திருப்புகழ் 518 தேனுந்து முக்கனிகள்  (கயிலைமலை)
Thiruppugazh 518 thEnundhumukkanigaL  (kayilaimalai)
Thiruppugazh - 518 thEnundhumukkanigaL - kayilaimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானந் தனத்ததன தானந் தனத்ததன
     தானந் தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
     சீரும் பழித்தசிவ ...... மருளூறத்

தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
     சீவன் சிவச்சொருப ...... மெனதேறி

நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
     நாதம் பரப்பிரம ...... வொளிமீதே

ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
     நாளுங் களிக்கபத ...... மருள்வாயே

வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
     மாலும் பிழைக்கஅலை ...... விடமாள

வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
     மானின் கரத்தனருள் ...... முருகோனே

தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
     தானுண் கடப்பமல ...... ரணிமார்பா

தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
     சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தேன் உந்து முக்கனிகள் ... நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,
பலா, வாழை)

பால்செங் கருப்பிளனிர் ... பால், சிவந்த கரும்பு, இள நீர்

சீரும் ... இவைகளின் இனிப்பின் சிறப்பையும்

பழித்த ... (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)
தாழ்மைப்படுத்துகின்ற

சிவம் அருள் ஊற ... மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்
பெருகவும்,

தீதும் பிடித்தவினை யேதும் ... தீவினை, நல்வினை முழுவதும்

பொடித்துவிழு ... தூள்பட்டு ஒழியவும்,

சீவன் சிவச்சொருபம் ... இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது

என தேறி ... என்று நன்கு தெளிந்து,

நானென்ப தற்று ... அகங்காரத்தை அடியோடு நீத்தும்,

உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று ... உயிர்ப்பற்று, உடற்பற்று
இரண்டையும் அகற்றியும்,

வெளிநாதம் பரப்பிரம ... (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள
அருள்நாதப் பிரம்மமாம்

ஒளிமீதே ... பரஞ்ஜோதியில்

ஞானம் சுரப்ப ... சிவ ஞானம் பெருகிவரவும்,

மகிழ் ஆனந்த சித்தியொடு ... மகிழ்ச்சி ஊறும் சிவானந்த
மோட்சத்தில்,

எநாளும் களிக்க ... அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு

பதம் அருள்வாயே ... நின் திருவடியைத் தந்தருள்வாயாக

வானம் தழைக்க ... விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும்,

அடியேனும் செழிக்க ... அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன்
பொருட்டும்,

அயன் மாலும் பிழைக்க ... பிரம்மாவும், திருமாலும் (சூரனால்
அழியாது) வாழும் பொருட்டும்,

அலை விட(ம்) மாள ... பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை
அழிய

வாருங் கரத்தன் ... (அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை
உடையவரும்,

எமை யாளும் தகப்பன் ... எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும்,

மழு மானின் கரத்தன் ... நெருப்பையும், மானையும் ஏந்திய
திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான்

அருள் முருகோனே ... பெற்றருளிய முருகக் கடவுளே

தானந் தனத்ததனனா ... தானந் தனத்ததனனா என்ற
ரீங்காரத்துடன்

வண்டு சுற்றி ... வண்டானது வட்டமிட்டு

மது தானுண் ... தேனை உண்ணுகின்ற

கடப்பமலர் ... கடப்ப மலரை

அணிமார்பா ... தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே

தானங் குறித்து ... (எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து

எமை யாளும் ... எங்களை ஆட்கொள்ளவென்றே

திருக்கயிலை சாலும் ... திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய,

குறத்திமகிழ் பெருமாளே. ... வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.571  pg 1.572  pg 1.573  pg 1.574 
 WIKI_urai Song number: 239 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 518 - thEnundhu mukkanigaL (mt. kayilash)

thEnundhu mukkanigaL pAlseng karuppiLanir
     seerum pazhiththasivam ...... aruLURath

theedhum pidiththavinai yEdhum podiththuvizha
     jeevan sivasorupam ...... enathERi

nAnenba dhatruyirod Unenba dhatru veLi
     nAdham parabbirama ...... oLimeedhE

nyanam surappa magizh Anandha siddhiyode
     nALum kaLikkapadham ...... aruLvAyE

vAnam thazhaikka adi yEnum sezhikka ayan
     mAlum pizhaikka alai ...... vidamALa

vArung karaththan emai yALum thagappan mazhu
     mAnin karaththan aruL ...... murugOnE

dhAnan thanaththathana nAvaNdu sutri madhu
     thAnuN kadappamalar ...... aNimArbA

thAnang kuRiththu emai yALum thirukkayilai
     sAlung kuRaththimagizh ...... perumALE.

......... Meaning .........

thEnundhu mukkanigaL: Honey, three great fruits (mango, plantain and jack fruit),

pAlseng karuppiLanir: milk, reddish sugarcane and coconut water -

seerum: the sweetness of these things

pazhiththasivam: is surpassed by Sivam;

aruLURa: that Sivam's Grace has to sprout copiously inside me.

theedhum pidiththavinai yEdhum: All karmas due to bad deeds and good deeds

podiththuvizha: will be shattered into pieces.

jeevan sivasorupam enathERi: I shall realize that this Soul is nothing but SivA's form.

nAnenba dhatru: My ego will be completely destroyed

uyirod Unenba dhatru: and my attachment to life and body will be gone;

veLi nAdham parabbirama: in the milky way of my mind, I shall hear the tune of Brahmam (Omniscience) and

oLimeedhE nyanam surappa: in that bright light, Knowledge of Sivam will fill within me like a fountain.

magizh Anandha siddhiyode: In that happy sense of attainment,

nALum kaLikka: I should spend every day in eternal bliss;

padham aruLvAyE: for that, You must grant me Your Holy Feet!

vAnam thazhaikka: To save the DEvAs in the Skies,

adi yEnum sezhikka: to let this poor soul flourish,

ayan mAlum pizhaikka: and to let BrahmA and Vishnu survive (the ferocious attack of Suran),

alai vidamALa: (SivA decided) to lessen the effect of the poison that came from the milky sea;

vArung karaththan: His hands picked up all that poison.*

emai yALum thagappan: He is the protecting Father of all of us.

mazhu mAnin karaththan: He holds Fire and a deer in His hands.**

aruL murugOnE: That Sivan gracefully gave You to us, Oh MurugA!

dhAnan thanaththathana nA: In the tune of "dhAnan thanaththathana nA"

vaNdu sutri madhu thAnuN: beetles go around humming and suck the honey in

kadappamalar aNimArbA: the rich kadappa flower (in the garland) adorning Your chest!

thAnang kuRiththu: You chose the right place to protect us

emaiyALum thirukkayilai sAlun: and reached Thirukkayilai to rule over us.

kuRaththimagizh perumALE.: You, the happy consort of that KuRaththi VaLLi, Oh Great One!


* During Deva-Asura tug of war over the milky ocean to churn out the Divine Nectar, Amrutha, first the most venomous poison, AlakAla, came. To save everyone, SivA decided to gather all the poison Himself and gulped it. PArvathi held His throat lest the poison reached inside SivA, and the blue scar in His throat earned SivA the name Neelakantan 'Blue throated'.


** In Tarukavanam, certain rishis who could not stand the superiority of Sivan, performed an evil sacrifice (Abhichara Yagnam), and sent out Fire and Wild Deer to destroy Sivan. He tamed them by holding in his hands - see the hands of NadarAjA form of Sivan for the Fire and Deer.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 518 thEnundhu mukkanigaL - kayilaimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]