திருப்புகழ் 690 அறமிலா அதி  (திருமயிலை)
Thiruppugazh 690 aRamilAadhi  (thirumayilai)
Thiruppugazh - 690 aRamilAadhi - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானன தந்தத் ...... தனதான

......... பாடல் .........

அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே

அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே

திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே

விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா

விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே

மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா

மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அறமிலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே ... தர்மமே இல்லாத
மிக்க பாவம் நிறைந்த வஞ்சனை கொண்ட செயல்களாலே,

அடியனேன்மெலிவாக ... அடியவனாகிய நான் உடல் தளர்ச்சி
அடைந்தும்

மனஞ் சற்று இளையாதே ... மனம் மட்டும் கொஞ்சமும் சோர்வு
அடையாமல்,

திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள்கூட ... வெற்றி விளங்கும்
உனது செவ்விய பாதமலர்களை வணங்கிப் போற்றி உன் திருவருள்
கிடைக்குமாறு

தினமுமே மிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே ... நாள்தோறும்
நல்ல வாழ்வு ஏற்படும் இன்பத்தைத் தந்தருள்வாயாக.

விறல் நி சாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா ...
வீரமுள்ள அசுரர்களின் படைகள் பயப்படும்படியாகப் போர் புரிந்த
வேலனே,

விமல, மாது அபிராமி தருஞ்செய்ப் புதல்வோனே ...
பரிசுத்தமானவனே, தாயார் அபிராமி தந்த செந்நிறத்துக் குழந்தையே,

மறவர் வாணுதல் வேடைகொளும் பொற்புயவீரா ... வேடர்
குலத்தில் ஒளிபடைத்த நெற்றியுள்ள வள்ளிமீது வேட்கை கொண்ட
அழகிய தோள்கள் அமைந்த வீரனே,

மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே. ... திருமயிலை*
மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.


* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.657  pg 2.658  pg 2.659  pg 2.660 
 WIKI_urai Song number: 694 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 690 - aRamilA adhi (thirumayilai)

aRamilA athi pAthaka vanjath ...... thozhilAlE

adiyanEn melivAgi manam sa ...... triLaiyAdhE

thiRal kulAviya sEvadi vandhiththu ...... aruLkUda

dhinamumE miga vAzhvuRum inbaith ...... tharuvAyE

viRal nisAcharar sEnaigaL anjap ...... porumvElA

vimala mAdh abirAmi tharum seyp ...... pudhalvOnE

maRavar vANudhal vEdai koLum por ...... buya veerA

mayilai mA nagar mEviya kandhap ...... perumALE.

......... Meaning .........

aRamilA athi pAthaka vanjath thozhilAlE: By carrying on with treacherous, sinful and unrighteous acts,

adiyanEn melivAgi manam sa triLaiyAdhE: the lowly person, that I am, lost a lot of weight, but did not lose even a little of my will to sin.

thiRal kulAviya sEvadi vandhiththu: Only through the worship of Your victorious lotus feet,

aruLkUda dhinamumE miga vAzhvuRum inbaith tharuvAyE: my grace can increase everyday if You bless me with a blissful life.

viRal nisAcharar sEnaigaL anjap porumvElA: The mighty asuras (demons) were scared away in the battlefield by Your spear, Oh VElA.

vimala mAdh abirAmi tharum seyp pudhalvOnE: Oh, the Purest One, You are the fair son of Mother AbhirAmi (PArvathi)!

maRavar vANudhal vEdai koLum por buya veerA: You are the great warrior with broad shoulders who wooed the bright and dazzling damsel VaLLi, of the hunter tribe.

mayilai mA nagar mEviya kandhap perumALE.: You chose as Your abode, Thirumayilai*, Oh KanthA, the Great One!


* Thirumayilai is Mylapore, in the heart of the city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 690 aRamilA adhi - thirumayilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]