திருப்புகழ் 626 நேசா சாரா  (குன்றக்குடி)
Thiruppugazh 626 nEsAsArA  (kundRakkudi)
Thiruppugazh - 626 nEsAsArA - kundRakkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தந்தன தத்தன
     தானா தானா தந்தன தத்தன
          தானா தானா தந்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

நேசா சாரா டம்பர மட்டைகள்
     பேசா தேயே சுங்கள மட்டைகள்
          நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே

நீயே நானே யென்றொரு சத்தியம்
     வாய்கூ சாதோ துங்க படத்திகள்
          நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும்

ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
     மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
          காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம்

ஆகா தாவே சந்தரு திப்பொழு
     தோகோ வாவா வென்று பகட்டிக
          ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ

பேசா தேபோய் நின்றுறி யிற்றயிர்
     வாயா வாவா வென்று குடித்தருள்
          பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது

பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
     வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
          பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ...... மருகோனே

மாசூ டாடா டும்பகை யைப்பகை
     சூரா ளோடே வன்செரு வைச்செறு
          மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே

வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
     தேனா றேசூழ் துங்க மலைப்பதி
          மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நேச(ம்) ஆசார(ம்) ஆடம்பர(ம்) மட்டைகள் பேசாதே ஏசும்
க(ள்)ள மட்டைகள்
... அன்பு, ஆசாரம், ஆடம்பரம் இவை பொருந்திய
பயனிலிகள், பேசாமலிருந்து கொண்டே பிறரைப் பழிக்கின்ற கள்ள
வீணிகள்,

நீசாளோடேயும் பழகிக் கவர் பொருளாலே நீயே நானே
என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள்
... கீழ்க்
குலத்து இழிந்தோர்களோடும் பழக, பறிக்கின்ற பொருளாலே, உன் மேல்
ஆணை, என் மேல் ஆணை என்று ஆணையிட்டு வாய் கூசாமல்
பேசுகின்ற வஞ்சக எண்ணத்தினர்,

நேராலே தான் நின்று பிலுக்கிகள் ... எதிரிலேயே நின்று தளுக்கு,
ஆடம்பரம் செய்பவர்கள்,

எவர் மேலும் ஆசா பாசா தொந்தரை இட்டவர் மேல்
வீழ்வார் பால் சண்டிகள்
... யார் மேலும் ஆசையாகிய பந்தத்தைக்
காட்டித் தொந்தரவு செய்து, அவர்கள் மேல் விழுபவர்களிடம்
சண்டித்தனம் செய்பவர்கள்,

கட்டழகு ஆயே மீ தோலெங்கு(ம்) மினுக்கிகள் ... நல்ல
பேரழகுடனே மேலே தோல் எங்கும் மினுக்குபவர்கள்,

வெகு மோகம் ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது ஓகோ
வா வா என்று பகட்டிகள்
... அதிக மோகம் வைக்கலாகாது, காம
மயக்கம் இப்போது உண்டாகிறது, ஓகோ வாரும் வாரும் என்று (ஒரு
பக்கம்) கூறி (மறு பக்கம்) வஞ்சிப்பவர்கள்,

ஆகா(த) மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ ...
பொருந்தாத மோகம் தரும் வீணர்கள் ஆகிய வேசைகளின் அருகிலும்
உறவு சம்பந்தம் ஆகுமோ?

பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆ ஆ ஆ ஆ என்று
குடித்து
... எவருக்கும் தெரியாமல் போய் நின்று, உறியிலிருந்த தயிரை
ஆஹா ஆஹா என்று பருகி,

அருள் பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது பேழ்
வாய் வேதாளம் பகடு ஐப் பகுவாய் நீள் மானாளும்
... அருள்
பேர் அளவுக்கு மாத்திரம் (உண்மையில் அருள் இல்லாது) வைத்து,
பெரும் கம்சன் அனுப்பி எதிரில் விடுத்த தூதுவளாகிய, பெரிய
வாயைக் கொண்ட (பூதனை என்னும்) பேய், பரந்த வியக்கத் தக்க
பிளந்த வாயைக் கொண்ட பெரிய பெண்ணும்

சரளத்தோடு பேய் ஆ(னா)ள் போர் வென்று எதிரிட்டவன்
மருகோனே
... எளிதாகவே பேய் ரூபம் எடுத்தவளாகிய அந்த
அரக்கியின் போரை வென்று எதிர் நின்றவனாகிய கண்ணனின் மருகனே,

மாசு ஊடாடும் பகையைப் பகை சூராளோடே வன் செருவைச்
செறு மா சூரா
... குற்றத்தில் ஊடாடி ஆடுகின்ற பகைவர்களையும்,
பகைத்து நின்ற சூரர்களையும் வலிய போரில் அழித்த மகா சூரனே,

பார் எங்கும் அருள் பொலி முருகோனே ... பூமி முழுவதும் அருள்
பாலித்து விளங்கும் முருகனே,

வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறே சூழ் துங்க
மலைப் பதி மாயூரா
... வானாடு முதலான ஏழு பூமியும் புகழ்பெற்று
விளங்கும் தேனாறு என்னும் நதி சூழ்ந்த பரிசுத்த மயூரமலைப் பதியில்
உறைபவனே,

வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே. ... தழைக்கும்
குன்றக்குடியில்* வீற்றருளும் பெருமாளே.


* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே
7 மைலில் உள்ளது.
இதற்கு மயூரமலை என்ற பெயரும் உண்டு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1019  pg 1.1020  pg 1.1021  pg 1.1022 
 WIKI_urai Song number: 408 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 626 - nEsA sArA (kundRakkudi)

nEsA chArA dampara mattaikaL
     pEsA thEyE sungaLa mattaikaL
          neesA LOdE yumpazha kikkavar ...... poruLAlE

neeyE nAnE yenRoru saththiyam
     vAykU sAthO thungkapa daththikaL
          nErA lEthA ninRupi lukkikaL ...... evarmElum

AsA pAsA thontharai yittavar
     mElveezh vArpAl chaNdikaL kattazha
          kAyE meethO lengumi nukkikaL ...... vekumOkam

AkA thAvE santharu thippozhu
     thOkO vAvA venRupa kattika
          LAkA mOkA vampikaL kittilu ...... muRavAmO

pEsA thEpOy ninRuRi yitRayir
     vAyA vAvA venRuku diththaruL
          pErA lEneeL kanjanvi duththethir ...... varuthUthu

pEzhvAy vEthA Lampaka daippaku
     vAyneeL mAnA Lumchara Laththodu
          pEyA nALpOr venRethi rittavan ...... marukOnE

mAcU dAdA dumpakai yaippakai
     cUrA LOdE vanseru vaiccheRu
          mAcU rApA renguma rutpoli ...... murukOnE

vAnA dEzhnA dumpukazh petRidu
     thEnA REcUzh thungama laippathi
          mAyU rAvAzh kunRaitha zhaiththaruL ...... perumALE.

......... Meaning .........

nEsa(m) AsAra(m) Adampara(m) mattaikaL pEsAthE Esum ka(L)La mattaikaL: These useless women display their love, techniques and vanity openly; even while keeping mum, these wicked and wasteful women abuse others;

neesALOdEyum pazhakik kavar poruLAlE neeyE nAnE enRu oru saththiyam vAy kUsAthu Othum kapadaththikaL: even if their suitors are from a low lineage, these treacherous whores swear saying "I promise upon my honour; I promise upon your honour" without any compunction whatsoever in order to grab their money;

nErAlE thAn ninRu pilukkikaL: they stand right in front (of their suitors) and show off their pomp;

evar mElum AsA pAsA thontharai ittavar mEl veezhvAr pAl saNdikaL: showing feigned affection, they disturb anyone and when their suitors jump on them, they become standoffish;

kattazhaku AyE mee thOlengu(m) minukkikaL: they adorn their beautiful body, their skin glittering with perfumed powder;

vekumOkam AkAth(u) AvEsantharuth(u) ippozhuth(u) OkO vAvA venRu pakattikaL: saying on the one hand "Do not be too passionate; You are now making me dizzy with love; Oh, come on, come on", they, on the other hand, betray;

AkA(tha) mOkA vampikaL kittilum uRavu AmO: These are vain people offering unworthy passion; how can any relationship be nurtured with such whores?

pEsAthE pOy ninRu uRiyil thayir A A A A enRu kudiththu: Unknown to anyone, He quietly stood there and gobbled up the curd in the vessel hanging from the roof, making the sound "aha, aha";

aruL pErAlE neeL kanjan viduththa ethir varu thUthu pEzh vAy vEthALam pakadu aip pakuvAy neeL mAnALum: when the huge king Kamsan, not having an iota of compassion, sent, as an emissary, a giant-sized woman (PUthanai) who was a large-jawed devil with her dreadful mouth wide open,

saraLaththOdu pEy A(nA)L pOr venRu ethirittavan marukOnE: He easily won over the battle waged by that fiendish woman; He is Krishna, and You are His nephew!

mAsu UdAdum pakaiyaip pakai cUrALOdE van seruvaic cheRu mA cUrA: You challenged the enemies, who were delving and dancing in sins, and the hostile demons to the war and destroyed them all, Oh Great Warrior!

pAr engum aruL poli murukOnE: You protect the entire world with Your compassion and grace, Oh Lord MurugA!

vAn nAdu Ezh nAdum pukazh petRidu thEn ARE cUzh thunga malaip pathi mAyUrA: The river ThEnARu is famous in all the seven worlds including the celestial land; that river flows around the pure hill called MayUramalai, that is Your abode;

vAzh kunRai thazhaiththu aruL perumALE.: This town KundRakkudi is a flourishing place where You are seated, Oh Great One!


* KundRakkudi is in RAmanAthapuram district, 7 miles west of KAraikudi.
It has another name called MayUramalai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 626 nEsA sArA - kundRakkudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]