திருப்புகழ் 542 எழுகு நிறை நாபி  (திருக்கழுக்குன்றம்)
Thiruppugazh 542 ezhuguniRainAbi  (thirukkazhukkundRam)
Thiruppugazh - 542 ezhuguniRainAbi - thirukkazhukkundRamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

......... பாடல் .........

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
     யிலகுமரன் மூவர் ...... முதலானோர்

இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
     யெழுமமிர்த நாறு ...... கனிவாயா

புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
     புநிதனென ஏடு ...... தமிழாலே

புனலிலெதி ரேற சமணர்கழு வேற
     பொருதகவி வீர ...... குருநாதா

மழுவுழைக பால டமரகத்ரி சூல
     மணிகரவி நோத ...... ரருள்பாலா

மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
     வளமைபெற வேசெய் ...... முருகோனே

கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
     கதிருலவு வாசல் ...... நிறைவானோர்

கடலொலிய தான மறைதமிழ்க ளோது
     கதலிவன மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எழுகு ... ஏழு உலகங்களையும்

நிறை நாபி அரி ... தன் வயிற்றிலே அடக்கிய திருமால்,

பிரமர் சோதி யிலகுமரன் ... பிரமன், ஜோதிமயமான ருத்திரன்,

மூவர் முதலானோர் ... ஆகிய மூவருக்கும் மற்ற தேவர்களுக்கும்

இறைவியெனு மாதி பரை ... தலைவியான ஆதி பராசக்தியின்

முலையினூறி எழும் அமிர்த ... திருமார்பிலிருந்து சுரந்த அமிர்தமாம்
ஞானப்பால்

நாறு கனிவாயா ... மணக்கும் கனி போன்ற வாயை உடையவனே,

புழுகொழுகு காழி ... புனுகு வாசனை வீசும் சீர்காழிப் பகுதியில்

கவுணியரில் ஞான புநிதனென ... கவுணியர் குடியில்
ஞானசம்பந்தனாக அவதரித்து

தமிழாலே ஏடு புனலிலெதிர் ஏற ... தமிழ்ப்பாசுர மகிமையாலே ஏடு
வைகை ஆற்றின் நீரில் எதிர் ஏற்றத்தில் செல்லவும்,

சமணர்கழுவேற ... சமணர்கள் கழுவில் ஏறவும்,

பொருதகவி வீர ... தமிழினால் வாதப் போர் புரிந்த கவிவீரன்
ஞானசம்பந்தனே,

குருநாதா ... குருநாதனே,

மழு உழை கபால டமரக த்ரிசூலம் ... கோடரியையும், மானையும்,
பிரம கபாலத்தையும், உடுக்கையையும், திரிசூலத்தையும்

அணிகர விநோதர் அருள்பாலா ... ஏந்திய கரங்கள் கொண்ட
அற்புதமூர்த்தி சிவபிரான் அருளிய திருக்குமாரனே,

மலரயனை நீடு சிறைசெய்து ... தாமரை மலரில் உள்ள பிரமனை
பெருஞ்சிறையில் அடைத்து,

அவன் வேலை வளமைபெறவே ... அவனது படைப்புத் தொழிலைச்
செம்மையாகச்

செய் முருகோனே ... செய்தருளிய முருகக் கடவுளே,

கழுகுதொழு ... கழுகுகள்* தொழுகின்ற

வேதகிரி சிகரி வீறு ... வேதமலையின் உச்சியில் விளங்கும்,

கதிருலவு வாசல் நிறைவானோர் ... ஒளிவீசும் வாசலில் நிறைந்த
தேவர்கள்

கடலொலிய தான ... கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று

மறைதமிழ்க ளோது ... வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும்
ஓதுகின்ற,

கதலிவனம் மேவு பெருமாளே. ... கதலிவனம்** (என்ற
திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே.


* எல்லா யுகங்களிலும் கீழ்க்கண்ட இரண்டு கழுகுகள் இந்த வேதமலையை பூஜித்தன:

கிருத யுகம் - சண்டன், பிரசண்டன்,
திரேதா யுகம் - ஜம்பாதி, ஜடாயு,
துவாபர யுகம் - சம்புகுத்தன், மாகுத்தன்,
கலி யுகம் - சம்பு, ஆதி.


** திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு 'கதலிவனம்' என்றும் பெயர்.


இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.787  pg 1.788  pg 1.789  pg 1.790 
 WIKI_urai Song number: 325 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 542 - ezhugu niRai nAbi (thirukkazhukkundRam)

ezhuguniRai nAbi aribiramar jOthi
     yilakumaran mUvar ...... mudhlAnOr

iRaiviyenu mAdhi paraimulaiyi nURi
     ezhumamirtha nARu ...... kanivAyA

puzhugozhugu kAzhi kavuNiyaril nyAna
     punidhanena Edu ...... thamizhAlE

punaliledhi rERa samaNar kazhu vERa
     porudhakavi veera ...... gurunAthA

mazhuvuzhaika pAla damaragathri sUla
     maNikaravi nOdhar ...... aruLbALA

malarayanai needu siRaiseydhavan vElai
     vaLamaipeRa vEsey ...... murugOnE

kazhuguthozhu vEdha girisikari veeRu
     kadhirulavu vAsal ...... niRaivAnOr

kadaloliya dhAna maRaithamizhga lOdhu
     kadhalivana mEvu ...... perumALE.

......... Meaning .........

ezhuguniRai nAbi ari: Vishnu, who once held all the seven worlds in His stomach,

biramar jOthi yilakumaran mUvar: BrahmA, and bright Rudra, being the Trinity,

mudhlAnOr: and other DEvAs

iRaiviyenu mAdhi parai: have all worshipped the Goddess, the Prime Parasakthi;

mulaiyi nURi ezhumamirtha nARu kanivAyA: She fed the Divine Milk of Knowledge from Her breast to You (as Gnanacampanthan); Your mouth has that Divine sweet Smell!

puzhugozhugu kAzhi kavuNiyaril nyAna punidhanena: In SeegAzhi, which is fragrant with aromatic scent, You were born in the KavuNiya lineage as Pure Knowledge incarnate.

Edu thamizhAlE punaliledhi rERa: When You floated a palm leaf, with Tamil hymn inscribed on it, the leaf went upstream against the current in Vaigai River;

samaNar kazhu vERa porudhakavi veera gurunAthA: and when ChamaNas confronted You, they were all sent to the gallows by Your war through Tamil hymns, Oh Great Master!

mazhuvuzhaika pAla damaragathri sUla maNikaravi nOdhar aruLbALA: You are the son of the unique SivA, who holds on His hands a pick-axe, a deer, BrahmA's skull, a hand drum (udukkai) and three-pronged weapon (TrisUlam).

malarayanai needu siRaiseydhu: You imprisoned BrahmA, who sits on a lotus,

avan vElai vaLamaipeRa vEsey murugOnE: took over his job of Creation and performed very well, Oh Muruga.

kazhuguthozhu vEdha girisikari veeRu: At the pinnacle of the great Mount of Veda, eagles* prostrate daily;

kadhirulavu vAsal niRaivAnOr: and at its bright gates, all DEvAs assemble and

kadaloliya dhAna maRaithamizhga lOdhu: chant VEdAs and Tamil hymns, sounding like sea waves.

kadhalivana mEvu perumALE.: This place is Kathalivanam** (ThirukkazhukkundRam), Oh Great One!


* Two eagles have constantly worshipped this Mount of VEdAs in all the four Yugas {ages}. They are:

Kritha Yuga - ChaNdan and PrachaNdan;
ThrEtha Yuga - JampAthi and JatAyu;
DwApara Yuga - Champukuththan and MAkuththan;
Kali Yuga - Sambhu and Aathi.


** Kathalivanam - meaning a jungle of plantains - is also another name of ThirukkazhukkundRam as the shrine has plantain as StalaVriksham (Shrine Tree).


ThirukkazhukkundRam is 9 miles southeast of Chingelpet Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 542 ezhugu niRai nAbi - thirukkazhukkundRam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]