திருப்புகழ் 544 வேத வெற்பிலே  (திருக்கழுக்குன்றம்)
Thiruppugazh 544 vEdhaveRpilE  (thirukkazhukkundRam)
Thiruppugazh - 544 vEdhaveRpilE - thirukkazhukkundRamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
     தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான

......... பாடல் .........

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய

ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
     ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே

காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
     காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை

ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
     ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேத வெற்பிலே ... வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும்,

புனத்தில் மேவி நிற்கும் ... வள்ளிமலையில் உள்ள
தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும்

அபிராம ... பேரழகு உடையவனே,

வேடுவச்சி பாத பத்ம மீது ... வேடுவச்சி வள்ளியின் பாதத்
தாமரையின் மீது

செச்சை முடிதோய ஆதரித்து ... வெட்சி மாலை அணிந்த உன்
திருமுடி படும்படியாக காதலித்து,

வேளை புக்க ... ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில்
தினைப்புனத்துக்குள் புகுந்த

ஆறிரட்டி புயநேய ... பன்னிரு தோள்களை உடைய நண்பனே,

ஆதரத்தோடு ஆதரிக்க ... ஆர்வத்துடன் நான் உன்னை அன்பு
வழிபாடு செய்ய

ஆன புத்தி புகல்வாயே ... உரிய புத்தியை உபதேச மொழியாகச்
சொல்லி அருள்வாயாக.

காதும் உக்ர வீர பத்ர காளி ... வெகுண்டு வந்த வீரபத்திரரின்
துணைவியான காளி

வெட்க மகுடத்தை ஆகாச முட்ட வீசி விட்ட காலர் ... நாணம்
அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி
விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,*

பத்தி இமையோரை ... பக்தியுள்ள தேவர்களுக்கு

ஓது வித்த நாதர் கற்க ... கற்பித்த நாதராகிய சிவபெருமான்,
உன்னிடம் பாடம் கேட்கவும்,

ஓது வித்த முநிநாண ... சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன்
வெட்கமடையவும்,

ஓரெழுத்தில் ஆறெழுத்தை ... ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார
ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ
மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி

ஓது வித்த பெருமாளே. ... அந்தச் சிவனுக்கே உபதேசித்த
பெருமாளே.


* திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.


** தக்ஷ யாகத்தை அழிக்க சிவனும் உமையும் வீரபத்திரராகவும் காளியாகவும் வந்தனர்.
காளி நாணும்படி சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியது இங்கு குறிப்பிடப்படுகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.793  pg 1.794  pg 1.795  pg 1.796 
 WIKI_urai Song number: 327 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Mayiladuthurai Thiru S. Sivakumar
'மயிலாடுதுறை' திரு சொ. சிவகுமார்

Thiru S. Sivakumar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 544 - vEdha veRpilE (thirukkazhukkundRam)

vEdha veRpilE punaththil mEvi niRkum ...... abirAma
     vEdu vacchi pAdha padhma meedhu checchai ...... mudithOya

Adhariththu vELai pukka ARiratti ...... buyanEya
     AdharaththodA dharikka Ana budhdhi ...... pugalvAyE

kAdhu mugra veera badhra kALi vetka ...... makudAm
     AkAsa mutta veesi vitta kAlar baththi ...... imaiyOrai

Odhuviththa nAdhar kaRka Odhuviththa ...... muni nANa
     Orezhuththil ARezhuththai Odhuviththa ...... perumALE.

......... Meaning .........

vEdha veRpilE punaththil mEvi niRkum abirAma: The Mount of VEdAs (ThirukkazhukkundRam*) and the millet-field at VaLLimalai are Your favourite abodes, Oh Handsome One!

vEdu vacchi pAdha padhma meedhu: On the lotus feet of the hunter-girl, VaLLi,

checchai mudithOya: Your tresses with vetchi flowers fall with love;

Adhariththu vELai pukka ARiratti buyanEya: With devotion and timeliness, You went to her millet field, Oh twelve-shouldered Friend!

AdharaththodA dharikka Ana budhdhi pugalvAyE: In order that I may worship You with the same love and devotion, You have to preach to me the correct way.

kAdhu mugra veera badhra kALi vetka: When the fierce form of SivA came as Veerabhadhra** KALi also came with Him; She was embarrassed (because she could not compete in dance with SivA)

makudAm AkAsa mutta veesi vitta kAlar: when SivA threw his bejewelled crown into the sky and tried to pick it up with his toes by performing Oordhwa ThAndavam (toes going skyward); that SivA,

baththi imaiyOrai Odhuviththa nAdhar: One who taught His devoted Deva disciples,

kaRka: learnt the scripture from You while

Odhuviththa muni nANa: BrahmA, a student of SivA, was ashamed (for not knowing the meaning of OM).

Orezhuththil ARezhuththai Odhuviththa perumALE.: You taught SivA the significance of One Letter (OM) which includes in itself the meaning of the six-lettered ManthrA (OMNAMASIVAYA or SARAVANABHAVA), Oh Great One!


* ThirukkazhukkundRam is 9 miles southeast of Chingelpet Railway Station.


** To destroy Dhaksha's Sacrificial Pyre, SivA and PArvathi came as Veerabhadhra and KALi.
Dhaksha was ultimately killed by Veerabhadhra as a punishment for all insults he had heaped on SivA and PArvathi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 544 vEdha veRpilE - thirukkazhukkundRam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]