(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 638 உடுக்கத் துகில்  (கதிர்காமம்)
Thiruppugazh 638 udukkaththugil  (kadhirgAmam)
Thiruppugazh - 638 udukkaththugil - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத் தனதான தானன
     தனத்தத் தனதான தானன
          தனத்தத் தனதான தானன ...... தனதான

......... பாடல் .........

உடுக்கத் துகில்வேணு நீள்பசி
     யவிக்கக் கனபானம் வேணுநல்
          ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
     இருக்கச் சிறுநாரி வேணுமொர்
          படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங்

கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
     மயக்கக் கடலாடி நீடிய
          கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம்

க்ருபைச்சித் தமுஞான போதமு
     மழைத்துத் தரவேணு மூழ்பவ
          கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே

குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக்

குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
          குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ

அடிக்குத் திரகார ராகிய
     அரக்கர்க் கிளையாத தீரனு
          மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென்

றருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்துற் றவர்மேல் மனோகர
          மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உடுக்கத் துகில் வேணும் ... உடுப்பதற்கு உடைகள் வேண்டும்.

நீள்பசியவிக்கக் கனபானம் வேணும் ... பெரும் பசியைத் தணிக்க
உயர்ந்த சுவைநீர் வேண்டும்.

நல்ஒளிக்குப் புனலாடை வேணும் ... தேகம் நல்ல ஒளிவீசும்
பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும்.

மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் ... உடல் நோயை
அகற்ற மருந்துகள் வேண்டும்.

உள்இருக்கச் சிறுநாரி வேணும் ... வீட்டுக்குள் இருக்க இளமையான
மனைவி வேண்டும்.

படுக்க யொர் தனிவீடு வேணும் ... படுத்துக்கொள்ள ஒரு தனி
வீடும் வேண்டும்.

இவ் வகையாவுங் கிடைத்து ... இத்தனை நலன்கள் யாவும் எனக்குக்
கிடைக்கப் பெற்று

க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி ... குடும்பத்தனாகி, அந்த
வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி,

நீடிய கிளைக்குப் பரிபாலனாய் ... பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக்
காப்பாற்றுபவனாகி

உயிர் அவமேபோம் ... முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும்.

க்ருபைச்சித்தமு ஞான போதமும் ... கருணை உள்ளத்தையும்
சிவஞான போதத்தையும்

அழைத்துத் தரவேணும் ... நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள
வேண்டும்.

ஊழ்பவ கிரிக்குட் சுழல்வேனை ... ஊழ்வினையால் வரும் பிறவி
என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை

ஆளுவது ஒருநாளே ... ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ?

குடக்குச் சிலதூதர் தேடுக ... மேற்குத் திசையில் சில தூதர்கள்
தேடட்டும் என்றும்,

வடக்குச் சிலதூதர் நாடுக ... வடக்குத் திசையில் சில தூதர்கள்
தேடட்டும் என்றும்,

குணக்குச் சிலதூதர் தேடுகவென மேவி ... கிழக்குத் திசையில் சில
தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி

குறிப்பிற் குறிகாணு மாருதி ... குறிப்பினால் குறிப்பை உணரும்
அனுமனை

இனித் தெற்கொரு தூது போவது ... இனி தெற்கு திசையில்
தூதனாக அனுப்ப வேண்டியது.

குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ ... சொல்லி வைத்த
குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும்
தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்ரீவன் சொல்லி
அனுப்ப),

அடிக் குத்திரகாரராகிய ... அடியோடு வஞ்சகர்களாகிய

அரக்கர்க்கு இளையாத தீரனும் ... அரக்கர்களிடம் தோற்று
இளைக்காத தீரனாகிய அனுமனும்

அலைக்கு அப்புறமேவி ... அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள
இலங்கைக்குச் சென்று,

மாதுறு வனமேசென்று ... சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை
அடைந்து,

அருட்பொற் றிருவாழி மோதிரமளித்து ... ராமபிரானது அழகிய
பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து

உற்றவர்மேல் மனோகரம் அளித்து ... மீண்டு வந்த அந்த
அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி*,

கதிர்காம மேவிய பெருமாளே. ... கதிர்காமத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.


* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி,
கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம
வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1043  pg 1.1044  pg 1.1045  pg 1.1046 
 WIKI_urai Song number: 420 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 638 - udukkath thugil (kadhirgAmam)

udukka thugil vENu neeL pasi
     avikka ganapAnam vENunal
          oLikkup punalAdai vENu mey ...... uRunOyai

ozhikkap parikAram vENum uL
     irukkach chiRunAri vENumor
          padukkath thani veedu vENum ...... ivvagai yAvum

kidaiththuk gruhavAsi yAgiya
     mayakkak kadalAdi neediya
          kiLaikkup paripAlanAy uyir ...... avamEpOm

krupai chith thamu nyAna bOdhamum
     azhaiththuth tharavENu mUzhbava
          girikkuL suzhal vEnai ALuvadh ...... orunALE

kudakku chila dhUthar thEduga
     vadakku chila dhUthar nAduga
          kuNakku chiladhUthar thEduga ...... enamEvi

kuRippiR kuRikANu mAruthi
     iniththeR koru dhUthu pOvadhu
          kuRippiR kuRi pOna pOdhilum ...... varalAmO

adikkuth thirakAra rAgiya
     arakkark kiLaiyAdha dheeranum
          alaikkap puRamEvi mAdhuRu vanamE ...... sendru

aruL poR thiruvAzhi mOdhiram
     aLiththutr avarmEl manOharam
          aLiththuk kadhir kAmamEviya ...... perumALE.

......... Meaning .........

udukka thugil vENum: I need clothes to wear;

neeL pasiavikka ganapAnam vENum: I need sumptuous drinks to quench my thirst and hunger;

naloLikkup punalAdai vENum: For a bright appearance, I need water to bathe and colourful clothes to wear;

mey uRunOyai ozhikkap parikAram vENum: To heal my bodily diseases, I need medicines and remedies;

uLirukkach chiRunAri vENum: I need a young wife to take care of my home;

padukkath thani or veedu vENum: I need a private house for my sleeping pleasure;

ivvagai yAvum kidaiththuk gruhavAsi yAgiya: and if I get all these I need, I become a "Family Man"!

mayakkak kadalAdi: Then I drown in the deep sea of illusion!

neediya kiLaikkup paripAlanAy uyir avamEpOm: I become the guardian of an extended family, and lo, there goes my life into utter waste!

krupai chiththamu nyAna bOdhamum azhaiththuth tharavENum: You must call me unto Yourself specially to provide me with a compassionate heart and Knowledge of SivA.

Uzhbava girikkuL suzhal vEnai: I am caught reeling in the whirlwind of fate in this mountain-valley of birth;

ALuvadh orunALE: and will You please take me over one of these days? (Hereafter SwAmigaL describes HanumAn's role in RAmAyaNA, with particular reference to KadhirgAmam)

kudakku chila dhUthar thEduga: "Some messengers should proceed Westward to look for (SitA);

vadakku chila dhUthar nAduga: some should proceed Northward to search;

kuNakku chiladhUthar thEduga enamEvi: and some should go Eastward" said Sugreeva sending his messengers.

kuRippiR kuRikANu mAruthi: As for HanumAn, who is so sharp as to read between the lines,

iniththeR koru dhUthu pOvadhu: he was chosen as the head-messenger heading south;

kuRippiR kuRi pOna pOdhilum varalAmO: and his brief was not to return without any positive information (about SitA Devi).

adikkuth thirakAra rAgiya arakkark kiLaiyAdha dheeranum: The great warrior HanumAn, who is never intimidated into losing to the cunning and vicious RAkshasAs,

alaikkap puRamEvi: jumped across the wavy sea to the other side

mAdhuRu vanamE sendru: reached AsOkavanam, where SitA DEvi was imprisoned,

aruL poR thiruvAzhi mOdhiram aLiththu: and handed to her SriRAmA's divine and lovely golden ring.

utravarmEl manOharam aLiththu: Back from his successful mission, HanumAn was blessed by You blissfully* at

kadhir kAmamEviya perumALE.: KadhirgAmam, Your favourite abode, Oh Great One!


* According to history of KadhirgAmam, in Sri LankA, HanumAn proceeded to destroy AsOkavanam, set fire to LankA and took bath dipping into river MAnikka Ganga near KadhirgAmam. Then he worshipped Lord MurugA at KadhirgAmam and secured His blessings before returning to SriRama.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 638 udukkath thugil - kadhirgAmam


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top