![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திருப்புகழ் 598 காலனிடத்து (திருச்செங்கோடு) Thiruppugazh 598 kAlanidaththu (thiruchchengkodu) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு ![]() ![]() ![]() | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தனத் ...... தனதான ......... பாடல் ......... காலனிடத் ...... தணுகாதே காசினியிற் ...... பிறவாதே சீலஅகத் ...... தியஞான தேனமுதைத் ...... தருவாயே மாலயனுக் ...... கரியானே மாதவரைப் ...... பிரியானே நாலுமறைப் ...... பொருளானே நாககிரிப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... காலனிடத்து அணுகாதே ... யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும், காசினியிற் பிறவாதே ... இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும், சீலஅகத்திய ஞான ... நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற தேனமுதைத் தருவாயே ... தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க. மாலயனுக்கு அரியானே ... திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே, மாதவரைப் பிரியானே ... சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே, நாலுமறைப் பொருளானே ... நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே, நாககிரிப் பெருமாளே. ... நாககிரியாகிய திருச்செங்கோட்டில்* எழுந்தருளியுள்ள பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.945 pg 1.946 WIKI_urai Song number: 380 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | 'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | ![]() to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
![]() | திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | 'மயிலாடுதுறை' திரு சொ. சிவகுமார் Thiru S. Sivakumar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 598 - kAlanidaththu (thiruchchengkOdu) kAlanidath ...... thaNugAdhE kAsiniyiR ...... piRavAdhE seela agath ...... thiya nyAna thEnamudhai ...... tharuvAyE mAlayanukku ...... ariyAnE mAthavaraip ...... piriyAnE nAlu maRaip ...... poruLAnE nAgagirip ...... perumALE. ......... Meaning ......... kAlanidath thaNugAdhE: In order that I never reach the place of Death-God (Yaman), kAsiniyiR piRavAdhE: and in order that I never take another birth in this world, seela agaththiya nyAna: I need the Great Knowledge that You preached to the virtuous sage, Agasthiyar, thEnamudhai tharuvAyE: which is as sweet as the Divine Nectar. mAlayanukku ariyAnE: You are beyond the reach of Vishnu and BrahmA! mAthavaraip piriyAnE: You never part company with great sages who have done penance. nAlu maRaip poruLAnE: You are the substance of the all four VEdAs (Rik, Yajur, SAma and AtharvaNa). nAgagirip perumALE.: You have Your abode at NAgagiri (known as ThiruchchengkOdu*), Oh Great One! |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | ![]() | ![]() ![]() |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |