திருப்புகழ் 575 ஐந்து பூதமும்  (விராலிமலை)
Thiruppugazh 575 aindhubUdhamum  (virAlimalai)
Thiruppugazh - 575 aindhubUdhamum - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தானன தான தனதன
     தந்த தானன தான தனதன
          தந்த தானன தான தனதன ...... தனதான

......... பாடல் .........

ஐந்து பூதமு மாறு சமயமு
     மந்த்ர வேதபு ராண கலைகளும்
          ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப

அண்ட ராதிச ராச ரமுமுயர்
     புண்ட ரீகனு மேக நிறவனும்
          அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்
     விந்து நாதமு மேக வடிவம
          தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம்

தங்க ளாணவ மாயை கருமம
     லங்கள் போயுப தேச குருபர
          சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ

வந்த தானவர் சேனை கெடிபுக
     இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
          மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி

வன்கண் வீரிபி டாரி ஹரஹர
     சங்க ராஎன மேரு கிரிதலை
          மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா

வெந்த நீறணி வேணி யிருடிகள்
     பந்த பாசவி கார பரவச
          வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும்

விண்டு மேல்மயி லாட இனியக
     ளுண்டு காரளி பாட இதழிபொன்
          விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஐந்து பூதமும் ... மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும்,

ஆறு சமயமு ... சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம்,
செளரம் என்ற ஆறு சமயங்களும்,

மந்த்ர வேத புராண கலைகளும் ... மந்திரங்களும், வேதங்களும்,
புராணங்களும்*, கலைகளும்,

ஐம்பதோர்விதமான லிபிகளும் ... ஐம்பத்தொரு விதமான
எழுத்துக்களும்,

வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் ... அனேக உருவங்களுடன்
கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும்,

உயர் புண்டரீகனு மேக நிறவனும் ... உயர்ந்த பிரமனும், கார்மேக
நிறத்துத் திருமாலும்,

அந்தி போலுருவானு ... அந்தி வானம் போன்ற செம்மேனியை
உடைய ருத்திரனும்,

நிலவொடு வெயில்காலும் ... நிலவோடு வெயிலை வீசுகின்ற

சந்த்ர சூரியர் தாமும் ... சந்திரனும், சூரியனும்,

அசபையும் ... அம்ச மந்திரமும்**

விந்து நாதமும் ... சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும்,

ஏக வடிவம் ... இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும்.

அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம் ... வேறு வேறாகப்
பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும்
சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும்.

தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் ... அவரவர்களுக்கு
உரிய ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களும் நீங்கப் பெற்று,

உப தேச குருபர சம்ப்ரதாயமொடு ... பரம்பரையாக
குருமூர்த்தியிடம் உபதேசம் பெறுகிற வழியில் நின்று,

ஏயு நெறியது பெறுவேனோ ... அந்த மரபின் நியமத்துடன் உபதேச
நெறியை யானும் பெறக் கடவேனோ?

வந்த தானவர் சேனை கெடிபுக ... போருக்காக எதிர்த்து வந்த
அசுரர் சேனைகள் அச்சம் அடைய,

இந்த்ர லோகம் விபூதர் குடிபுக ... தேவர்கள் இந்திர லோகத்துக்குச்
சென்று மீண்டும் குடியேற,

மண்டு பூத பசாசு பசிகெட ... நெருங்கி வந்த பூதங்களும்
பைசாசங்களும் பசி ஆற,

மயிடாரி வன்கண் வீரி பிடாரி ... மகிஷாசுரனை அழித்த,
கொடுமையும் வீரமும் உடையவளுமான துர்க்கை

ஹரஹர சங்கராஎன ... ஹரஹரா சங்கரா என்று துதி செய்ய,

மேரு கிரிதலை மண்டு தூளெழ ... மேரு மலையின் உச்சிச்
சிகரத்தில் மிகுந்த புழுதி உண்டாக,

வேலை யுருவிய வயலூரா ... வேலாயுதத்தை விடுத்து அருளிய
வயலூரனே,

வெந்த நீறணி வேணி யிருடிகள் ... நெருப்பில் வெந்த திருநீற்றை
அணியும், ஜடாமுடி உடைய ரிஷிகள்

பந்த பாச விகார பரவச வென்றியான ... பந்தம், பாசம் என்ற
கலக்கங்களை நீக்கின வெற்றி நிலையான

ச மாதி முறுகுகல் முழைகூடும் ... சமாதி நிலையை திண்ணிய
கற்குகையாகும் விராலிமலையில் அடைய,

விண்டு மேல்மயி லாட ... அந்த மலையின் மீது மயில் ஆட,

இனியகள் உண்டு காரளி பாட ... இனிப்பான கள்ளை உண்டு
கரிய வண்டுகள் பாட,

இதழிபொன் விஞ்ச வீசு ... கொன்றை மரங்கள் (பூவுக்குப் பதிலாக)
பொன்னை மிகுதியாகச் சொரியும்

விராலி மலையுறை பெருமாளே. ... விராலி மலையில்***
வீற்றிருக்கும் பெருமாளே.


* புராணங்கள் 18 - சைவம், பெளஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம்,
வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரம்மாண்டம், கருடம், நாரதீயம், விஷ்ணு,
பாகவதம், பிரமம், பத்மம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம்.


** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம்,
அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா - ஜீவாத்மா ஐக்கியத்தைக்
குறிப்பிடும் மந்திரம்.


*** விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.883  pg 1.884  pg 1.885  pg 1.886 
 WIKI_urai Song number: 357 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 575 - aindhu bUdhamum (virAlimalai)

aindhu bUthamum ARu samayamum
     manthra vEdha purANa kalaigaLum
          aimba thOr vidha mAna libigaLum ...... vegurUpa

aNda rAdhi sarAsa ramum uyar
     puNda reeKanu mEga niRavanum
          andhi pOluru vAnu nilavodu ...... veyil kAlum

chandhra sUriyar thAmum asabaiyum
     vindhu nAdhamum Eka vadivam
          adhan sorUpam adhAga uRaivadhu ...... siva yOgam

thangaL ANava mAyai karuma ma
     langaL pOyupa dhEsa gurupara
          sampra dhAyamo dEyu neRiyadhu ...... peRuvEnO

vandha dhAnavar sEnai kedi puga
     indhra lOkamvi bUthar kudipuga
          maNdu bUthapa sAsu pasi keda ...... mayidAri

vankaN veeri pidAri harahara
     sanka rA ena mEru girithalai
          maNdu thUL ezha vElai uruviya ...... vayalUrA

vendha neeRaNi vENi irudigaL
     bandha pAsa vikAra paravasa
          vendri yAna samAdhi muRugugal ...... muzhaikUdum

viNdu mElmayi lAda iniyakaL
     uNdu kAraLi pAda idhazhi pon
          vinja veesu virAli malai uRai ...... perumALE.

......... Meaning .........

aindhu bUthamum: All the five Elements (Earth, Water, Fire, Air and Cosmos),

ARu samayamum: the six religious sects (Saivam, Vaishnavam, SAktham, GANApathyam, Kaumaram and Sauram),

manthra vEdha purANa kalaigaLum: the ManthrAs, the scriptures, the purANAs*, the arts,

aimba thOr vidha mAna libigaLum: the fifty-one different alphabets (of the Sanskrit language),

vegurUpa aNda rAdhi sarAsa ramum: the DEvAs in different forms, the movable and immovable animate forms,

uyar puNda reeKanu mEga niRavanum: the Great BrahmA, Vishnu with the complexion of dark cloud,

andhi pOluru vAnu: SivA with the reddish complexion of the setting sun,

nilavodu veyil kAlum chandhra sUriyar thAmum: the moon and the sun radiating cool moonlight and hot rays,

asabaiyum: the Hamsa ManthrA**,

vindhu nAdhamum: (see footnote)***,

Eka vadivam: are all in combination, nothing but one and only one form.

adhan sorUpam adhAga uRaivadhu siva yOgam: Knowing the oneness of that form, and not differentiating it, and being rooted in it, one has to realize the Universal aspect of Siva-yOgA.

thangaL ANava mAyai karuma malangaL pOy: For the destruction of egoes, delusions and karmas of individuals,

upa dhEsa gurupara sampra dhAyamodu: one has to follow the conventional Master-Student tradition;

Eyu neRiyadhu peRuvEnO: and will I be fortunate to fall in that traditional line and obtain Your preaching?

vandha dhAnavar sEnai kedi puga: The confronting armies of asuras (demons) were scared away;

indhra lOkamvi bUthar kudipuga: the land of IndrA was redeemed, and the DEvAs resettled in their homeland;

maNdu bUthapa sAsu pasi keda: the devils and ghosts were able to quench their hunger in the battlefield;

mayidAri vankaN veeri pidAri: the destroyer of the demon Mahisha, the fierce and valorous Durga,

harahara sanka rA ena: rejoiced and chanted "Hara Hara, SankarA";

mEru girithalai maNdu thUL ezha: and the peaks of Mount MEru were swept by enormous dust;

vElai uruviya vayalUrA: when You threw Your mighty Spear, Oh Lord of VayalUr!

vendha neeRaNi vENi irudigaL: The sages with matted lock who wear the holy ash roasted in fire on their foreheads,

bandha pAsa vikAra: and who have won over the bondages of attachment, desire and other vascillations,

paravasa vendri yAna samAdhi muRugugal muzhaikUdum: ultimately attain their blissful tranquility at the stony caves of this mountain (VirAlimalai);

viNdu mElmayi lAda: On that mountain, the peacocks dance;

iniyakaL uNdu kAraLi pAda: the dark beetles, intoxicated from the sweet honey sucked by them, sing hummingly;

idhazhi pon vinja veesu: and the kondRai (Indian laburnum) trees abundantly shed gold instead of flowers.

virAli malai uRai perumALE.: That VirAlimalai**** is Your abode, Oh Great One!


* The 18 purANAs are as follows: Saivam, Paushyam, MArkandEyam, Lingam, SkAndham, VarAgam, VAmanam, Mascham, KUrmam, BrahmAndam, Garudam, NAradheeyam, Vishnu, BhAgavatham, Brahmam, Padhmam, AagnEyam and Brahmakaivarththam.


** Asabhai is the Hamsa ManthrA which is "SOham" in Sanskrit; meaning, SO - He, and aham - Myself, that is to say, He is Myself, a ManthrA depicting the merger of Jeeva Athma and Parama Athma.


*** 'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).


**** VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 575 aindhu bUdhamum - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]