திருப்புகழ் 507 நீலக் குழலார்  (சிதம்பரம்)
Thiruppugazh 507 neelakkuzhalAr  (chidhambaram)
Thiruppugazh - 507 neelakkuzhalAr - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
     தானத்தன தானத்தன ...... தனதான

......... பாடல் .........

நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
     நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர்

நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
     நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள்

ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
     யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ

ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
     மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே

மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
     மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார

வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
     மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர்

சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
     சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே

சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
     சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நீலக் குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் ... கரிய
கூந்தலை உடையவர்கள், முத்துப்போன்ற பல் வரிசை உள்ள வாயில்
சர்க்கரையைப் போன்று இனிய பேச்சை உடையவர்கள்,

தைப்பிறை நீளச் சசியார் பொட்டு அணி நுதல் மாதர் ... பூரண
சந்திரன் போன்ற திலகத்தை அணிந்துள்ள நெற்றியை உடைய
விலைமாதர்கள்,

நீலக் கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் ... கரிய கயல் மீன்
போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை
உடையவர்கள்,

நற் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் ... நல்ல திறமை உள்ள
சித்திரம் எழுதுவோன் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம்
நிறைந்தவர்கள்,

தோள் ஆலைக் கழையார் துத்தி கொள் ஆரக் குவடார் ...
தோள்கள் கரும்பு ஆலையில் உள்ள கரும்பு போல் மென்மையாக
உடையவர்கள், தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற
மார்பகங்களை உடையவர்கள் ..

கட்டளையாகத் தமியேன் நித்தமும் உழல்வேனோ ... இத்தகைய
விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேனாகிய
நான் தினந்தோறும் திரிந்து அலைவேனோ?

ஆசைப்பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாகக்
கொளவே முத்தியை அருள்வாயே
... ஆசையுடன் உனது
திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப்
பெறவே முக்தியை அளித்தருளுக.

மாலைக் குழலாள் அற்புத வேதச் சொருபாள் ... பூ மாலை
அணிந்துள்ள கூந்தலை உடையவள், அற்புதமான வேதச் சொரூபத்தை
உடையவள்,

அக்கினி மார்பில் பிரகாசக் கிரி தனபார வாசக் குயிலாள் ...
தனது அக்கினி உருவத்தில் ஒளி பொருந்திய மலை போன்ற பார
மார்பகங்களைக் கொண்டவள், குயில் போன்றவள்,

நல் சிவகாமச் செயலாள் பத்தினி மாணிக்க மி(ன்)னாள்
நிஷ்கள உமை பாகர்
... சிவபெருமானிடத்தில் காதல் நிறைந்த நல்ல
செயலினாளுமான உத்தமி, மாணிக்கம் போன்ற மின்னொளி வீசுபவள்,
மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர்,

சூலக் கையினார் அக்கினி மேனிப் பரனாருக்கு ... சூலத்தைக்
கையில் கொண்டவர், அனல் மேனிப் பரமனார் ஆகிய சிவபெருமானுக்கு

ஒரு சோதிப் பொருள் கேள்விக்கு இடு முருகோனே ... ஒப்பற்ற
ஜோதிப் பொருளான பிரணவத்தை அவர் செவியில் ஏற்றிய முருகனே,

சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர் ...
பிரகாசமான ஜோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான்
போன்ற வள்ளியை அணைந்து,

சோதிப் புலியூர் நத்திய பெருமாளே. ... ஜோதிமயமான
புலியூராகிய சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.521  pg 2.522  pg 2.523  pg 2.524 
 WIKI_urai Song number: 648 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 507 - neelak kuzhalAr (chidhambaram)

neelakkuzha lArmuththaNi vAysarkkarai yArthaippiRai
     neeLacscasi yArpottaNi ...... nuthalmAthar

neelakkaya lArpaththira vEloppidu vArnaRkaNi
     nEmiththezhu thAsiththira ...... vadivArthOL

Alaikkazhai yArthuththiko LArakkuva dArkattaLai
     yAkaththami yEniththamu ...... muzhalvEnO

Asaippatha mElpuththimey njAnaththuda nEpaththira
     mAkakkoLa vEmuththiyai ...... yaruLvAyE

mAlaikkuzha lALaRputha vEthaccoru pALakkini
     mArpiRpira kAsakkiri ...... thanapAra

vAsakkuyi lALnaRciva kAmaccheya lALpaththini
     mANikkami nALnishkaLa ...... umaipAkar

cUlakkaiyi nArakkini mEnippara nArukkoru
     sOthipporuL kELvikkidu ...... murukOnE

sOthippira kAsaccheya lALmuththamizh mAnaippuNar
     sOthippuli yUrnaththiya ...... perumALE.

......... Meaning .........

neelak kuzhalAr muththu aNi vAy sarkkaraiyAr: They have dark hair; their mouth has a neat row of pearl-like teeth and their speech is sweet like sugar;

thaippiRai neeLac casiyAr pottu aNi nuthal mAthar: the vermilion on the forehead of these whores is like the full moon;

neelak kayalAr paththira vEl oppiduvAr: Their eyes are comparable to the dark kayal fish, to the sword and the spear;

naR kaNi nEmiththu ezhuthA siththira vadivAr: their lovely figure is beyond the imagination of even the best painter;

thOL Alaik kazhaiyAr thuththi koL Arak kuvadAr: their soft shoulders are like the sugarcanes in the mills; their hill-like bosom show decolorised spots and display pearl necklaces;

kattaLaiyAkath thamiyEn niththamum uzhalvEnO: do I have to run errands for these whores daily and roam around aimlessly?

Asaippatham mEl puththi mey njAnaththudanE paththiramAkak koLavE muththiyai aruLvAyE: Kindly grant me the intellect to willingly worship Your hallowed feet so that I could be liberated after deriving the benefit of true knowledge!

mAlaik kuzhalAL aRputha vEthas sorupAL: She wears garlands on Her hair; She has the wonderful form of the VEdAs;

akkini mArpil pirakAsak kiri thanapAra vAsak kuyilAL: on Her fiery and effulgent figure, She has bright hill-like bosom; She is like the cuckoo;

nal sivakAmac cheyalAL paththini mANikka mi(n)nAL nishkaLa umai pAkar: She is virtuous, full of love for Her consort Lord SivA; She radiates ruby-like lightning rays; She is the immaculate Goddess UmAdEvi, concorporate with the body of Lord SivA;

cUlak kaiyinAr akkini mEnip paranArukku: He holds the trident in His hand; His complexion is like fire; to that Supreme Lord SivA,

oru sOthip poruL kELvikku idu murukOnE: You preached the meaning of the matchless and bright PraNava ManthrA right into His ear, Oh MurugA!

sOthip pirakAsac cheyalAL muththamizh mAnaip puNar: You wedded the damsel with the figure of a dazzling light, deer-like VaLLi, who is well-versed in the three branches of Tamil!

sOthip puliyUr naththiya perumALE.: You are seated with relish in this effulgent town, PuliyUr (Chidhambaram), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 507 neelak kuzhalAr - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]