திருப்புகழ் 657 சிகரிகள் இடிய  (வெள்ளிகரம்)
Thiruppugazh 657 sigarigaLidiya  (veLLigaram)
Thiruppugazh - 657 sigarigaLidiya - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

சிகரிக ளிடிய நடநவில் கலவி
     செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல்

திருமுக சமுக சததள முளரி
     திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல்

அகிலடி பறிய எறிதிரை யருவி
     ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன்

றகிலமு முணர மொழிதரு மொழியி
     னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ

நிகரிட அரிய சிவசுத பரம
     நிர்வச னப்ர சங்க ...... குருநாதா

நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
     நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம

வெகுமுக ககன நதிமதி யிதழி
     வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே

விகசித கமல பரிமள கமல
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிகரிக ளிடிய நடநவில் கலவி ... அஷ்ட கிரிகளும்
பொடிபடும்படியாக நடனமாடும் கலாப மயில்,

செவ்வி மலர்க்க டம்பு ... அன்றலர்ந்த புதிய கடப்பமலர்,

சிறுவாள்வேல் ... சிறிய வாள், வேல்,

திருமுக சமுக சததள முளரி ... ஆறு திருமுகங்களின் சேர்க்கையாம்
நூறு இதழ்கள் உள்ள தாமரைகள்,

திவ்ய கரத்திணங்கு பொருசேவல் ... திவ்யமான கரத்திலே
பொருந்திய போர் செய்யவல்ல சேவல், (இவையெல்லாம் விளங்க)

அகிலடி பறிய எறிதிரை யருவி ... அகில் மரத்தின் வேரைப் பறித்து
எறியும் அலைவீசும் அருவிகள் உள்ள,

ஐவனவெற்பில் வஞ்சி கணவா ... நெல் விளையும் வள்ளிமலையின்
வஞ்சிக்கொடியனன வள்ளியின் கணவா,

என்றகிலமு முணர மொழிதரு மொழியினல்லது ... என்று
உலகெலாம் உணரக் கூறும் சொற்களால் அல்லது

பொற்பதங்கள் பெறலாமோ ... உனது அழகிய திருவடிகளைப் பெற
முடியுமோ?

நிகரிட அரிய சிவசுத பரம ... ஒப்பிடற்கு அரியரான சிவபிரானின்
சேயே, பரமனே,

நிர்வசனப்ர சங்க குருநாதா ... வாக்குக்கு எட்டாததான பிரணவ
உபதேசத்தைச் செய்த குருநாதனே,

நிரைதிகழ் பொதுவர் நெறிபடு ... பசுக்கூட்டங்களைக் கொண்ட
இடையர்கள் செல்லும் வழியில் உள்ள

பழைய நெல்லி மரத்தமர்ந்த அபிராம ... பழைய நெல்லி மரத்தின்*
கீழே வீற்றிருந்த அழகனே,

வெகுமுக ககன நதிமதி ... ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய
கங்கை நதியையும், பிறையையும்,

இதழி வில்வ முடித்த நம்பர் பெருவாழ்வே ... கொன்றையையும்,
வில்வத்தையும் சடையில் முடித்த நம் சிவபெருமானின் பெருஞ்
செல்வமே,

விகசித கமல பரிமள கமல ... மலர்ந்த தாமரைகளும், நறுமணம்
மிகுந்த தாமரைகளும் நிறைந்த

வெள்ளி கரத்த மர்ந்த பெருமாளே. ... வெள்ளிகரத்தில்**
வீற்றிருக்கும் பெருமாளே.


* சுவாமிமலைக்கு அருகே பூமிதேவியானவள் பார்வதியின் சாபத்தால் பலகாலம்
இருந்து, ஷண்முகனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். முருகனை
விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே நெல்லிமரமாக நின்றாள்
- சுவாமிமலை மகாத்மியம்.


** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.574  pg 2.575  pg 2.576  pg 2.577 
 WIKI_urai Song number: 661 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 657 - sigarigaL idiya (veLLigaram)

sikarigaL idiya natanavil kalavi
     sevvi malark kadambu ...... siRuvALvEl

thirumuka samuka sathadhaLa muLari
     divya karath iNangu ...... porusEval

akiladi paRiya eRithirai aruvi
     aivana veRpil vanji ...... kaNavAendr

akilamum uNara mozhitharu mozhiyin
     alladhu poRpadhangaL ...... peRalAmO

nigarida ariya sivasutha parama
     nirvachana prasanga ...... gurunAthA

niraithigazh podhuvar neRipadu pazhaiya
     nelli marath amarndha ...... abirAmA

vegumuka gagana nadhimadhi yidhazhi
     vilva mudiththa nambar ...... peruvAzhvE

vikasitha kamala parimaLa kamala
     veLLi karath amarndha ...... perumALE.

......... Meaning .........

sikarigaL idiya natanavil kalavi: "The pretty-tailed Peacock that danced so hard as to reduce the eight mountains to powder;

sevvi malark kadambu siRuvALvEl: the freshly blossomed kadappa flowers; the short sword; the Spear;

thirumuka samuka sathadhaLa muLari: the concord of six lovely faces, each one resembling a lotus with a hundred petals;

divya karath iNangu porusEval: the staff held in one hand, bearing the fiery rooster;

akiladi paRiya eRithirai aruvi: the forceful waterfall that uproots the sandal tree

aivana veRpil vanji kaNavA: flows through VaLLimalai, fertile with paddy fields, where lives the slim vanji (rattan reed) creeper-like damsel, VaLLi; and You are her consort!"

endru akilamum uNara mozhitharu mozhiyin: These are some of the plaudits from of the entire world, praising You with feeling!

alladhu poRpadhangaL peRalAmO: Without such prayers, how can I ever attain Your golden feet?

nigarida ariya sivasutha parama: You are the son of SivA, who is peerless. You are paramount!

nirvachana prasanga gurunAthA: Your teaching (of the PraNava ManthrA) is beyond comprehension through words, Oh Master!

niraithigazh podhuvar neRipadu pazhaiya nelli: There is an old Nelli tree in the pathway of cowherds tending flocks of cows,

marath amarndha abirAmA: and You took Your seat happily under that tree*, Oh Handsome One!

vegumuka gagana nadhimadhi yidhazhi: River Ganga with a thousand faces, the crescent, kondRai (Indian laburnum) leaf,

vilva mudiththa nambar peruvAzhvE: and vilvam (bael) leaf adorn the matted locks of hair of our beloved Lord SivA; and You are His Treasure!

vikasitha kamala parimaLa kamala: There are widely blossomed lotuses and fragrant ones

veLLi karath amarndha perumALE.: in VeLLigaram**, which is Your abode, Oh Great One!


* At a place near SwAmimalai, once, BhUmAdEvi (Mother Earth), who was cursed by PArvathi, worshipped Lord Murugan by way of atonement. After her penance was over, BhUmAdEvi was reluctant to part company with Murugan and stood there as a Nelli Tree - The story of SwAmimalai.


** VeLLigaram is 12 miles west of VEppagunta Rail Station, 22 miles north of ArakkOnam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 657 sigarigaL idiya - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]