திருப்புகழ் 582 மேகம் எனும் குழல்  (விராலிமலை)
Thiruppugazh 582 mEgamenumkuzhal  (virAlimalai)
Thiruppugazh - 582 mEgamenumkuzhal - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

மேகமெ னுங்குழல் சாய்த்திரு கோகன கங்கொடு கோத்தணை
     மேல்விழு கின்றப ராக்கினி ...... லுடைசோர

மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்
     வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை

கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி
     கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக்

கூடிமு யங்கிவி டாய்த்திரு பாரத னங்களின் மேற்றுயில்
     கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே

மோகர துந்துமி யார்ப்பவி ராலிவி லங்கலின் வீட்டதில்
     மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே

மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய
     மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல்

ஆகம டிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி
     யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர்

ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ
     னாளுல கங்குடி யேற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனகம் கொடு
கோத்து
... மேகத்தைப் போல் கருமையான கூந்தலைப் பறக்கவிட்டு,
இரண்டு தாமரை போன்ற கண்களால் கவ்வி இழுத்து,

அணை மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர ...
படுக்கையின் மேல் (காமுகரை) வீழ்த்துகின்ற விளையாட்டில் ஆடை
நெகிழ,

மேகலையும் தனி போய்த் தனியே கரணங்களும் ஆய்க் கயல்
வேல் விழியும் குவியா
... மேகலை என்னும் இடை அணியும்
தனியாகக் கழல, ஒன்றுபட்டு இந்திரியங்களும் இயங்க, கயல் மீன், வேல்
போன்ற கண்களும் குவிந்து மூட,

குரல் மயில் காடை கோகிலம் என்று எழ போய்க் கனி வாய்
அமுது உண்டு
... குரலானது மயில், காடை, குயில் என்ற பறவைகளின்
குரலில் ஒலிக்க, சென்று கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் ஊறலைப்
பருகி,

உருகாக் களி கூர உடன் பிரியாக் கலவியில் மூழ்கிக் கூடி
முயங்கி
... உருகி, மகிழ்ச்சி மிக கூடவே இருந்து, நீங்குதல் இல்லாத
இணைப்பில் முழுகி, கூடித் தழுவி,

விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில் கூரினும் அம்புய
தாள்துணை மறவேனே
... களைத்துப் போய் பாரமான
மார்பகங்களின் மீது துயிலுதல் மிகக் கொண்டாலும், என்
உறுதுணையாகிய உனது தாமரைத் திருவடிகள் இரண்டையும்
மறக்க மாட்டேன்.

மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில் மூ
உலகும் தொழுது ஏத்திட உறைவோனே
... மிக்க ஆரவாரத்துடன்
பேரிகைகள் பேரொலி செய்ய விராலி மலையின்* கோயிலில் மூன்று
உலகங்களும் தொழுது போற்ற உறைபவனே,

மூ திசை முன்பு ஒரு கால் தட மேருவை அம்பினில் வீழ்த்திய
மோகன
... வட திசையில் முன்பு ஒரு முறை மலையாகிய மேருவை
(செண்டு என்ற) அம்பால் வீழ்த்திய** வசீகரனே,

சங்க அரி வாழ்த்திட மதியாமல் ஆகம் மடிந்திட வேல்
கொண்டு சூரனை வென்று
... சங்கை ஏந்திய திருமால் உனது
வலிமையை வாழ்த்திட, (சூரனைப்) பொருட்படுத்தாமல் அவனது உடல்
அழியும்படி வேலாயுதத்தால் சூரனை வென்று,

அடல் போய்த் தணியாமையின் வென்று ... (திக்கு விஜயத்தில்)
போருக்குச் சென்று, குறைவு இல்லாதபடி (பல அசுரரையும்) வென்று,

அவனால் பிறகிடு தேவர் ஆதி இளந்தலை காத்து அரசாள
அவன் சிறை மீட்டு
... அந்தச் சூரனால் பயந்து ஓடிய தேவர்களின்
தலைவனான இந்திரனுடைய மகனாகிய ஜயந்தனைக் காத்து,
அரசாட்சி புரியும்படி அவனைச் சிறையினின்றும் விடுவித்து,

அவன் ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே. ... அவன் ஆளும்
விண்ணுலகில் மீண்டும் குடியேற்றி வைத்த பெருமாளே.


* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.


** முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய
பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடம் பொற்குவியலைக் கேட்க,
அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.901  pg 1.902 
 WIKI_urai Song number: 364 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 582 - mEgam enum kuzhal (virAlimalai)

mEkame numkuzhal sAyththiru kOkana kamkodu kOththaNai
     mElvizhu kinRapa rAkkini ...... ludaisOra

mEkalai yunthani pOyththani yEkara NangaLu mAykkayal
     vElvizhi yumkuvi yAkkural ...... mayilkAdai

kOkila menRezha pOykkani vAyamu thuNduru kAkkaLi
     kUravu danpiri yAkkala ...... viyinmUzhkik

kUdimu yangivi dAyththiru pAratha nangaLin mEtRuyil
     kUrinu mampuya thAttuNai ...... maRavEnE

mOkara thunthumi yArppavi rAlivi langalin veettathil
     mUvula kunthozhu thEththida ...... vuRaivOnE

mUthisai munporu kAtRada mEruvai yampinil veezhththiya
     mOkana sangari vAzhththida ...... mathiyAmal

Akama dinthida vERkodu cUranai venRadal pOyththaNi
     yAmaiyin venRava nARpiRa ...... kiduthEvar

Athi yiLanthalai kAththara sALa avansiRai meettava
     nALula kamkudi yEtRiya ...... perumALE.

......... Meaning .........

mEkam enum kuzhal sAyththu iru kOkanam kodu kOththu: Letting loose their cloud-like dark hair to be carried in the breeze, they hook with their gripping lotus-like eyes and

aNai mEl vizhukinRa parAkkinil udai sOra: knock down (their suitors) on the bed; in that playful game, their attire loosens;

mEkalaiyum thani pOyth thaniyE karaNangaLum Ayk kayal vEl vizhiyum kuviyA: the waist-band mEkalai comes apart; all their sensory organs act in unison; their eyes like the fish and the spear flutter and close;

kural mayil kAdai kOkilam enRu ezha pOyk kani vAy amuthu uNdu: their voice sounds like those of the peacock, the kAdai (mynah-like bird) and the cuckoo; while I imbibe the nectar of saliva oozing from their lips that look like red kovvai fruits,

urukAk kaLi kUra udan piriyAk kalaviyil mUzhkik kUdi muyangi: melt with immense delight in their company, enjoy intimate union that knows of no separation, hug them tightly,

vidAyththu iru thanangaLin mEl thuyil kUrinum ampuya thALthuNai maRavEnE: get exhausted and slumber for a while upon their big bosom, still I would never forget my safe haven, namely, Your two hallowed lotus-feet, Oh Lord!

mOkara thunthumi Arppa virAli vilangkalin veettathil mU ulakum thozhuthu Eththida uRaivOnE: Against the background sound of the loud beating of the drums, You are seated in the temple in VirAlimalai* as the people of the three worlds worship You, Oh Lord!

mU thisai munpu oru kAl thada mEruvai ampinil veezhththiya mOkana: Once, in the northern direction, You knocked down the Mount MEru with an arrow-like weapon (cheNdu**), Oh Gorgeous One!

sanga ari vAzhththida mathiyAmal Akam madinthida vEl koNdu cUranai venRu: As Lord VishNu who holds the conch-shell in His hand praised Your valour, You defeated the demon SUran in a dismissive manner by destroying his body with Your spear;

adal pOyththaNi yAmaiyin venRu: (on a victory march) You went to the war and thoroughly defeated (the demons);

avanAl piRakidu thEvar Athi iLanthalai kAththu arasALa avan siRai meettu: You protected Jayanthan, the son of IndrA, who ran away after being persecuted and terrorised by SUran; You freed him from the prison so that he could regain the celestial land

avan AL ulakam kudi EtRiya perumALE.: and You reinstated him to rule that divine kingdom, Oh Great One!


* VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.


** When Murugan incarnated as PANdiya King, Ugra Vazhudhi, there was an unprecedented famine in Madhurai. In order to bring gold from Mount Meru, the King went up to the mount and prayed. As the mount was not yielding the gold, the King was enraged and wielded his weapon, cheNdu, upon it and obtained gold.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 582 mEgam enum kuzhal - virAlimalai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]