திருப்புகழ் 623 அழகு எறிந்த  (குன்றக்குடி)
Thiruppugazh 623 azhagueRindha  (kundRakkudi)
Thiruppugazh - 623 azhagueRindha - kundRakkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்த தந்த தனன தந்த தந்த
     தனன தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
     அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே

அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
     டணிச தங்கை கொஞ்சு ...... நடையாலே

சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
     தொடுமி ரண்டு கண்க ...... ளதனாலே

துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
     துயரை யென்றொ ழிந்து ...... விடுவேனோ

எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
     யெதிர டைந்தி றைஞ்சல் ...... புரிபோதே

இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
     மொழிய வென்ற கொண்டல் ...... மருகோனே

மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
     மநுவி யம்பி நின்ற ...... குருநாதா

வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
     மலைவி ளங்க வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச
இன்சொல் மொழியாலே
... அழகு வீசும் நிலாப் போன்ற முக
வட்டத்தினின்றும் வருகின்ற அமுதம் போன்ற திரண்ட இனிய உரைப்
பேச்சினாலும்,

அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி
சதங்கை கொஞ்சு நடையாலே
... பாதத்தில் நெளிந்து கிடக்கும்
தண்டையும், கலில் என்று சப்தம் செய்யும் சிலம்பும், அழகிய சதங்கையும்
கொஞ்சி ஒலிக்கின்ற நடையாலும்,

சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு
கண்கள் அதனாலே
... மனம் நீர்ச்சுழி போல் சுழற்சி உறும்படிச் செய்யும்
விஷம் கலந்து செலுத்தும் கண்களினாலும்,

துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை
என்று ஒழிந்து விடுவேனோ
... ஒன்றோடொன்று இணைந்து
நெருங்கும் மார்பகங்கள் பொருந்தி உள்ள விலைமாதர்களின் காமத்
துயரை என்றைக்கு ஒழித்து விடுவோனோ?

எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து
இறைஞ்சல் புரி போதே
... (அடைக்கலம் புக) எழுந்து வந்து
கும்பகர்ணனின் இளைய தம்பியாகிய விபீடணன் ராமனது எதிரில் வந்து
வணங்கிய அந்தச் சமயத்திலேயே,

இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற
கொண்டல் மருகோனே
... மனம் மகிழ்ந்து இலங்கை அசுரர்களின்
(ராணுவ) ரகசியங்களைச் சொல்ல, வெற்றி பெற்ற மேக நிறத்தினனாகிய
ராமனின் மருகனே,

மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி
நின்ற குருநாதா
... மழு ஆயுதத்தை விரும்பி ஏந்தும் சிவபிரான்
ஆர்வத்துடன் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,

வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த
பெருமாளே.
... வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து,
பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே.


* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே
7 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1009  pg 1.1010  pg 1.1011  pg 1.1012 
 WIKI_urai Song number: 405 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 623 - azhagu eRindha (kundRakkudi)

azhake Rintha canthra mukava danga lantha
     amutha punja insol ...... mozhiyAlE

adithu vaNda thaNdai kalile nunjci lampo
     daNisa thangai konju ...... nadaiyAlE

suzhiye Rinthu nenju suzhala nanja Nainthu
     thodumi raNdu kaNka ...... LathanAlE

thuNaine rungu kongai maruvu kinRa peNkaL
     thuyarai yenRo zhinthu ...... viduvEnO

ezhuthu kumpa kanpi niLaiya thampi nampi
     yethira dainthi Rainjal ...... puripOthE

ithama kizhnthi langai yasura rantha ranga
     mozhiya venRa koNdal ...... marukOnE

mazhuvu kantha sengai aranu kanthi Rainja
     manuvi yampi ninRa ...... gurunAthA

vaLami kuntha kunRa nakarpu ranthu thunga
     malaivi Langa vantha ...... perumALE.

......... Meaning .........

azhaku eRintha canthra muka vadam kalantha amutha punja insol mozhiyAlE: The sweet talk like concentrated nectar emanating from their round face that looks like the beautiful moon,

adi thuvaNda thaNdai kalil enum silampodu aNi sathangai konju nadaiyAlE: the lilting gait with the sound of the dainty thandai and anklet on their feet, along with the cadence of the chathangai (another kind of anklet),

suzhi eRinthu nenju suzhala nanju aNainthu thodum iraNdu kaNkaL athanAlE: the sharp looks blended with poison shot by their eyes making my mind rotate like a whirlpool,

thuNai nerungu kongai maruvukinRa peNkaL thuyarai enRu ozhinthu viduvEnO: and the closely united and confronting bosom of these whores are making me miserable with lust; when shall I get rid of this distress?

ezhuthu kumpakan pin iLaiya thampi nampi ethir adainthu iRainjal puri pOthE: When Vibheeshanan, the younger brother of KumbakarNan, came forward to seek refuge from Rama and prostrated at His feet, at that very moment,

itham makizhnthu ilangai asurar antharangam mozhiya venRa koNdal marukOnE: he disclosed happily the inner (military) secrets of the demons of LankA, which led to the victory of Rama, with the hue of dark cloud; You are the nephew of that Rama!

mazhu ukantha sem kai aran ukanthu iRainja manu iyampi ninRa kurunAthA: When Lord SivA, who gladly holds the weapon mazhu (pickaxe) in His hand, beseeched You willingly, You preached to Him the PraNava ManthrA, Oh Great Master!

vaLam mikuntha kunRa nakar puranthu thunga malai viLanga vantha perumALE.: You are the protector of the fertile town of KundRakkudi* where You are seated on its impeccable mountain, Oh Great One!


* KundRakkudi is in RAmanAthapuram District, 7 miles west of KAraikkudi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 623 azhagu eRindha - kundRakkudi


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]