திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 686 கரிய முகில் போலும் (திருவொற்றியூர்) Thiruppugazh 686 kariyamugilpOlum (thiruvotRiyUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான ......... பாடல் ......... கரியமுகில் போலு மிருளளக பார கயல்பொருத வேலின் ...... விழிமாதர் கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர களபமுலை தோய ...... அணையூடே விரகமது வான மதனகலை யோது வெறியனென நாளு ...... முலகோர்கள் விதரணம தான வகைநகைகள் கூறி விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய் அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர் அவர்கள்புக ழோத ...... புவிமீதே அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ அமரர்குல நேச ...... குமரேசா சிரகரக பாலர் அரிவையொரு பாகர் திகழ்கநக மேனி ...... யுடையாளர் திருவளரு மாதி புரியதனில் மேவு ஜெயமுருக தேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர் ... கரு நிறமான மேகத்தைப் போன்று இருண்ட கூந்தல் பாரத்தையும், கயல் மீனுக்கு இணையான வேல் போன்ற கண்களையும் உடைய விலைமாதர்களின் கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய ... காமப் புணர்ச்சியில் தோய்ந்து, கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள மார்பகங்களில் படிய, அணை ஊடே விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என ... படுக்கையில் காம சம்பந்தமான இன்பரச சாஸ்திரங்களைப் படிக்கின்ற வெறி கொண்டவன் இவன் என்று என்னை நாளும் உலகோர்கள் விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள் தாராய் ... நாள் தோறும் உலகத்தினர் சுருக்கு என்று தைக்கும்படியாக பரிகாசப் பேச்சுக்ளைப் பேசி இகழ்வதற்கு முன்னர் ஞான கடாட்சத்தைத் தந்து அருள்வாயாக. அரி பிரமர் தேவர் முனிவர் சிவ யோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே அதிக நடராஜர் பரவு குரு ராஜ ... திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், சிவ யோகிகள் ஆகிய இவர்கள் உனது திருப்புகழைப் பரவி ஓத, பூமியில் மேம்பட்டு விளங்கும் நடராஜனாகிய சிவ பெருமான் போற்றும் குரு ராஜ மூர்த்தியே, அமரர் குல நேச குமரேசா ... தேவர் குலத்துக்கு அன்பனே, குமரேசனே, சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர் ... பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், உமா தேவியை தனது இடது பக்கத்தில் வைத்திருப்பவரும், விளங்கும் பொன் நிறமான மேனியை உடையவரும் ஆகிய சிவ பெருமான் வீற்றிருக்கும் திரு அருளும் ஆதி புரி தனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே. ... செல்வம் கொழிக்கும் ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில்* விளங்கும் வெற்றி முருகனே, தேவர்கள் பெருமாளே. |
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.651 pg 2.652 WIKI_urai Song number: 690 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 686 - kariya mugil pOlum (thiruvotRiyUr) kariyamukil pOlu miruLaLaka pAra kayalporutha vElin ...... vizhimAthar kalavikaLil mUzhki mrukamathapa deera kaLapamulai thOya ...... aNaiyUdE virakamathu vAna mathanakalai yOthu veRiyanena nALu ...... mulakOrkaL vitharaNama thAna vakainakaikaL kURi viduvathanmun njAna ...... aruLthArAy aripiramar thEvar munivarsiva yOkar avarkaLpuka zhOtha ...... puvimeethE athikanada rAjar paravuguru rAja amararkula nEsa ...... kumarEsA sirakaraka pAlar arivaiyoru pAkar thikazhkanaka mEni ...... yudaiyALar thiruvaLaru mAthi puriyathanil mEvu jeyamuruka thEvar ...... perumALE. ......... Meaning ......... kariya mukil pOlum iruL aLaka pAra kayal porutha vElin vizhi mAthar: These whores have a thick tuft of hair, dark as the black cloud, and spear-like sharp eyes, resembling the kayal fish; kalavikaLil mUzhki mrukamatha padeera kaLapa mulai thOya: "indulging in carnal pleasure with them and immersing in their bosom smeared with the paste of musk and sandalwood, aNai UdE virakam athuvAna mathana kalai Othu veRiyan ena: he is an inveterate maniac, studying erotic texts upon their beds" - so am I described nALum ulakOrkaL vitharaNam athAna vakai nakaikaL kURi viduvathan mun njAna aruL thArAy: in a taunting manner by the people of the world everyday; before I become a laughing stock, kindly grant me the true knowledge! ari piramar thEvar munivar siva yOkar avarkaL pukazh Otha puvi meethE athika nadarAjar paravu guru rAja: Lord VishNu, BrahmA, the celestials, the sages and the SivA yogis sing Your glory while Lord SivA, who stands above all on this earth, worships You, Oh Majestic Master! amarar kula nEsa kumarEsA: You are the friend of the entire clan of the DEvAs, Oh Lord KumarA! sira kara kapAlar arivai oru pAkar thikazh kanaka mEni udaiyALar: He holds in His hand the skull of BrahmA and has UmAdEvi concorporate on the left side of His body that is of a golden complexion; that Lord SivA has an abode in this place; thiru aruLum Athi puri thanil mEvu jeya muruka thEvar perumALE.: this town is known as the primordial shrine (Adhipuri), also called ThiruvotRiyUr* where You are seated triumphantly, Oh MurugA! You are the Lord of the celestials, Oh Great One! |
* ThiruvotRiyur is 3 miles north of Chennai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |