திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 586 பந்து ஆடி அம் கை (திருச்செங்கோடு) Thiruppugazh 586 pandhuAdiamkai (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான ......... பாடல் ......... பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து பைந்தார் புனைந்த ...... குழல்மீதே பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற பங்கே ருகங்கொள் ...... முகமீதே மந்தார மன்றல் சந்தார மொன்றி வன்பாத கஞ்செய் ...... தனமீதே மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து மங்காம லுன்ற ...... னருள்தாராய் கந்தா அரன்றன் மைந்தா விளங்கு கன்றா முகுந்தன் ...... மருகோனே கன்றா விலங்க லொன்றாறு கண்ட கண்டா வரம்பை ...... மணவாளா செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு திண்டோள் நிரம்ப ...... அணிவோனே திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு செங்கோட மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே ... பந்தாட்டம் விளையாடி அழகிய கை நொந்துள்ள பெண்கள் ஆசையோடு அணிந்த பசுமை வாய்ந்த பூ மாலையைச் சூடிய கூந்தலின் மீதும், பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே ... அழகு நிறைந்த வண்டுகள் இசை பாடுகின்ற தாமரை போன்ற முகத்தின் மேலும், மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே ... மந்தாரம் என்னும் செவ்வரத்தம் பூவின் வாசனையைக் கொண்ட சந்தனம், முத்து மாலை இவைகளை அணிந்தனவாய், கொடிய பாவங்களுக்கு இடமான மார்பகங்களின் மேலும், மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து ... நிரம்ப ஆசை பூண்டு, ஆவி விண்டு உயிர் பிரிவது போல வருந்தி, மங்காமல் உன் தன் அருள் தாராய் ... நான் சோர்வு அடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்து அருள்வாய். கந்தா அரன் தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே ... கந்தனே, சிவபெருமானுடைய குமாரனே, விளங்குகின்ற கன்றுகளை உடைய பசுக்களுக்குப் பிரியமானவர் ஆகிய கண்ணனின் மருகனே, கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா ... கோபித்து, மலையாகிய கிரெளஞ்சம் ஒன்றை வழி திறக்கச் செய்யுமாறு வேலைச் செலுத்திய வீரனே, தேவலோகப் பெண்ணான தேவயானையின் கணவனே, செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே ... சிவந்த மகரந்தத் தூள் பொருந்திய பூங் கொத்துக்கள் அடர்ந்த கடப்ப மாலையை உறுதியுள்ள தோள்களில் மிகவும் விரும்பி அணிபவனே, திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே. ... வலிய குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.911 pg 1.912 WIKI_urai Song number: 368 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 586 - pandhu Adi am kai (thiruchchengkOdu) panthAdi yangkai nonthAr parinthu painthAr punaintha ...... kuzhhalmeethE paNpAr surumpu paNpAdu kinRa pangE rukangkoL ...... mukameethE manthAra manRal santhAra monRi vanpAtha kamcey ...... thanameethE maNdAsai koNdu viNdAvi nainthu mangAma lunRa ...... naruLthArAy kanthA aranRan mainthA viLangu kanRA mukunthan ...... marukOnE kanRA vilanga lonRARu kaNda kaNdA varampai ...... maNavALA senthA thadarntha konthAr kadampu thiNdOL nirampa ...... aNivOnE thiNkO daranga LeNkO duRangu sengOda marntha ...... perumALE. ......... Meaning ......... panthu Adi am kai nonthAr parinthu paim thAr punaintha kuzhhal meethE: These girls play ball until their beautiful hands ache; their fragrant hair which they happily adorn with fresh garlands; paNpu Ar surumpu paN pAdukinRa pangErukam koL mukam meethE: their lotus-like faces around which fine-looking beetles hum musically; manthAra manRal santhu Aram onRi van pAthakam sey thanam meethE: and their provocative bosom, bejewelled with pearl necklaces, which are smeared with the essence of fragrant red araththam flower and sandal paste, leading to sinful thoughts; maNdu Asai koNdu viNdu Avi nainthu: are pumping me up with unabated passion, rendering me miserable as if life is about to leave my body; mangAmal un than aruL thArAy: protecting me from fading away like this, kindly bless me! kanthA aran than mainthA viLangu kanRu A mukunthan marukOnE: Oh KanthA! Son of Lord SivA! You are the nephew of Lord VishNu who (as KrishNa) was the protector and lover of the cows and their calves! kanRA vilangal onRu ARu kaNda kaNdA arampai maNavALA: When Mount Krouncha stood in Your way, You were so enraged that You wielded the spear opening up a passage in the mount! You are the consort of the celestial maid, DEvayAnai! sem thAthu adarntha konthu Ar kadampu thiN thOL nirampa aNivOnE: You happily wear on Your strong shoulders the garland made of bunches of kadappa flowers with red anther-bearing stamen! thiN kOdarangaL eNkOdu uRangu sengOdu amarntha perumALE.: Strong monkeys slumber while hugging the bears in the forest of ThiruchchengkOdu*, which is Your abode, Oh Great One! |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |