(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 548 அந்தோ மனமே  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 548 andhOmanamE  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 548 andhOmanamE - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தாதன தானன தாத்தன
     தந்தாதன தானன தாத்தன
          தந்தாதன தானன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

அந்தோமன மேநம தாக்கையை
     நம்பாதெயி தாகித சூத்திர
          மம்போருக னாடிய பூட்டிது ...... இனிமேல்நாம்

அஞ்சாதமை யாகிரி யாக்கையை
     பஞ்சாடிய வேலவ னார்க்கிய
          லங்காகுவம் வாஇனி தாக்கையை ...... ஒழியாமல்

வந்தோமிது வேகதி யாட்சியு
     மிந்தாமயில் வாகனர் சீட்டிது
          வந்தாளுவம் நாமென வீக்கிய ...... சிவநீறும்

வந்தேவெகு வாநமை யாட்கொளு
     வந்தார்மத மேதினி மேற்கொள
          மைந்தாகும ராவெனு மார்ப்புய ...... மறவாதே

திந்தோதிமி தீதத மாத்துடி
     தந்தாதன னாதன தாத்தன
          செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ...... மறையோதச்

செங்காடென வேவரு மூர்க்கரை
     சங்காரசி காமணி வேற்கொடு
          செண்டாடிம காமயில் மேற்கொளு ...... முருகோனே

இந்தோடிதழ் நாகம காக்கடல்
     கங்காளமி னார்சடை சூட்டிய
          என்தாதைச தாசிவ கோத்திர ...... னருள்பாலா

எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
     நன்பூமண மேவிசி ராப்பளி
          யென்பார்மன மேதினி நோக்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அந்தோ மனமே நம தாக்கையை நம்பாதெ ... ஐயோ மனமே,
நிலையா நம் உடலை நிலைத்திருக்குமென நம்பி மோசம் போகாதே.

இதாகித சூத்திரம் ... இன்பமும் (இத) துன்பமும் (அகித) நிறைந்த
இயந்திரம் இந்த உடம்பு.

அம்போருகன் ஆடிய பூட்டிது ... இது தாமரை மலரில் உள்ள
பிரமனால் அமைக்கப்பட்ட பூட்டு.

இனிமேல்நாம் அஞ்சாதமையா ... சென்றது போக, இனிமேல் நாம்
இந்த உடல் விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல்
இருக்கமுடியாது.

கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு ... கிரெளஞ்ச
மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு

இயல் அங்காகுவம் வா ... நீங்காத அன்புடையவராக ஆகுவோம்,
நீ அங்கு வா.

இனிது ஆக்கையை ஒழியாமல் வந்தோம் ... இதுதான் இன்ப
நெறியாகும். இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம்
யாம் வந்தோம்.

இதுவேகதி ... இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்.

ஆட்சியும் இந்தா ... ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான்.
ஆகவே இதனைப் பெற்றுக்கொள்.

மயில் வாகனர் சீட்டிது ... இது மயில்வாகனர் நமக்கு அளித்த
அனுமதிச் சீட்டு.

வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும் ... நாம் வந்து உன்னை
விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் நமக்கு அனுப்பிய மங்கலம்
தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்.

வந்தேவெகுவாநமை யாட்கொள் உவந்தார் ... முருகப்பிரான்
தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்.

மதமேது இனி மேற்கொள ... இதைத்தவிர வேறு எந்த மதம் உள்ளது
நாம் மேற்கொள்ள?

மைந்தாகுமராவெனும் ஆர்ப்பு உய மறவாதே ... சிவமைந்தனே,
குமரக் கடவுளே என்று பேரொலியோடு, நீ உய்வதற்கு, துதிப்பதை
மறவாதே.

திந்தோதிமி தீதத மாத்துடி ... திந்தோதிமி தீதத என்று பெரிய
உடுக்கையும்,

தந்தாதன னாதன தாத்தன ... தந்தாதன னாதன தாத்தன என்ற
தாளத்துடன்

செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ... செம்மை பொருந்திய பூரிகை
என்ற வாத்தியமும், பேரிகையும் ஆரவாரித்து ஒலி எழுப்பவும்,

மறையோத ... வேதங்கள் கோஷமிடவும்,

செங்காடென வேவரு மூர்க்கரை ... எதிர்த்து வந்த அசுரர்களை
(ரத்தக் களரியில்) சிவந்த காட்டைப் போலக் கொன்று தள்ளி

சங்கார சிகாமணி வேற்கொடு ... சம்காரம் செய்வதில் முதன்மை
பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு

செண்டாடி மகாமயில் மேற்கொளு முருகோனே ... அவர்களது
தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, பெரிய மயில்வாகனத்தில்
அமரும் முருகனே,

இந்தோடிதழ் நாக மகாக்கடல் ... சந்திரனையும், ஆமை
ஓட்டினையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல்
போன்ற கங்கை நதியையும்,

கங்காள மினார்சடை சூட்டிய ... எலும்புக் கூடுகளையும் ஒளி
நிறைந்த சடைமீது அணிந்துள்ள

என்தாதை சதாசிவ கோத்திரன் அருள்பாலா ... என் தந்தையும்
சதாசிவ கோத்திரத்திற்குத் தலைவருமாகிய சிவபெருமான்
பெற்றருளிய புதல்வனே.

எண்கூடருளால் நெளவி நோக்கியை ... அளவிடற்கரிய
திருவருளால் மான் போன்ற நோக்குடைய வள்ளியை,

நன்பூமண மேவி ... நலம் பொருந்திய அழகுடன் திருமணம்
செய்துகொண்டு,

சிராப்பளி யென்பார் ... திருசிராப்பள்ளி என்ற திருத்தலத்தின்
பெயரை மாத்திரம் கூறும் பேறு பெற்றவர்களின்

மனமேதினி நோக்கிய பெருமாளே. ... மனம் என்ற பூமியில்
எழுந்தருளியுள்ள பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.805  pg 1.806  pg 1.807  pg 1.808  pg 1.809 
 WIKI_urai Song number: 330 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 548 - andhO manamE (thiruchirAppaLLi)

andhOmana mEnama dhAkkaiyai
     nambAdheyi dhAgitha sUththiram
          ambOruga nAdiya pUttidhu ...... inimElnAm

anjAdhamai yAgiri yAkkaiyai
     panjAdiya vElava nArkkiya
          langAguvam vA ini dhAkkaiyai ...... ozhiyAmal

vandhOm idhuvE gathi yAtchiyu
     mindhAmayil vAhanar seettidhu
          vandhALuvam nAmena veekkiya ...... sivaneeRum

vandhE veguvA namai yAtkoLu
     vandhArmadha mEdhini mErkoLa
          maindhA kumarA enu mArppuya ...... maRavAdhE

dhindhOdhimi dheedhadha mAththudi
     thandhAthana nAdhana thAththana
          sempUrigai bErigai yArththezha ...... maRaiyOdha

senkAd enavE varu mUrkkarai
     sankAra sikAmaNi vErkodu
          seNdAdi mahAmayil mErkoLu ...... murugOnE

indhOdidhazh nAga mahAk kadal
     gangALami nArsadai sUttiya
          enthAdhai sadhAsiva gOththiran ...... aruLbAlA

eNkUdaru LAl nauvi nOkkiyai
     nanpU maNamEvi sirAppaLi
          yenpArmana mEthini nOkkiya ...... perumALE.

......... Meaning .........

andhOmana mEnama dhAkkaiyai nambAdhe: Alas, Oh my mind, do not trust this body of ours thinking that it is permanent.

yi dhAgitha sUththiram: It is just a machine intended to produce pleasure and pain.

ambOruga nAdiya pUttidhu: It is a lock specially designed by BrahmA who is seated on a lotus.

inimElnAm anjAdhamai yA: Hereafter, there is no other option for us but to fear its mortality.

giri yAkkaiyai panjAdiya vElava nArkku: The Lord with the spear shattered the mount Krouncha to pieces;

iyalangAguvam vA: to Him, here and now, we should surrender with devotion.

ini dhAkkaiyai ozhiyAmal vandhOm: That is the pleasant course. Without letting the body waste away, we have come to Him.

idhuvE gathi yAtchiyum indhA: This is the blissful liberation. This is also the great advice of the wise ones. So, please take hold of this.

mayil vAhanar seettidhu: This is the ticket given to us by the Lord mounting the peacock.

vandhALuvam nAmena veekkiya sivaneeRum: Assuring that He would come and protect us, this is the token of His promise given to us in the form of holy ash.

vandhE veguvA namai yAtkoLuvandhAr: He is pleased to come to us and gladly take us over.

madhamEdh ini mErkoLa: Is there any other religion for us to embrace?

maindhA kumarA enu mArppuya maRavAdhE: Never forget to pray loudly "Oh Son of SivA, KumarA!" for your own protection.

dhindhOdhimi dheedhadha mAththudi: The big hand-drums were beaten to the meter of "dhindhOdhimi dheedhadha";

thandhAthana nAdhana thAththana: To the sound of "thandhAthana nAdhana thAththana",

sempUrigai bErigai yArththezha maRaiyOdha: the reddish percussion instruments PUrikai and drums (BErigai) made loud noise; the VEdAs were chanted everywhere;

senkAd enavE varu mUrkkarai: when the advancing demons were killed, with their blood gushing making the forest red, and when

sankAra sikAmaNi vErkodu: Your Spear, the greatest destroyer,

seNdAdi mahAmayil mErkoLu murugOnE: shattered their heads, Oh MurugA, who mounted the great peacock!

indhOdidhazh nAga mahAk kadal: The crescent moon, the shell of a turtle, kondRai (Indian laburnum) flower, the serpents, the ocean-like river Ganga

gangALami nArsadai sUttiya: and the garland of skeletons adorn His dazzling tresses;

enthAdhai sadhAsiva gOththiran aruLbAlA: He is our Father and the Head of the lineage of Sadasivan; he delivered You as His child!

eNkUdaru LAl nauvi nOkkiyai nanpU maNamEvi: With immeasurable grace, You united with VaLLi, with looks of a deer, in holy wedlock!

sirAppaLi yenpArmana mEthini nOkkiya perumALE.: You reside in the world of the hearts of those who merely utter the name of this holy place, ThirusirAppaLLi, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 548 andhO manamE - thiruchirAppaLLi


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top