திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 567 பத்தியால் யானுனை (இரத்னகிரி) Thiruppugazh 567 baththiyAlyAnunai (rathnagiri) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தனா தானனத் ...... தனதான தத்தனா தானனத் ...... தனதான ......... பாடல் ......... பத்தியால் யானுனைப் ...... பலகாலும் பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே உத்தமா தானசற் ...... குணர்நேயா ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா வித்தகா ஞானசத் ...... திநிபாதா வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பத்தியால் யானுனை ... அன்பினால் உன்னை உறுதியாக பலகாலும் பற்றியே ... பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு மாதிருப்புகழ் பாடி ... உயர்ந்த திருப்புகழைப் பாடி முத்தனாம் ஆறெனை ... ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை பெருவாழ்வின் முத்தியே ... இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்வதற்கு அருள்வாயே ... சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம அதான ... உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள சற் குணர்நேயா ... நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே ஒப்பிலா மா ... சமானம் இல்லாத பெருமை பொருந்திய மணிக்கிரிவாசா ... ரத்னகிரியில் வாழ்பவனே* வித்தகா ... பேரறிவாளனே ஞானசத்தி நிபாதா ... திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றிவே லாயுதப் பெருமாளே. ... வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே. |
* ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன வாட்போக்கித் தலமாகிய ரத்தினகிரியின் பிற பெயர்கள். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.855 pg 1.856 WIKI_urai Song number: 349 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'கரிவலம்' திரு முருக சுந்தர் Thiru M. Sundhar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) Thiru Arun Santhanam (Atlanta) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 567 - baththiyAl yAnunai (rathnagiri) baththiyAl yAnunaip ...... palakAlum patriyE mAthirup ...... pugazh pAdi muththanA mARenaip ...... peruvAzhvin mutthiyE sErvadharkku ...... aruLvAyE uththama adhAna saR ...... guNarnEyA oppilA mAmaNik ...... girivAsA viththagA nyAnasath ...... thinipAdhA vetrive lAyudhap ...... perumAlE. ......... Meaning ......... baththiyAl yAnunai: With utmost devotion, I should pray palakAlum patriyE: holding You firmly in mind for a long time; and mAthirup pugazh pAdi: I should sing Your great praise. muththanA mARenai: To guide me to become a liberated soul peruvAzhvin mutthiyE sErvadharkku: and to enable me to reach eternal bliss (Sivagathi) in this life, aruLvAyE: You have to grant me Your Grace! uththama adhAna: Those who firmly hold on to all lofty values, saR guNarnEyA: such virtuous people have You as their Friend! oppilA mA maNik girivAsA: You reside in MaNikgiri (Rathnagiri*) which is great and without comparison. viththagA: Oh Learned One! nyAnasaththi nipAdhA: You imprint the Knowledge of Your grace on us! vetrive lAyudha: You hold the victorious Spear as Your weapon! perumAlE.: Oh Great One! |
* Rathnagiri, also known as MaNikgiri and VATpOkki, is a famous place sung in ThEvArams. It is located in Tiruchi District, 8 miles away from KuLiththalai Railway Station. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |