திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 549 அரிவையர் நெஞ்சுரு (திருசிராப்பள்ளி) Thiruppugazh 549 arivaiyarnenjuru (thiruchirAppaLLi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன ...... தனதான ......... பாடல் ......... அரிவையர் நெஞ்சுரு காப்புணர் தருவிர கங்களி னாற்பெரி தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந் தகிலொடு சந்தன சேற்றினில் முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப் பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரியம ருங்குடை போய்ச்சில பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப் பனிமுக முங்குறு வேர்ப்பெழ இதழமு துண்டிர வாய்ப்பகல் பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ சரியையு டன்க்ரியை போற்றிய பரமப தம்பெறு வார்க்கருள் தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே சயிலமெ றிந்தகை வேற்கொடு மயிலினில் வந்தெனை யாட்கொளல் சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா திரிபுவ னந்தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே தெரியஇ ருந்தப ராக்ரம உருவளர் குன்றுடை யார்க்கொரு திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அரிவையர் நெஞ்சு உருகாப் புணர் தரு விரகங்களினால் பெரிது அவசம் விளைந்து விடாய்த்து ... (விலை) மாதர்கள் மீது மனம் உருகி கலவி இச்சை தருகின்ற விரகதாபத்தால் மிகவும் தன்வசம் அழிதல் ஏற்பட்டு, காம தாகம் அதிகரித்து, அடர் முலை மேல் வீழ்ந்து அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை அடியில் நகம் பிறை போல் பட விளையாடி ... நெருங்கிய மார்பகங்களின் மேல் விழுந்து, அகில், சந்தனம் இவற்றின் கலவைச் சேற்றில் முழுகியும் எழுந்தும், எதிரே கூப்பிய கையடியில் உள்ள நகம் பிறைபோல (உடலில்) படும்படி பதித்து விளையாடி, பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரிய மருங்கு உடை போய்ச் சில பறவைகளின் குரலாய்க் கயல் விழி சோரப் பனி முகமும் குறு வேர்ப்பு எழ ... நறு மணம் மிக்க பூ நிறைந்த கூந்தல் சரிந்து விழ, இடையில் இருந்த சேலை விலக, சில பறவைகளின் ஒலிகள் எழ, கயல் மீன் போன்ற கண்கள் சோர்வு அடைய, குளிர்ந்திருந்த முகத்தில சிறு வியர்வை எழ, இதழ் அமுது உண்டு இரவாய்ப் பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ ... வாயிதழ் அமுதை உண்டு, பகலிலும் இரவிலும் கலவிக் கூத்தாடும்படி செய்த இந்தக் கொடியவனை கைவிடலாமோ? சரியை உடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு க(ண்)ணன் ரங்க புரம் உச்சிதன் மருகோனே ... சரியை, கிரியை* ஆகிய மார்க்கங்களை கைப்பிடிக்கும் மேலான பதத்தைப் பெற விரும்புவோர்க்கு அருளைத் தருகின்ற கண்ணன் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட மேன்மையாளனாகிய (ரங்கநாதனாம்) திருமாலின் மருகனே, சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா ... கிரெளஞ்ச மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே**, திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில் விளங்குச் சிராப் ப(ள்)ளி மலைமீதே தெரிய இருந்த பராக்ரம ... மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த வீரனே, உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி தோற்றிய பெருமாளே. ... அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே. |
** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் 'அதல சேடனார் ஆட' என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.809 pg 1.810 pg 1.811 pg 1.812 pg 1.813 pg 1.814 WIKI_urai Song number: 331 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 549 - arivaiyar nenjuru (thiruchirAppaLLi) arivaiyar nenjuru kAppuNar tharuvira kangaLi nARperi thavasamvi Lainthuvi dAyththadar ...... mulaimElveezhn thakilodu santhana sEtRinil muzhukiye zhunthethir kUppukai yadiyina kampiRai pORpada ...... viLaiyAdip parimaLam vinjiya pUkkuzhal sariyama rungudai pOycchila paRavaika Linkura lAykkayal ...... vizhisOrap panimuka mumkuRu vErppezha ithazhamu thuNdira vAyppakal pakadiyi dumpadi thUrththanai ...... vidalAmO sariyaiyu dankriyai pOtRiya paramapa thampeRu vArkkaruL tharukaNan rangapu rOcchithan ...... marukOnE sayilame Rinthakai vERkodu mayilinil vanthenai yAtkoLal sakamaRi yumpadi kAttiya ...... gurunAthA thiripuva nanthozhu pArththipan maruviya maNdapa kOttikaL theruvilvi Languchi rAppaLi ...... malaimeethE theriyai runthapa rAkrama uruvaLar kunRudai yArkkoru thilathame numpadi thOtRiya ...... perumALE. ......... Meaning ......... arivaiyar nenju urukAp puNar tharu virakangaLinAl perithu avasam viLainthu vidAyththu: With my heart melting for the whores, I lost my self-control due to separation from them after enjoying carnal pleasure; my thirst for passion increased (to the point that) adar mulai mEl veezhnthu akilodu santhana sEtRinil muzhuki ezhunthu ethir kUppu kai adiyil nakam piRai pOl pada viLaiyAdi: and I simply fell upon their tightening bosom and sank in the smeared paste of sandalwood powder and incence and resurfaced; I played the game of love by getting a crescent-like scar (on my body) from their nail out of hands folded in my front; parimaLam vinjiya pUkkuzhal sariya marungu udai pOyc chila paRavaikaLin kuralAyk kayal vizhi sOrap pani mukamum kuRu vErppu ezha: their fragrant hair, adorned with flowers, became dishevelled and fell loose; the sari wrapped around their waist was dislodged; the chirping sounds of a few birds were heard; their eyes that looked like kayal fish languished; on their cool face, little beads of perspiration began to appear; ithazh amuthu uNdu iravAyp pakal pakadiyidumpadi thUrththanai vidalAmO: I imbibed the nectar gushing from their mouth; I carried on this sport of carnal bliss day and night; despite all my actions, is it fair to forsake this debauchee? sariyai udan kriyai pOtRiya parama patham peRuvArkku aruL tharu ka(N)Nan ranga puram ucchithan marukOnE: He is KrishNa who showers His blessings upon all those realised persons seeking liberation by practising the rituals laid out in Sariyai and Kiriyai methods*; He is the great Lord (RanganAthan) slumbering in Sreerangam; and You are the nephew of that Lord VishNu! sayilam eRintha kai vEl kodu mayilinil vanthu enai AdkoLal sakam aRiyumpadi kAttiya kurunAthA: Holding prominently in Your hand the Spear that shattered the Mount Krouncha, You appeared before me, mounted on the peacock, and took me over graciously as witnessed by the entire world, Oh Great Master**! thiri puvanam thozhu pArththipan maruviya maNdapa kOttikaL theruvil viLangus sirAp pa(L)Li malaimeethE theriya iruntha parAkrama: In the streets of this town ThirichirAppaLLi, several palatial halls and temple towers built by the Pallava King are seen; here, on its mountain, You are majestically seated, Oh Valorous One! uru vaLar kunRu udaiyArkku oru thilatham enum padi thOtRiya perumALE.: Having an abode in this mountain at ThirichirAppaLLi is also Lord SivA in the form of ThAyumAnavar (Father who also comes as the Mother), and You shine as the circular mark on His forehead, Oh Great One! |
** In ThiruvaNNAmalai a saivite poet by name SampanthANdAn challenged AruNagirinAthar saying that he could make DEvi PArvathi appear in person by his poetic prowess. When SampanthANdAn failed in his challenge, AruNagirinAthar sang the Thiruppugazh song "athala sEdanAr Ada" whereupon Lord Murugan emerged from a pillar, mounted on His peacock, and holding the Spear in His hand. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |