திருப்புகழ் 538 குடிவாழ்க்கை  (வள்ளிமலை)
Thiruppugazh 538 kudivAzhkkai  (vaLLimalai)
Thiruppugazh - 538 kudivAzhkkai - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான

......... பாடல் .........

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
     குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்

குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
     குருவார்த்தை தன்னை ...... யுணராதே

இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
     இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி

இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
     னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ

வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
     மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா

வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
     மலைகாத்த நல்ல ...... மணவாளா

அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
     யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குடிவாழ்க்கை ... இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட

அன்னை மனையாட்டி பிள்ளை ... தாயார், மனைவி, பிள்ளைகள்,

குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள் ... குயில் போலப் பேசி
எதிர்ப்படும் பெண்கள்,

குலம் வாய்த்த நல்ல தனம் ... பிறந்த குலம், கிடைத்த நல்ல செல்வம்,

வாய்த்த தென்ன ... எனக்குத் தான் கிடைத்தது என்று ஆணவம்
கொண்டு,

குருவார்த்தை தன்னை உணராதே ... குருவின் உபதேச
மொழிகளை அறியாமல்,

இட நாட்கள் ... நாட்கள் வீணாகக் கழிந்திட,

வெய்ய நமனீட்டி ... கொடிய யமன் இறுதியில் நெருங்கி வந்து

தொய்ய இடர்கூட்ட ... சோர்வுறச்செய்யும் துன்பங்களைத் தர,

இன்னல் கொடுபோகி ... துயரத்துடன் கொண்டுபோய்

இடுகாட்டில் ... சுடுகாட்டில் (மயானத்தில்)

என்னை எரியூட்டு முன் ... அடியேனைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக,

உன் இருதாட்கள் தம்மை ... உனது இரு திருவடிகளை

உணர்வேனோ ... உணர்ந்து அறிவேனோ?

வடநாட்டில் வெள்ளி மலை ... வடநாட்டில் உள்ள
வெள்ளியங்கிரியை (கயிலாயத்தை)

காத்து ... (கோபுர வாசலில் அமர்ந்து) காவல் செய்து

புள்ளி மயில்மேல் ... புள்ளியை உடைய மயிலின் மீது

திகழ்ந்த குமரேசா ... விளங்குகின்ற குமரக் கடவுளே

வடிவாட்டி வள்ளி ... வடிவழகியான வள்ளியின்

அடிபோற்றி ... திருவடியைப் புகழ்ந்து,

வள்ளிமலை காத்த ... வள்ளிமலையில்* அப்பிராட்டியின் சமயம்
பார்த்துக் காத்திருந்த

நல்ல மணவாளா ... நல்ல (வேளைக்கார) மணவாளனே

அடி நாட்கள் செய்த பிழை நீக்கி ... யான் முன்னாட்களில் செய்த
குற்றங்களைப் பொறுத்து,

என்னை அருள்போற்றும் ... எனக்கு நின் திருவருளைப் போற்றும்

வண்மை தரும்வாழ்வே ... வளப்பமான குணத்தைத் தந்தருளிய என்
செல்வமே

அடிபோற்றி ... நின் திருவடிகளைத் தொழுது,

அல்லி முடிசூட்ட வல்ல ... தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல

அடியார்க்கு நல்ல பெருமாளே. ... அடியவர்களுக்கு நல்லவனாகத்
திகழும் பெருமாளே.


* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.777  pg 1.778  pg 1.779  pg 1.780 
 WIKI_urai Song number: 321 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 538 - kudivAzhkkai (vaLLimalai)

kudivAzhkkai annai manaiyatti piLLai
     kuyil pOlpra sanna ...... mozhiyArgaL

kulam vAyththa nalla dhanamvAyththa dhenna
     guruvArththai thannai ...... uNarAdhE

idanAtkaL veyya namaneetti thoyya
     idarkUtta innal ...... kodupOgi

idukAttil ennai eriyUttu munnun
     iruthAtkaL thammai ...... uNarvEnO

vadanAttil veLLi malai kAththu puLLi
     mayilmEl thigazhndha ...... kumarEsA

vadivAtti vaLLi adipOtri vaLLi
     malai kAththa nalla ...... maNavALA

adi nAtkkaL seydha pizhai neekki ennai
     aruLpOtrum vaNmai ...... tharumvAzhvE

adipOtri alli mudisUtta valla
     adiyArkku nalla ...... perumALE.

......... Meaning .........

kudivAzhkkai: A happy family life with

annai manaiyatti piLLai: my mother, wife, children and

kuyil pOlpra sanna mozhiyArgaL: a lot of bright young girls with lark's voice,

kulam vAyththa nalla dhanam: a heritage and plenty of wealth -

vAyththa dhenna: I felt lucky and proud to have attained these.

guruvArththai thannai uNarAdhE: I never realized the value of my Guru's teachings

idanAtkaL: and spent my days wastefully.

veyya namaneetti: (On the day of reckoning) before the evil Death-God, (Yaman), closes in on me

thoyya idarkUtta: and tortures me inflicting a lot of pain;

innal kodupOgi: amidst grief, my body is taken to

idukAttil: the crematorium (cremation ground)

ennai eriyUttu munnun: to be consumed by fire; prior to that event,

iruthAtkaL thammai: will the greatness of Your two Holy Feet be

uNarvEnO: realized by me?

vadanAttil veLLi malai: The Silvery Mount (Thirukkayilai) in the North

kAththu: is protected by You,

puLLi mayilmEl thigazhndha: sitting majestically on the spotted Peacock,

kumarEsA: Oh Kumaresa!

vadivAtti vaLLi adipOtri: You worship the feet of beautiful VaLLi

vaLLi malai kAththa: and wait for her at VaLLimalai*,

nalla maNavALA: as a good husband!

adi nAtkkaL seydha pizhai neekki: All my past sins are to be forgiven by You,

aruLpOtrum vaNmai: and an ability to extol Your Grace

tharumvAzhvE: has been given only by You, my Treasure!

adipOtri alli mudisUtta valla: For those who are capable of worshipping Your lotus feet

adiyArkku nalla: You are always good to such devotees,

perumALE.: Oh, Great One!


* VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam.
This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 538 kudivAzhkkai - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]