதனின் மனைவி) ரதியைப் போல வந்தவர்களும்
ஆகிய விலைமாதர்கள்

பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படு
குழியிலே மயங்கி விழலாமோ
... மேற்கொள்ளும் தொழிலில் நான்
சுழன்று அலைந்து, அவர்கள் மீது காம இச்சை என்னும் பெருங்குழியிலே
மயங்கி விழலாமோ?

கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப
மயில் மேல் உகந்த குமரேசா
... கண கண என்ற ஓசையோடு
ஒலிக்கும் வீர தண்டைகள் திருவடிகளில் விளங்க, தோகை மயிலின் மேல்
மகிழ்ந்து ஏறும் குமரேசா,

கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ
வேல் எறிந்த முருகோனே
... கோபித்து வந்த சூரனுடைய உடல்
இரண்டு பிளவாகப் பிரியும்படிச் செய்து, அவன் அலறி விழும்படி
வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே,

மணி மகுட(ம்) வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த
மலைய வி(ல்)லின் நாயகன் தன்
... அழகிய முடியாகிய சடையில்,
கொன்றை, அறுகம்புல், பிறைச் சந்திரன், கங்கை இவற்றை அணிந்துள்ள,
(மேரு) மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது

ஒரு பாக மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே
வளர்ந்து
... ஒரு பாகத்தில் உள்ள, மலை அரசனாகிய பர்வத
ராஜனுடைய மகளான, பார்வதியின் செல்லக் குழந்தை என்னும்படி
வளர்ந்து,

மயிலை நகர் வாழ வந்த பெருமாளே. ... திருமயிலைத்தலம்
சிறப்புடன் வாழும்படியாக அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.


* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.661  pg 2.662  pg 2.663  pg 2.664 
 WIKI_urai Song number: 696 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 692 - iNaiyadhu iladhAm (thirumayilai)

iNaiyathila thAmi raNdu kayalkaLena vEpu raNdu
     irukuzhaiyin meetha darnthu ...... amarAdi

ilakusilai vELthu rantha kaNaiyathilu mEsi Rantha
     irunayanar vAri Nangu ...... mathapArap

paNaimulaiyin meetha Nintha tharaLamaNi yAarthu langu
     paruvarathi pOla vantha ...... vilaimAnAar

payilunadai yAlu zhanRu avarkaLida mOka menRa
     padukuzhiyi lEma yangi ...... vizhalAmO

kaNakaNena veera thaNdai saraNamathi lEvi Langa
     kalapamayil mElu kantha ...... kumarEsA

kaRuvivaru cUra nanga mirupiLava thAka viNdu
     kathaRivizha vEle Rintha ...... murukOnE

maNimakuda vENi konRai aRukumathi yARa Nintha
     malaiyavili nAya kanRan ...... orupAka

malaiyaraiyan mAthu thantha siRuvanena vEva Larnthu
     mayilainakar vAzha vantha ...... perumALE.

......... Meaning .........

iNaiyathu ilathAm iraNdu kayalkaL enavE puraNdu: Their eyes roll like two matchless kayal fish;

iru kuzhaiyin meethu adarnthu amar Adi: they extend all the way up to their ears waging war with them;

ilaku silai vEL thurantha kaNai athilumE siRantha iru nayanar: their two eyes are sharper than the flowery arrows shot by Manmathan (God of Love) holding his bow prominently;

vAr iNangum athi pAram paNai mulaiyin meethu aNintha tharaLa maNi Ar: their heavy bosom, covered by tight-fitting blouse, are adorned with pearl necklaces;

thulangu paruva rathi pOla vantha vilai mAnAr: they come out looking elegant like youthful Rathi, (beautiful consort of Manmathan); these are the whores;

payilu nadaiyAl uzhanRu avarkaLidam mOkam enRa padu kuzhiyilE mayangi vizhalAmO: am I to be ensnared in their profession, roaming in a daze and falling into the bottomless pit of lust for them?

kaNakaNa ena veera thaNdai saraNam athilE viLanga kalapa mayil mEl ukantha kumarEsA: The anklets of bravery on Your hallowed feet make the sound of "gaNa gaNa" as You happily mount the peacock with beautiful plumes!

kaRuki varu cUran angam iru piLavathAka viNdu kathaRi vizha vEl eRintha murukOnE: When the demon SUran charged in the war angrily, You wielded the spear in such a way that his body was split into two and he fell down screaming!

maNi makuda(m) vENi konRai aRuku mathi ARu aNintha malaiya vi(l)lin nAyagan than: On His pretty matted hair, He wears kondRai (Indian laburnum) flower, aRugam (cynodon) grass, crescent moon and river Gangai; He held the Mount MEru as His bow; that Lord SivA

oru pAka malai araiyan mAthu ukantha siRuvan enavE vaLarnthu: has Goddess PArvathi, daughter of Mountain-King ParvatharAjan, concorporate as a part of His body; You grew up as Her favourite child!

mayilai nakar vAzha vantha perumALE.: You are seated in Thirumayilai* making that place prosperous, Oh Great One!


* Thirumayilai is Mylapore, in the heart of the city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 692 iNaiyadhu iladhAm - thirumayilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]