திருப்புகழ் 653 வேழம் உண்ட  (காசி)
Thiruppugazh 653 vEzhamuNda  (kAsi)
Thiruppugazh - 653 vEzhamuNda - kAsiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்தன தானன ...... தனதான
     தான தந்தன தானன ...... தனதான

......... பாடல் .........

வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
     மேனி கொண்டு வியாபக ...... மயலூறி

நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
     நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே

மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
     வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா

காள கண்ட னுமாபதி ...... தருபாலா
     காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேழ முண்ட விளாகனி யதுபோல ... வேழம்* என்ற பழங்களுக்கு
ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல

மேனி கொண்டு வியாபக மயலூறி ... உள்ளிருக்கும் சத்து நீங்கிய
உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி,

நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி ... தினமும் அறிவின்மை
மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து,

நானு நைந்து விடாதருள் புரிவாயே ... நானும் மெலிந்து
வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக.

மாள அன்று அமணீசர்கள் கழுவேற ... முன்பு சமணக் குருக்கள்
கழுவில் ஏறி இறக்கும்படியாக

வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா ... வாது செய்து வென்ற
(சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே,

காள கண்ட னுமாபதி தருபாலா ... விஷமுண்ட கண்டனாகிய
உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே,

காசி கங்கையில் மேவிய பெருமாளே. ... கங்கைநதிக்
கரையிலுள்ள காசி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* வேழம் என்ற தேரை விளாம்பழத்துக்குள் பாய்ந்தால், பழம் உள்ளீடு
இல்லாமல் வெறும் ஓடாகப் போய்விடும்.


** காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.
ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.566  pg 2.567 
 WIKI_urai Song number: 657 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 653 - vEzham uNda (kAsi)

vEzham uNda viLA kani adhupOla
     mEni koNdu viyApaka ...... mayalURi

nALu mindargaL pOl miga ayarvAgi
     nAnu naindhu vidAdh aruL ...... purivAyE

mALa andrama NeesargaL kazhu vERa
     vAdhil vendra sikAmaNi ...... mayil veerA

kALa kaNtan umApathi tharubAlA
     kAsi gangaiyil mEviya ...... perumALE.

......... Meaning .........

vEzham uNda viLA kani adhupOla: Like the viLAm fruit afflicted with the disease called vEzham*,

mEni koNdu viyApaka mayalURi: my body has become a mere shell, and lust has spread throughout the body.

nALu mindargaL pOl miga ayarvAgi: Everyday, my ignorance has grown stronger like the stupidity of fools, and I have become physically weaker.

nAnu naindhu vidAdh aruL purivAyE: Please do not let me deteriorate any further and bestow Your grace on me.

mALa andrama NeesargaL kazhu vERa: Once, the samaNa saints went to the gallows to die

vAdhil vendra sikAmaNi mayil veerA: after losing their debate with You, the victorious apostle of wisdom, (when You came as ThirugnAna Sambandhar and a warrior on the peacock)!

kALa kaNtan umApathi tharubAlA: You are the son of SivA, the consort of UmAdEvi, and who has a black stain of poison in His throat.

kAsi gangaiyil mEviya perumALE.: You have Your abode at KAsi**, on the banks of the Ganga river, Oh Great One!


* VEzham is a viral disease that affects the viLAm fruits drying up all the flesh inside, leaving the fruit as a mere shell.


** KAsi, also known as VAranAsi, is on the banks of River Ganges in Uttar Pradesh. It is one of seven holy places proffering Eternal Bliss.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 653 vEzham uNda - kAsi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]