திருப்புகழ் 590 கலக்கும் கோது  (திருச்செங்கோடு)
Thiruppugazh 590 kalakkumkOdhu  (thiruchchengkodu)
Thiruppugazh - 590 kalakkumkOdhu - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தந் தானன தனத்தந் தானன
     தனத்தந் தானன ...... தனதான

......... பாடல் .........

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
     கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
     கடைக்கண் பார்வையி ...... லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
     விருப்பஞ் சாலவு ...... முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
     விடற்கஞ் சேலென ...... அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
     அறுக்குங் கூரிய ...... வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
     யடுக்கும் போதக ...... முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
     திருச்செங் கோபுர ...... வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
     திருச்செங் கோடுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு
மொழியாலே
... கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க வடிகட்டி
எடுக்கபட்ட சிறப்பான கரும்பின் சாறு என்று சொல்லும்படி
(இனிக்கும்) பேச்சினால்

கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக் கண்
பார்வையில் அழியாதே
... கருத்தையும், நோக்கத்தையும்
உருக்குகின்ற பாவிகளாகிய விலைமாதர்களுடைய கடைக்கண்
பார்வையில் அழிந்து விடாமல்,

விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும்
உடையேன்
... (அத்தகைய மயக்கத்தை) நீக்கவல்ல ஞான
உபதேசத்தை, பிறருக்குக் கிட்டாத வகையில் நான் ஒருவனே
சிறப்பாகப் பெற்று விளங்க விருப்பம் மிகவும் கொண்டுள்ள

நான் வினைக் கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை
விடற்கு அஞ்சேல் என அருள்வாயே
... நான் ஊழ் வினையின்
பயனாக மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும்
பொருட்டு அபயம் என்று நீஅருள்வாயாக.

அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய
வடி வேலா
... (தேவர் முதலியோரை) வருத்தி வந்த அசுரர்கள் குலத்துப்
படைகளை அறுத்த கூர்மையான அழகிய வேலை ஏந்தியவனே,

அழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் போதகம்
உடையோராம்
... உன்னை அழைத்து உனது சிறப்பான திருவடிச்
செந்தாமரைகளைப் பற்றியுள்ள ஞானத்தை உடையவர்களாகிய

சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக ... சிலருக்கு தாமதம்
இன்றி அப்பொழுதே வீடு பேறு அளிக்கும் குரு மூர்த்தியே,

திருச் செம் கோபுர வயலூரா ... அழகிய செவ்விய கோபுரங்களை
உடைய வயலூரானே,

திதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய திருச் செங்கோடு
உறை பெருமாளே.
... நீ காத்து அளிக்கும் இப் பூமியிடத்தே சிறப்பு
மிகுந்து விளங்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.919  pg 1.920  pg 1.921  pg 1.922 
 WIKI_urai Song number: 372 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 590 - kalakkum kOdhu (thiruchchengkOdu)

kalakkung kOthaRa vadikkunj ceeriya
     karuppanj cARenu ...... mozhiyAlE

karuththum pArvaiyu murukkum pAvikaL
     kadaikkaN pArvaiyi ...... lazhiyAthE

vilakkum pOthaka menakken REpeRa
     viruppanj cAlavu ...... mudaiyEnAn

vinaikkoN dEmana ninaikkun theemaiyai
     vidaRkanj cElena ...... aruLvAyE

alaikkun thAnavar kulaththin sEnaiyai
     aRukkung kUriya ...... vadivElA

azhaiththun seeriya kazhaRcen thAmarai
     yadukkum pOthaka ...... mudaiyOrAm

silarkkan REkathi palikkun thEsika
     thiruchcheng kOpura ...... vayalUrA

thithikkum pArvayin mathippuN dAkiya
     thiruchcheng kOduRai ...... perumALE.

......... Meaning .........

kalakkum kOthu aRa vadikkum seeriya karuppanjcARu enu mozhiyAlE: Their speech is sweet like the filtered juice of sugar-cane from which the toxic fibres have been fully removed;

karuththum pArvaiyum urukkum pAvikaL kadaik kaN pArvaiyil azhiyAthE: their stares simply melt one's thoughts and looks; I do not wish to be destroyed by the killing gazes from the corner of the eyes of those whores;

vilakkum pOthakam enakku enRE peRa viruppam sAlavum udaiyEn: instead, I would very much desire to achieve true knowledge that alone could destroy such delusions; such knowledge should be specifically meant for me, (not being made available to others).

nAn vinaik koNdE mana(m) ninaikkum theemaiyai vidaRku anjsEl ena aruLvAyE: In order that I could eradicate such vicious thoughts that haunt me due to my bad deeds (karma) in the past and redeem myself, kindly bless me by offering refuge!

alaikkum thAnavar kulaththin sEnaiyai aRukkum kUriya vadi vElA: You destroyed with Your sharp spear, the armies of the demons who harassed the celestials!

azhaiththu un seeriya kazhal sem thAmarai adukkum pOthakam udaiyOrAm: Seeking Your hallowed lotus feet, Your devotees have been enlightened with true spiritual knowledge which is available only at Your feet;

silarkku anRE kathi palikkum thEsika: and to some of those devotees You grant instantaneous liberation, Oh Great Master!

thiruc chem kOpura vayalUrA: You belong to VayalUr, famous for its beautiful and lofty temple towers!

thithikkum pAr vayin mathippu uNdAkiya thiruc chengOdu uRai perumALE.: You are seated in ThiruchchengkOdu* which has the highest honour in this world that is kindly protected by You, Oh Great One!


* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 590 kalakkum kOdhu - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]