திருப்புகழ் 530 அல்லி விழியாலும்  (வள்ளிமலை)
Thiruppugazh 530 allivizhiyAlum  (vaLLimalai)
Thiruppugazh - 530 allivizhiyAlum - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான

......... பாடல் .........

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்

அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத் ...... தனமாரும்

இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச் ...... சமனாரும்

எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக் ...... குருநாதா

துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அல்லிவிழியாலும் ... தாமரை இதழ் போன்ற கண்களாலும்,

முல்லைநகையாலும் ... முல்லை அரும்பை நிகர்த்த பற்களாலும்,

அல்லல்பட ஆசைக் கடல் ஈயும் ... துயரத்தை அடையும்படி
ஆசையைக் கடல் போலத் தருபவர்களும்,

அள்ள இனிதாகி ... அள்ளி எடுக்கலாம் போல இனிதாக அமைந்து

நள்ளிரவு போலும் உள்ளவினையார் ... நடு இரவு போன்று
இருண்ட வினைகளை உடைய விலைமாதரும்,

அத் தனம் ஆரும் இல்லும் ... அந்தச் செல்வம் மிகுந்த வீடும்,

இளையோரு மெல்ல அயலாக ... மக்களாகிய இளைஞரும்,
அனைவருமே மெல்ல மெல்ல வேறாகும்படி,

வல்லெருமை மாயச் சமனாரும் ... வலிய எருமையை வாகனமாகக்
கொண்ட மாயக்கார யமனும்

எள்ளி யெனதாவி கொள்ளைகொளு நாளில் ... என்னை
இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த
நாளில்

உய்யவொரு நீபொற்கழல்தாராய் ... அடியேன் உய்யும் பொருட்டு
ஒப்பற்ற உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக.

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் ... பழமையான
வேதங்கள் தேடிப்பார்த்து காண முடியவில்லை என்று முறையிடுகின்ற
சிவபிரானுக்கு

சொல்லும் உபதேசக் குருநாதா ... உபதேச மொழியைச் சொல்லி
அருளிய குருநாதனே,

துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண ... துள்ளி ஓடி
விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி

எள்ளிவன மீதுற்று உறைவோனே ... அதனை இகழ்கிற வள்ளி
வாழும் வள்ளிமலைக் காட்டிற்கு வலியச் சென்று வாழ்கின்றவனே,

வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ ... வலிமையான அசுரர்கள்
மாளவும், நற்குணமுள்ள தேவர்கள் வாழவும்,

வல்லைவடி வேலைத் தொடுவோனே ... மிக விரைவாக கூரிய
வேலைச் செலுத்தியவனே,

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு ... வள்ளிக்கொடி
படர்ந்திருக்கின்ற, சாரலுடன் கூடிய வள்ளிமலையில்* எழுந்தருளியுள்ள

வள்ளிமண வாளப் பெருமாளே. ... வள்ளியின் மணவாளனே,
பெருமாளே.


* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.757  pg 1.758  pg 1.759  pg 1.760 
 WIKI_urai Song number: 313 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Kodumudi Thiru S. Thiyagaraja DhEsigar
'கொடுமுடி' திரு தியாகராஜ தேசிகர்

Kodumudi S. Thiyagaraja DhEsigar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

KarUr Thiru SAminAthan
'கரூர்' திரு சாமிநாதன்

KarUr' Thiru SAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 530 - alli vizhiyAlum (vaLLimalai)

allivizhi yAlu mullainagai yAlum
     allalpada Asaik ...... kadaleeyum

aLLavini dhAgi naLLiravu pOlum
     uLLavinai yArath ...... dhanamArum

illumiLai yOru mella ayalAga
     vallerumai mAya ...... samanArum

eLLiyena dhAvi koLLaikoLu nALil
     uyyavoru neepoR ...... kazhalthArAy

thollaimaRai thEdi illaiyenu nAthar
     sollumupa dhEsak ...... gurunAthA

thuLLiviLai yAdu puLLiyuzhai nANa
     veLLivana meedhutr ...... uRaivOnE

vallasurar mALa nallasurar vAzha
     vallaivadi vElaith ...... thoduvOnE

vaLLipadar sAral vaLLimalai mEvu
     vaLLimaNa vALap ...... perumALE.

......... Meaning .........

allivizhi yAlu mullainagai yAlum: With their lotus-like eyes, lovely rows of teeth like jasmine,

allalpada Asaik kadaleeyum: their ability to harass by throwing me into the deep sea of lust and,

aLLavini dhAgi: their sweet flexiblity in arms,

naLLiravu pOlum uLLavinai yAr: with their devious mind, dark as midnight, are these harlots!

ath dhanamArum illum: They, along with my house full of riches,

iLai yOru mella ayalAga: and all my young children are slowly getting alienated from me.

vallerumai mAya samanArum: Yaman (God of Death), the mystical one, mounted on the hefty buffalo,

eLLiyena dhAvi koLLaikoLu nALil: is jeering at me, ready to snatch my life away. On that day of my reckoning,

uyyavoru neepoR kazhalthArAy: You must give me Your matchless golden feet, for my salvation!

thollaimaRai thEdi illaiyenu nAthar: The Old Scriptures (VEdAs) searched for Him everywhere but in vain; and to that Lord SivA,

sollumupa dhEsak gurunAthA: You preached the essence of VEdAs, Oh Great Master!

thuLLiviLai yAdu puLLiyuzhai nANa eLLi: The deers jumping about playfully in VaLLimalai were all put to shame by her beauty;

vana meedhutr uRaivOnE: and You went to that VaLLi and stayed with her in the forest!

vallasurar mALa nallasurar vAzha: The strong demons were destroyed and the virtuous DEvAs were saved

vallaivadi vElaith thoduvOnE: when You forcefully threw Your Spear!

vaLLipadar sAral vaLLimalai: In the sides of the mountain, there are plenty of VaLLi creepers, and there is always a drizzle at Mount VaLLimalai*.

mEvu vaLLimaNa vALap perumALE.: You have chosen that hill as Your abode, along with Your consort, VaLLi, Oh Great One!


* VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam.
This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 530 alli vizhiyAlum - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]