திருப்புகழ் 589 இடம் பார்த்து  (திருச்செங்கோடு)
Thiruppugazh 589 idampArththu  (thiruchchengkodu)
Thiruppugazh - 589 idampArththu - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
     தனந்தாத் தனத்தம் ...... தனதான

......... பாடல் .........

இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
     றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
     கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
     துளங்காத் திடப்புன் ...... கவிபாடி

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
     துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ

கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
     கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய்

கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
     துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா

அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
     கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி

அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
     கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று ...
எவரிடம் போனால் பணம் கிடைக்கும் என்று தக்க இடம் பார்த்து, இடம்
பார்த்து, இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரத்தல்
தொழிலை மேற்கொண்டு,

இணங்காப் பசிப் பொங்கி அனல் மூழ்கி ... அத்தொழிலில்
இணங்கி (மனம் பொருந்தி), பசியாகிய பொங்கி எழுகின்ற நெருப்பில்
மூழ்கி,

இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு
இரங்கார்க்கு
... அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை
பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம்
இல்லாதவரிடம்,

இயல் தண் தமிழ் நூலின் உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா ...
தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட
மனத்துடன் பாட்டுக்களை அமைத்து,

தயங்காத் துளங்காத் திடப் புன் கவி பாடி ... வாட்டமுற்று மனம்
கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான
பாடல்களைப் பாடி,

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்று ஏத்து உறும் பால்
குணக்கு அன்புறலாமோ
... அச்சமுற்று ஒதுங்கி, மனம் வருந்தி,
பதுங்கியும் போய் தான் பாடிய பாடல்களைச் சொல்லிப் புகழும்
இயல்பினைக் கொண்ட குணத்துக்கு நான் ஆசை வைக்கலாமோ?

கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாட்கள்
அணைந்தாட்கு அணித் திண் புயம் ஈவாய்
... மத யானை காட்டில்
எதிர்ப்பட ஆபத்தை உணர்ந்து கொண்டவளாய் உன்னுடைய மேன்மை
பொருந்திய திருவடிகளை அணைந்த வள்ளிக்கு அழகிய வலிமையான
திருப்புயங்களைத் தந்தவனே,

கரும்போர்க்கு அரும்போரக் குளம் காட்டி கண்டு ஏத்து
செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா
... கரும்பு வில்லை உடைய
மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவபெருமான்
கண்டு போற்றும் திருச்செங்கோட்டில்* விளங்கி நிற்கும் ஒளி வீசும்
வேலனே,

அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு
அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு
... உன்னை அடைக்கலமாக
அடைந்தவர்க்கும், உனக்காக உருகி மெலிந்தவர்களுக்கும், உன்னிடம்
கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மன அமைதி
கொண்டவர்களுக்கும், பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும்,

உணற்கு ஒன்று இலதாகி அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு
இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு
... உண்பதற்கு ஒன்றும்
இல்லாதவராகி அலைகின்றவர்களுக்கும், நிலை குலைந்து
நிற்பவர்களுக்கும், கவலை உற்று வருந்துபவர்களுக்கும், துன்பம்
உற்றவர்களுக்கும்,

அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே. ... ஞானிகளுக்கும்
திருவருள் பாலிக்கும் பெருமாளே.


* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.917  pg 1.918 
 WIKI_urai Song number: 371 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 589 - idam pArththu (thiruchchengkOdu)

idampArth thidampArth thithangkEt tiranthEt
     RiNangAp pasippong ...... kanalmUzhki

iRungkAR kiRungkArk kirumpArk kunenjArk
     kirangkArk kiyataN ...... damizhnUlin

udampAt tudanpAt tiyampAth thayangAth
     thuLangAth thidappun ...... kavipAdi

othungAp pothungAp pathungAp pukanREth
     thuRumpAR kuNakkan ...... puRalAmO

kadanthOR kadanthOt RaRinthAt karunthAt
     kaNainthAt kaNiththiN ...... puyameevAy

karumpOR karumpOrk kuLangkAt tikaNdEth
     thusengOt tilniRkung ...... kathirvElA

adainthOrk kuNanthOrk kaLinthOrk kamainthOrk
     kavizhnthOrk kuNaRkon ...... RilathAki

alainthOrk kulainthOrk kinainthOrk kalanthOrk
     kaRinthOrk kaLikkum ...... perumALE.

......... Meaning .........

idam pArththu idam pArththu itham kEttu iranthu EtRu: Seeking an opportune party (who would give money) and an appropriate place, uttering words of flattery to them, resorting to the profession of begging,

iNangAp pasip pongi anal mUzhki: engaging in that vocation whole-heartedly, plunging into the leaping fire of hunger,

iRum kARku iRungkArkku irumpu Arkku nenjArkku irangArkku: (I have been addressing) people who till their very end are incapable of achieving the integrity of mind, who have a heart of hard steel without any compassion whatsoever,

iyal thaN thamizh nUlin udam pAttudan pAttu iyampA: sincerely composing fine songs in the worthy and cool language of Tamil;

thayangAth thuLangAth thidap pun kavi pAdi: with a lot of hesitation and anxiety, I sang those hollow songs albeit composed with fortitude;

othungAp pothungAp pathungAp pukanRu Eththu uRum pAl kuNakku anpuRalAmO: I used to shrink with fear, feel morose and hide myself in a corner; how could I have developed an aptitude for singing such worthless songs?

kadam thOl kadam thOtRa aRinthAtku arum thAtkaL aNainthAtku aNith thiN puyam eevAy: When the raging elephant appeared menacingly in the forest, she realised the danger and embraced Your hallowed feet; You granted Your mighty shoulders to that VaLLi!

karumpOrkku arumpOrak kuLam kAtti kaNdu Eththu sengOttil niRkum kathir vElA: He showed the fiery eye on His forehead when waging a unique war with Manmathan (God of Love) who holds a sugarcane as bow; that Lord SivA worships You in ThiruchchengkOdu* which is Your abode, Oh Lord with the dazzling spear!

adainthOrkku uNanthOrkku aLinthOrkku amainthOrkku avizhnthOrkku: To those who have surrendered to You, who melt at Your thought rendering them debilitated, who are composed and tranquil, whose heart is moved by devotion for You,

uNaRku onRu ilathAki alainthOrkku kulainthOrkku inainthOrkku alanthOrkku: who roam about in vain in search of food, who are desolate, who are saddled with worries, who lead a miserable life,

aRinthOrkku aLikkum perumALE.: and saints who have realised You, You are the benefactor, Oh Great One!


* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 589 idam pArththu - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]