திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 587 வண்டார் மதங்கள் (திருச்செங்கோடு) Thiruppugazh 587 vaNdArmadhangkaL (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான ......... பாடல் ......... வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி வந்தூரு கொண்ட ...... லதனோடும் வண்காம னம்பு தன்கால்ம டங்க வன்போர்ம லைந்த ...... விழிவேலும் கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக் கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து குன்றாம லுன்ற ...... னருள்தாராய் பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு பண்போனு கந்த ...... மருகோனே பண்சார நைந்து நண்போது மன்பர் பங்காகி நின்ற ...... குமரேசா செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில் நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற செங்கோட மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு(ம்) கொண்டல் அதனோடும் ... வண்டுகள் தேனை உண்டு மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற, மேகம் போன்ற, கூந்தலுடன், வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும் ... வளப்பம் பொருந்திய மன்மதனின் (மலர்ப்) பாணங்களின் திறனைக் குறைக்கவல்ல, வலிய போரை எதிர்த்த கண்ணாகிய வேலையும் கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி ... கொண்டு வளைத்துப் போட்டு, பார்த்தவர்கள் சஞ்சலம் அடைய நிற்கின்ற விலைமாதர்களின் தென்னங் குரும்பை ஒத்த மார்பினில் மனம் பொருந்தி, கொந்து ஆர் அரும்பு(ம்) நின் தாள் மறந்து குன்றாமல் உன் தன் அருள் தாராய் ... பூங்கொத்துக்கள் நிரம்பத் தோன்றும் உனது திருவடியை மறந்து நான் அழிவுறாமல் உனது திருவருளைத் தந்து அருளுக. பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே ... பண்டை நாள் முதலாக, சக்கரம், சங்கு இவைகளுடன் பாற்கடலில் துயில் கொள்ளும் தன்மை வாய்ந்த திருமால் மகிழும் மருகனே, பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா ... இசையுடன் இணைந்து உள்ளம் நெகிழ அன்பான துதிகளை ஓதும் அடியார்களின் பக்கத்தில் நிற்கும் குமரேசனே, செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே ... (அசுரர்களைச்) சிதற அடித்தும், தேவர்கள் கொண்டாடவும், கனகசபையில் நின்று கூத்தாடுகின்ற சிவபெருமான் உள்ளத்தில் மகிழவும் செய்த செல்வமே, செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... செந்நெல் மிகுந்து வளர, மேகங்கள் சஞ்சரிக்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.913 pg 1.914 WIKI_urai Song number: 369 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 587 - vaNdAr madhangkaL (thiruchchengkOdu) vaNdArma thanga LuNdEma yangi vanthUru koNda ...... lathanOdum vaNkAma nampu thankAlma danga vanpOrma laintha ...... vizhivElum koNdEva Lainthu kaNdArthi yanga ninRArku rumpai ...... mulaimEvik konthAra rumpu ninthALma Ranthu kunRAma lunRa ...... naruLthArAy paNdAzhi sangu koNdAzhi thangu paNpOnu kantha ...... marukOnE paNsAra nainthu naNpOthu manpar pangAki ninRa ...... kumarEsA seNdAdi yaNdar koNdAda manRil ninRAdi sinthai ...... makizhvAzhvE senchAli minji manjAdu kinRa sengOda marntha ...... perumALE. ......... Meaning ......... vaNdAr mathangaL uNdE mayangi vanthu Uru(m) koNdal athanOdum: Their cloud-like hair is swarmed by beetles inebriated after imbibing honey; vaN kAman ampu than kAl madanga van pOr malaiththa vizhi vElum: their combative and spear-like eyes are capable of overwhelming the impact of the (flowery) arrows shot by the formidable God of Love, Manmathan; koNdE vaLainthu kaNdAr thiyanga ninRAr kurumpai mulai mEvi: with these weapons, the whores hook young men disturbing the mind of their suitors; thinking about their bosom that looks like baby-coconut, konthu Ar arumpu(m) nin thAL maRanthu kunRAmal un than aruL thArAy: I neglected to remember Your hallowed feet adorned with bunches of flowers; lest I destroy myself in that process, kindly bestow Your blessings upon me! paNdu Azhi sangu koNdu Azhi thangu paNpOn ukantha marukOnE: Since times of yore, He has been holding the conch-shell and the disc in His hands, slumbering on the milky ocean; You are the favourite nephew of that Lord VishNu! paN sAra nainthu naNpu Othum anpar pangAki ninRa kumarEsA: You stand by Your devotees who movingly sing Your beloved hymns with music, Oh Lord KumarA! seNdu Adi aNdar koNdAda manRil ninRu Adi sinthai makizh vAzhvE: You destroyed the demons; the celestials hailed Your victory and Lord SivA, dancing on the golden stage, was enamoured of You, Oh Treasure! senchAli minji manju AdukinRa sengOdu amarntha perumALE.: In this place, ThiruchchengkOdu*, red rice grows abundantly and clouds hover in the sky; You are seated here, Oh Great One! |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |