திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 676 வடிவது நீலம் (திருவாலங்காடு) Thiruppugazh 676 vadivadhuneelam (thiruvAlangkadu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான ......... பாடல் ......... வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில் முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் ... உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன் கோட்டி விடு பாசம் ... வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட ... மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி, மாயம் தீட்டி உயிர் போ முன் ... உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து ... இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, உன் அடியேனை பரிவோடு நாளும் காத்து ... உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட் கொண்டு அருள்வாயே ... விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக. முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் ... தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு* என்னும் ஊரில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே ... முதன்மையான நடனம்** ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி ... நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய் ... முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி ... இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து, எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி ... எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி ... விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி, இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே. ... தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே. |
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை. |
** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.625 pg 2.626 WIKI_urai Song number: 680 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 676 - vadivadhu neelam (Thiruvalankadu) vadivathu neelam kAtti mudivuLa kAlan kUtti varavidu thUthan kOtti ...... vidupAsam makanodu mAman pAtti muthaluRa vOrum kEttu mathikeda mAyan theetti ...... yuyirpOmun padimisai thALum kAtti yudaluRu nOypaN dEtRa pazhavinai pAvan theerththu ...... nadiyEnaip parivodu nALum kAththu virithami zhAlam kUrththa parapukazh pAden RAtko ...... daruLvAyE mudimisai sOman cUtti vadivuLa Alam kAttil muthirnada mAdum kUththar ...... puthalvOnE murukavizh thArum cUtti yoruthani vEzham kUtti muthalmaRa mAnin sErkkai ...... mayalkUrvAy idiyena vEkam kAtti neditharu cUlam theetti yethirporu cUran thAkka ...... varaEki ilakiya vElkoN dArththu udaliru kURan RAkki yimaiyava rEthan theerththa ...... perumALE. ......... Meaning ......... vadivathu neelam kAtti mudivuLa kAlan kUttivara vidu thUthan: He is the messenger, with a blue complexion, specially sent by the God of Death to take my life during my final hour; kOtti vidu pAsam: when the rope (of attachment) hurled by him tightens (i.e. at the time of my death), makanodu mAman pAtti muthal uRavOrum kEttu mathi keda: my son, uncle, grandmother and all other relatives hear about my impending death, and their mind is blown away with grief; mAyam theetti uyir pO mun: before my delusion about the world intensifies prior to my life being snuffed out, padi misai thALum kAtti udal uRu nOy paNdu EtRa pazha vinai pAvam theerththu: kindly let me have the vision of Your hallowed feet in this world so that my physical ailments and bad deeds carried over from the karma of previous births are all destroyed; un adiyEnai parivOdu nALum kAththu: please protect me, Your humble devotee, at all times and viri thamizAl am kUrththa para pukazh pAdu enRu At koNdu aruLvAyE: take charge of me blessing me with the power to sing Your great glory in the widely acclaimed and beautiful language of Tamil! mudi misai sOman sUtti vadivuLa AlangkAttil muthir nadamAdum kUththar puthalvOnE: Wearing the crescent moon upon His matted hair, He dances one of the foremost dances* in this lovely town of ThiruvAlangkAdu**; He is the great Cosmic Dancer, NadarAjar, and You are His son! muruku avizh thArum sUtti oru thani vEzham kUtti muthal: Once, You wore a fragrant garland of flowers and appealed for the unique appearance of the great elephant (VinAyagar) maRa mAnin sErkkai mayal kUrvAy: when You intensely loved to be united with VaLLi, the damsel of the hunters! idi ena vEkam kAtti nedi tharu sUlam theetti: He dashed to the battlefield with the speed of thunder, holding in his hand the trident reeking with the stench of flesh, ethir poru sUran thAkka vara Eki: and confronted You; You went to the war to face that demon SUran ilakiya vEl koNdu Arththu udal iru kURu anRu Akki: and attacked him with Your elegant spear which You wielded on him with a deafening noise, splitting his body into two, imaiyavar Etham theerththa perumALE.: thereby eradicating the misery of the celestials, oh Great One! |
* The Cosmic dance in ThiruvAlangkAdu is known as Oordhva ThANdavam. It involves raising the left leg fully up to the sky, with the right foot affixed to the ground. This is also known as SamhAra ThANdavam. This dance is known to sever the cycle of death and birth. |
** ThiruvAlankAdu is 37 miles west of Chennai. Of the five holy stages on which Lord SivA danced, here is the Stage of Ruby - Rathnasabhai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |