திருப்புகழ் 691 இகல வருதிரை  (திருமயிலை)
Thiruppugazh 691 igalavaruthirai  (thirumayilai)
Thiruppugazh - 691 igalavaruthirai - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

இகல வருதிரை பெருகிய சலநிதி
     நிலவு முலகினி லிகமுறு பிறவியி
          னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர

இசையு முனதிரு பதமலர் தனைமன
     மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
          ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உமைபாகர்

மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
     மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
          வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர்

மயம தடரிட இடருறு மடியனு
     மினிமை தருமுன தடியவ ருடனுற
          மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே

சிகர தனகிரி குறமக ளினிதுற
     சிலத நலமுறு சிலபல வசனமு
          திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத

சிரண புரணவி தரணவி சிரவண
     சரணு சரவண பவகுக சயனொளி
          திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத

அகர உகரதி மகரதி சிகரதி
     யகர அருளதி தெருளதி வலவல
          அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே

அழகு மிலகிய புலமையு மகிமையும்
     வளமு முறைதிரு மயிலையி லநுதின
          மமரு மரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இகல வருதிரை பெருகிய சலநிதி ... மாறுபட்டு எழும் அலைகள்
பெருகிய கடல்கள்

நிலவும் உலகினில் இகமுறு பிறவியின் இனிமை பெற ...
சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப் பெறவும்,

வரும் இடருறும் இருவினை யதுதீர ... வருகின்ற துன்பத்தோடு
மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கவும்,

இசையு முனதிரு பதமலர் தனை ... இணைந்த உன்னிரு பாத
மலர்களை

மனமிசைய நினைகிலி ... மனம் பொருந்த நினையாதவன் யான்.

இதமுற வுனதருள் இவர வுருகிலி ... இன்பமுற உன் திருவருள்
கைகூட உருகித் துதியாதவன் யான்.

அயர்கிலி தொழுகிலி ... பக்தியால் தளர்ச்சி அடையாதவனும்,
வணங்காதவனும் யான்.

உமைபாகர் மகிழு மகவென அறைகிலி ... உமாதேவியைப்
பாகத்தில் வைத்த சிவபிரான் மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன்
யான்.

நிறைகிலி மடமை குறைகிலி ... திருப்தியே இல்லாத, பேதைமை
குறையாதவன் யான்.

மதியுணர் வறிகிலி ... அறிவும், தெளிவும் அறியாதவன் யான்.

வசன மறவுறு மவுனமொடு உறைகிலி ... பேச்சற்றுப்போய் மெளன
நிலையினில் இருக்காதவன் யான்.

மடமாதர் மயமது அடரிட ... அழகிய பெண்களின் மயக்கும்
எழிலானது மனத்தில் இடம் பிடிக்க,

இடருறு மடியனும் ... அதனால் துன்பம் அடைகிற அடியேனும்,

இனிமை தருமுனது அடியவ ருடனுற மருவ ... இன்பத்தை
நல்கும் உன் அடியார்களுடன் கூடிப் பொருந்தும்

அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே ... திருவருளைத்
தரும் உன் கிருபைக்கு ஆளாகும் ஒரு நாளும் கிடைக்குமோ?

சிகர தனகிரி குறமகள் இனிதுற ... உயர்ந்த மார்பினளான
குறப்பெண் வள்ளி இனிமை அடையுமாறு

சிலத நலமுறு சிலபல வசனமு ... தோழன் போன்று அவளிடம்
நன்மைமிக்க சில பல வார்த்தைகளை

திறைய அறைபயில் அறுமுக ... அமுதமென அள்ளி வீசி, பேச்சுப்
பயின்ற ஆறுமுக வேளே,

நிறைதரும் அருள் நீத ... நிறைந்து விளங்கும் அருள் கொண்ட
நீதிமானே,

சிரண புரண விதரண ... பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள
குணமுடையோனே,

விசிரவண சரணு சரவண பவகுக ... நிரம்பிய கேள்வி உடையவனே,
அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில்
தோன்றியவனே, குகனே,

சயனொளி திரவ பர ... சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே,

அதி சிர மறை முடிவுறு பொருள் நீத ... அதிக மேன்மை
உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே,

அகர உகரதி மகரதி சிகரதி ... அகரம் போன்ற முதற்பொருளே,
உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத்
தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,

யகர அருளதி தெருளதி ... யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே,
அதிகமான அருளே, மிகுந்த ஞானமே,

வலவல அரண முரணுறும் ... மிகுந்த வல்லமை படைத்த காவற்
கோட்டையில் இருந்த பகைமை பூண்ட

அசுரர்கள் கெடஅயில் விடுவோனே ... அசுரர்கள் அழியும்படி
வேலைச் செலுத்தியவனே,

அழகும் இலகிய புலமையு மகிமையும் ... அழகும், விளங்கும் கல்வி
ஞானமும், பெருமையும்,

வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம் ... செழிப்பும் நிலைத்த
மயிலாப்பூரில் நாள் தோறும்

அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே. ... வீற்றிருக்கும்,
ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே,
அடியவர்கள்தம் பெருமாளே.


* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.659  pg 2.660  pg 2.661  pg 2.662 
 WIKI_urai Song number: 695 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 691 - igala varuthirai (thirumayilai)

igala varuthirai perugiya jalanidhi
     nilavu mulaginil igamuRu piRaviyin
          inimai peRavarum idaruRum iruvinai ...... adhu theera

isaiyum unadhiru padhamalar thanai manam
     isaiya ninaigili idhamuRa unadharuL
          ivara urugili ayargili thozhugili ...... umai bAgar

magizhu magavena aRaigili niRaigili
     madamai kuRaigili mathi uNar vaRigili
          vachana maRavuRu mavunamod uRaigili ...... mada mAdhar

mayama dhadarida idaruRu madiyanum
     inimai tharum unadh adiyavar udanuRa
          maruva aruL tharu kirupaiyin maliguvadh ...... oru nALE

sikara thanagiri kuRamagaL inidhuRa
     siladha nalamuRu sila pala vachanamu
          thiRaiya aRai payil aRumuga niRaitharum ...... aruNeetha

siraNa puraNa vitharaNa visiravaNa
     saraNu saravaNabava guha jayan oLi
          thirava paravathi siram aRai mudivuRu ...... poruNeetha

akara ukaradhi makaradhi sikaradhi
     akara aruLadhi theruLadhi vala vala
          araNa muraNuRum asurargaL keda ayil ...... viduvOnE

azhagum ilagiya pulamaiyu mahimaiyum
     vaLamum uRai thiru mayilaiyil anudhinam
          amarum hara hara siva sutha adiyavar ...... perumALE.

......... Meaning .........

igala varuthirai perugiya jalanidhi: The seas, full of waves rising to different heights,

nilavu mulaginil igamuRu piRaviyin: surround the world in which this birth has taken place.

inimai peRavarum idaruRum iruvinai adhu theera: To experience happiness and to get rid of the good and bad deeds along with sufferings,

isaiyum unadhiru padhamalar thanai manam: one has to contemplate Your two lotus feet

isaiya ninaigili idhamuRa unadharuL: in deep meditation; but I never do that.

ivara urugili: I never completely melt, seeking Your grace;

ayargili thozhugili: I am never devoted to You to the point of exhaustion; nor do I worship You;

umai bAgarmagizhu magavena aRaigili: I never praise Your name addressing You as the child cuddled by SivA whose left side is occupied by UmAdEvi;

niRaigili madamai kuRaigili mathi uNar vaRigili: I am never content; my ignorance is unlimited; I am not wise nor do I have clarity of thought;

vachana maRavuRu mavunamod uRaigili: I have never practised silence which is the culmination of speechlessness;

mada mAdhar mayama dhadarida idaruRu madiyanum: I am the miserable chap haunted by the lasciviousness caused by young women's seductive beauty;

inimai tharum unadh adiyavar udanuRa: (Despite all my shortcomings), Will it be possible for me to attain the blissful nearness of Your devotees?

maruva aruL tharu kirupaiyin maliguvadh oru nALE: Will there be a day when I shall mingle with them (Your devotees), due to Your grace?

sikara thanagiri kuRamagaL inidhuRa: To enthrall VaLLi, the damsel of the KuRavas, with robust bosoms,

siladha nalamuRu sila pala vachanamu: You befriended her and chose several soothing words

thiRaiya aRai payil aRumuga: sprinkled in nectar, to address her lovingly, Oh Lord with six faces!

niRaitharum aruNeetha: You are the embodiment of abundant grace and justice!

siraNa puraNa vitharaNa: You are majestic, consummate and compassionate!

visiravaNa: You are extremely knowledgeable!

saraNu saravaNabava guha: You are the ultimate refuge for all! You emerged from the great pond of reeds (Saravanam), Oh GuhA!

jayan oLi thirava para: You are the essence of effulgent SivA and You are supreme!

athi sira maRai mudivuRu poru Neetha: You are the greatest; You are the ultimate substance of justice in the scriptures!

akara ukaradhi: You represent the first letter "a" by being the foremost; You represent "U" for UmAdEvi, the symbol of Sivasakthi;

makaradhi sikaradhi: You burn down the evils of arrogance and possessiveness; You are the Pure Wisdom representing SivA.

akara aruLadhi theruLadhi: You reside inside the soul of JeevAthma; Your compassion is abundant; You are omniscient!

vala vala araNa muraNuRum asurargaL keda ayil viduvOnE: You wielded the spear to destroy all the demons who were hostile and well entrenched in their mighty fortresses!

azhagum ilagiya pulamaiyu mahimaiyum vaLamum uRai: There is plenty of natural beauty, a lot of knowledge, fame and prosperity in

thiru mayilaiyil anudhinam amarum: Mylapore* where You reside every day!

hara hara siva sutha adiyavar perumALE.: You are the son of SivA around whom there is always the vibrant chanting of Hara Hara! You belong to Your devotees, Oh Great One!


* Mylapore (Thirumayilai), is in the heart of the city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 691 igala varuthirai - thirumayilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]