திருப்புகழ் 504 துத்தி பொற்றன  (சிதம்பரம்)
Thiruppugazh 504 thuththipotRana  (chidhambaram)
Thiruppugazh - 504 thuththipotRana - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தத்தன தான தானன
     தத்த தத்தன தான தானன
          தத்த தத்தன தான தானன ...... தனதான

......... பாடல் .........

துத்தி பொற்றன மேரு வாமென
     வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
          துப்பு முத்தொடு மார்பி னாடிட ...... மயில்போலே

சுக்கை மைக்குழ லாட நூலிடை
     பட்டு விட்டவிர் காம னாரல்குல்
          சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர்

தத்தை பட்குர லோசை நூபுர
     மொத்த நட்டமொ டாடி மார்முலை
          சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே

தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
     கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
          சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ

தித்தி மித்திமி தீத தோதக
     தத்த னத்தன தான தீதிமி
          திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச்

சித்ர வித்தைய ராட வானவர்
     பொற்பு விட்டிடு சேசெ சேயென
          செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா

செத்தி டச்சம னார்க டாபட
     அற்று தைத்தசு வாமி யாரிட
          சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே

தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
     விட்ட அச்சுத ரீன மானொடு
          சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இபத் திரள்
வாகுவாய் அவிர் துப்பு முத்தோடு மார்பின் ஆடிட
... தேமல்
படர்ந்த அழகிய மார்பகங்கள் மேரு மலைக்கு ஒத்ததாகி, யானைக்
கூட்டங்களின் வெற்றி கொண்டதாகி விளங்கும் பவள (மாலை) முத்து
(மாலை) இவைகளோடு மார்பிலே ஆட,

மயில் போலே சுக்கை மைக் குழல் ஆட நூல் இடை
பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் சுற்றுவித்து உறு வாழை
சேர் தொடை விலை மாதர்
... மயிலைப் போல் விளங்கி, பூ மாலை
அணிந்த கரிய கூந்தல் அசைய, நூலைப் போன்ற நுண்ணிய இடையில்
பட்டாடை அணிந்து ஒளி விட, காமனுக்கு இடமாகிய பெண்குறியைச்
சுற்றி அமைய உடுத்து, விளங்கும் வாழை போன்ற தொடைகளை உடைய
பொது மகளிர்,

தத்தை புட் குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார்
முலை சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே
...
கிளியாகிய பறவையின் குரலோசைக்குப் பொருந்த சிலம்புகள் ஒத்து
ஒலிக்க நடனம் ஆடி, மார்பகங்களை கொஞ்சம் அசைத்து குலவிப் பேசும்
பொது மகளிருடன்,

தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள்
ஊளை நாய் என சிச்சி சிச்சி என நால்வர் கூறிட
உழல்வேனோ
... தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில
காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால்
அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு
பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ?

தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி திக்கு
முக்கிட மூரி பேரிகை தவில் போட
... தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி இவ்வாறான ஒலிகள் எல்லா திசைகளிலும்
முக்கித் திணற, வலியுள்ள பேரிகை, தவில் ஆகியவை ஒலி எழுப்ப,

சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பூ இட்டு இ(ட்)டு சே
செ சே என செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட விடும்
வேலா
... அழகிய வித்தைகள் வல்லோர் (மனம் மகிழ்ச்சி கொண்டு) ஆட,
தேவர்கள் அழகிய பொன்னாலாகிய மலர்களைச் சொரிந்து ஜய ஜய ஜய
என்று கோஷமிட, செக்கில் போட்டு அசுரர்கள் பொடியாகும்படி
செலுத்திய வேலாயுதனே,

அச்சமனார் செத்திட கடா பட அற்று உதைத்த சுவாமியார்
இட சித்திரச் சிவகாமியார் அருள் முருகோனே
... அந்த யமன்
இறக்கவும், (அவனுடைய) எருமைக் கடா வீழ்ந்து அழியவும், அன்று
காலால் உதைத்த சுவாமியாகிய சிவபெருமானின் இடது பாகத்தில்
உறையும் அழகிய சிவகாமி அம்மையார் ஈன்ற குழந்தையே,

தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன
மானோடு சித்திரப் புலியூரில் மேவிய பெருமாளே.
... தெற்கே
உள்ள ராவணன் முதலிய அரக்கர்கள் இருந்த இலங்கைத் தீவு
பொடியாகிப் பாழ்படச் செய்த திருமால் பெற்ற மகளாகிய மான் போன்ற
வள்ளியோடு அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.513  pg 2.514  pg 2.515  pg 2.516 
 WIKI_urai Song number: 645 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 504 - thuththi potRana (chidhambaram)

thuththi potRana mEru vAmena
     voththi paththiraL vAku vAyavir
          thuppu muththodu mArpi nAdida ...... mayilpOlE

sukkai maikkuzha lAda nUlidai
     pattu vittavir kAma nAralkul
          sutRu viththuRu vAzhai sErthodai ...... vilaimAthar

thaththai patkura lOsai nUpura
     moththa nattamo dAdi mArmulai
          satRa saiththuku lAvum vEsiya ...... ravarOdE

tharkka mittuRa vAdi yeeLainoy
     kakkal vikkalko LULai nAyena
          chicchi chicchiye nAlvar kURida ...... vuzhalvEnO

thiththi miththimi theetha thOthaka
     thaththa naththana thAna theethimi
          thikku mukkida mUri pErikai ...... thavilpOdac

chithra viththaiya rAda vAnavar
     poRpu vittidu sEse sEyena
          chekku vittasu rOrkaL thULpada ...... vidumvElA

cheththi dacchama nArka dApada
     atRu thaiththasu vAmi yArida
          siththi racchiva kAmi yAraruL ...... murukOnE

theRka rakkarkaL theevu neeRida
     vitta acchutha reena mAnodu
          siththi rappuli yUril mEviya ...... perumALE.

......... Meaning .........

thuththi pon thanam mEruvAm ena oththu ipath thiraL vAkuvAy avir thuppu muththOdu mArpin Adida: Their beautiful bosom affected by yellow decolorisation looks like Mount MEru; their breasts prominent like the proclamation of triumph by a herd of elephants are adorned with elegant strings of coral and pearl, dancing about upon their chest;

mayil pOlE sukkai maik kuzhal Ada nUl idai pattuvittu avir kAmanAr alkul sutRuviththu uRu vAzhai sEr thodai vilai mAthar: these whores look like peacock, swinging their dark hair adorned with garland of flowers; the silky attire wrapped around their thread-like slender waist dazzles and covers elegantly their genitals, being the seat of the Lord of Love (Manmathan); their thighs resemble the stems of plantain tree;

thaththai put kural Osai nUpuram oththa nattamodu Adi mAr mulai satRu asaiththu kulAvum vEsiyar avarOdE: their anklets make a jingling sound like the parrot, and they dance to that sound; these whores shake their bosom slightly with a finesse and flirtation;

tharkkam ittu uRavAdi eeLai nOy kakkal vikkal koL ULai nAy ena sicchi sicchi ena nAlvar kURida uzhalvEnO: picking up arguments with them and trifling with them in a liaison, (after some time) I become infected with diseases like phlegm, vomiting and hick-up and suffer a whining dog's miserable life; should I roam about as a laughing stock in the society, with people ridiculing me out of disgust?

thiththi miththimi theetha thOthaka thaththa naththana thAna theethimi thikku mukkida mUri pErikai thavil pOda: To the meter "thiththi miththimi theetha thOthaka thaththa naththana thAna theethim" sounds were heard in all directions at choking decibels as the powerful drums and percussion instruments were beaten loudly;

chithra viththaiyar Ada vAnavar pon pU ittu i(t)tu sE se sE ena chekkuvittu asurOrkaL thULpada vidum vElA: people talented in nice acrobatic skills danced with delight; the celestials sprinkled beautiful golden flowers screaming "Jeya, Jeya, Jeya (Victory, Victory, Victory)", and the demons were all crushed as though they were squeezed in an oil-press and were shattered to pieces as You wielded Your spear, Oh Lord!

acchamanAr cheththida kadA pada atRu uthaiththa suvAmiyAr ida siththirac chivakAmiyAr aruL murukOnE: That God of Death (Yaman) died and so did his vehicle, the wild buffalo, when Lord SivA kicked them with His foot the other day; concorporate on the left side of that Lord is Mother SivagAmi (PArvathi) who delivered You as Her child!

theRku arakkarkaL theevu neeRu ida vitta acchuthar eena mAnOdu siththirap puliyUril mEviya perumALE.: LankA, the island in the South where RAvaNan and other demons lived, was smashed to smithereens by Lord VishNu; with His daughter, the deer-like damsel, VaLLi, You are seated in this beautiful town PuliyUr (Chidhambaram), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 504 thuththi potRana - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]