திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 584 சரவண ஜாதா (விநாயகமலை-பிள்ளையார்பட்டி) Thiruppugazh 584 saravaNajAdhA (vinAyagamalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன தனதன தானா தனாதன ...... தனதான ......... பாடல் ......... சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சததள பாதா நமோநம ...... அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூரா நமோநம ...... ஜகதீச பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம ...... உமைகாளி பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய் இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென் றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும் வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர வனசர ராதார மாகிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சரவண ஜாதா நமோநம ... நாணல் வனம் சூழ்ந்த பொய்கையில் அவதரித்தவனே, போற்றி போற்றி, கருணை அதீதா நமோநம ... கருணை எல்லை கடந்த பொருளே, போற்றி போற்றி, சததள பாதா நமோநம ... நூறு இதழ்கள் கொண்ட தாமரை போன்ற திருவடி உடையவனே, போற்றி போற்றி, அபிராம ... மிக்க பேரழகு கொண்டவனே, தருணக தீரா நமோநம ... இளமையும் தைரியமும் உடையவனே, போற்றி போற்றி, நிருப அமர் வீரா நமோநம ... தலைமைச் சேனாதிபதியாகிய போர் வீரனே, போற்றி போற்றி, சமதள வூரா நமோநம ... போருக்குரிய சேனைகள் உள்ள ஊராகிய திருப்போரூரானே, போற்றி போற்றி, ஜகதீச ... உலகங்கள் அனைத்திற்கும் இறைவனே, பரம சொரூபா நமோநம ... உயர்ந்த ஞான வடிவு கொண்டவனே, போற்றி போற்றி, சுரர்பதி பூபா நமோநம ... தேவர்கள் தலைவனாம் இந்திரனுக்கும் அரசனே, போற்றி போற்றி, பரிமள நீபா நமோநம ... நறுமணம் வீசும் கடம்பமாலையை அணிந்தவனே, போற்றி போற்றி, உமைகாளி பகவதி பாலா நமோநம ... உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதி மைந்தா, போற்றி போற்றி, இகபர மூலா நமோநம ... இம்மைக்கும் மறுமைக்கும் மூலகாரணமாக இருப்பவனே, போற்றி போற்றி, பவுருஷ சீலா நமோநம ... ஆண்மையும் குணநலன்களும் உடையவனே, போற்றி போற்றி, அருள்தாராய் ... உன் திருவருளைத் தந்தருள்வாயாக. இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற ... சூரிய மண்டலமும், ஆகாயமண்டலமும், பூமியும் தூசுகள் கலந்து படிந்து மறையுமாறும், வானவர் எவர்களும் ஈடேற ... தேவர்கள் அனைவரும் உய்ந்து உயர் பதவி அடையுமாறும், ஏழ்கடல் முறையோவென்று இடர்பட் ... ஏழு சமுத்திரங்களும் துன்புற்று இது முறையோ என்று கதறவும், மாமேரு பூதர மிடிபடவேதான் ... பெரிய மேருமலை இடிபட்டு பொடிபடவும், நிசாசரர் இகல்கெட ... இரவிலே அலையும் அசுரர்கள் தங்கள் வலிமை கெடவும், மாவேக நீ(டு) அயில் விடுவோனே ... வெகு வேகமாக நீண்ட வேலாயுதத்தை விடுத்தருளியவனே, மரகத ஆகார ஆயனும் ... மரகதப் பச்சை நிறம்கொண்ட ஆயர்குலக் கொழுந்தாகிய திருமாலும், இரணிய ஆகார வேதனும் ... பொன்னிறம் கொண்ட பிரம்ம தேவனும், வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண ... நெருப்பு நிறத்தை உடைய ருத்திர மூர்த்தியும் திருவடியைப் போற்ற மயிலுறை வாழ்வே ... மயில் வாகனத்தில் எழுந்தருளி வரும் இறைவனே, விநாயக மலையுறை வேலா ... விநாயக மலை (பிள்ளையார்பட்டி) யில் வாழும் வேலாயுதக் கடவுளே, மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே. ... மலைகளில் வசிக்கும் காட்டு வேடர்களுக்கு ஆதாரமான பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.905 pg 1.906 WIKI_urai Song number: 366 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 584 - saravaNa jAdhA (piLLaiyArpatti [vinAyagamalai]) saravaNajAthA namOnama karuNai atheethA namOnama sathadhaLa pAdhA namOnama ...... abirAma tharuNaka dheerA namOnama nirupamar veerA namOnama samadhaLa vUrA namOnama ...... jagadheesa parama sorUpA namOnama surarpathi bUpA namOnama parimaLa neepA namOnama ...... umaikALi bagavathi bAlA namOnama igapara mUlA namOnama pavurusha seelA namOnama ...... aruLthArAy iraviyum AkAsa bUmiyum viraviya thULERa vAnavar evargaLum eedERa Ezhkadal ...... muRaiyOvendru idarpada mAmEru bUtharam idipada vEdhA nisAcharar igalkeda mAvEga needayil ...... viduvOnE marakatha AkAra Ayanum iraNiya AkAra vEdhanum vasuvenum AkAra eesanum ...... adipENa mayiluRai vAzhvE vinAyaga malaiyuRai vElA maheedhara vanacharar AdhAra mAgiya ...... perumALE. ......... Meaning ......... saravaNajAthA namOnama: You were born in a pond surrounded by reeds, I bow to You, I bow to You; karuNai atheethA namOnama: Your compassion is limitless, I bow to You, I bow to You; sathadhaLa pAdhA namOnama: Your feet are like lotus with a hundred petals, I bow to You, I bow to You; abirAma: You are extremely handsome! tharuNaka dheerA namOnama: You are youthful and valorous, I bow to You, I bow to You; nirupamar veerA namOnama: You are the commander-in-chief of the army, I bow to You, I bow to You; samadhaLa vUrA namOnama: You belong to ThiruppOrUr, where the troops are always combat-ready, I bow to You, I bow to You; jagadheesa: You are the Lord of the entire universe. parama sorUpA namOnama: Your form is one of Supreme Knowledge, I bow to You, I bow to You; surarpathi bUpA namOnama: You are the King of IndrA, the Leader of DEvAs, I bow to You, I bow to You; parimaLa neepA namOnama: You wear the fragrant kadamba garlands, I bow to You, I bow to You; umaikALi bagavathi bAlA namOnama: You are the son of PArvathi, known as UmA, KALi and Bhagawathi, I bow to You, I bow to You; igapara mUlA namOnama: You are the fundamental cause of this life and the life after death, I bow to You, I bow to You; pavurusha seelA namOnama: You are manly and full of virtues, I bow to You, I bow to You; aruL thArAy: You must now show Your grace to me! iraviyum AkAsa bUmiyum viraviya thULERa: The solar system, the cosmos and the earth were all covered with a variety of dust particles; vAnavar evargaLum eedERa: all the DEvAs were relieved and uplifted; Ezhkadal muRaiyOvendru idarpada: the seven seas screamed asking if it was fair for them to suffer; mAmEru bUtharam idipada vEdhA: the great mountain MEru (KailAsh) was battered and powdered; nisAcharar igalkeda mAvEga needayil viduvOnE: and the demons (asuras), roaming about at night, were debilitated when You threw Your long spear at great speed! marakatha AkAra Ayanum iraNiya AkAra vEdhanum: Vishnu, with emerald green complexion, BrahmA, with golden colour, vasuvenum AkAra eesanum adipENa: and SivA, with the complexion of fire, together worship Your feet mayiluRai vAzhvE: when You mount Your peacock! vinAyaka malaiyuRai vElA: Oh VElA, You reside at VinAyagamalai (PillaiyArpatti*)! maheedhara vanacharar AdhAra mAgiya perumALE.: You are the supporter of all the hunters of the forests living on the mountains, Oh Great One! |
* PillaiyArpatti is in Ramanathapuram District, 5 miles east of ThiruppaththUr towards KundRakkudi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |